முள்ளங்கி முருங்கை சாம்பார்

தேதி: November 6, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முள்ளங்கி - கால்கிலோ
முருங்கைக்காய் - இரண்டு
துவரம்பருப்பு - ஒரு கோப்பை
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
சீரகம் - அரைதேக்கரண்டி
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சையளவு
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி


 

துவரம்பருப்பை இலேசாக கழுவி சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூளை சேர்த்து இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.
முள்ளங்கியை நன்கு கழுவி வட்டமாகவோ, அரைவட்டமாகவோ நறுக்கி வெறும் சட்டியில் போட்டு நன்கு வதக்கி வைக்கவும்.
முருங்கைக்காயை வேண்டிய அளவுக்கு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தில் ஒரு மேசைக்கரண்டி பொடியாக தாளிப்பதற்கும், மீதியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
புளியை நன்கு நீர்க்க கரைத்து கொள்ளவும்.
குழம்பை கூட்டும் சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி வெங்காயம், தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
தொடர்ந்து மிளகாய்தூள், தனியாத்தூளைப் போட்டு வதக்கி உப்பில் பாதியைப் போட்டு புளிக்கரைசலை ஊற்றி நன்கு கலக்கவும்.
அதில் முருங்கைக்காயை முதலில் போட்டு வேகவைக்கவும். காய் நன்கு வெந்தவுடன் முள்ளங்கியைப் போட்டு வெந்த பருப்பையும், மீதியுள்ள உப்புத்தூளைக் கொட்டி, கொத்தமல்லியை போட்டு ஒரு கோப்பை தண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து குழம்பு பதம் வந்தவுடன் ஒரு சிறிய சட்டியில் மீதியுள்ள எண்ணெயை காயவைத்து தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து குழம்பின் மீது கொட்டி சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று உங்கள் சாம்பார்தான் எங்கள் வீட்டில். முள்ளங்கி என்னிடம் இல்லாததால் முருங்கைக்காய் மட்டும் போட்டு இந்த சாம்பார் செய்தேன். கமகம, சுவைமிகு சாம்பார் நன்றாக இருந்தது. குறிப்புக்கு நன்றி!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

டியர் ஸ்ரீ இந்த சாம்பார் செய்து பாராட்டியது மனதுக்கு சுகமாய் இருந்தது நன்றி. இன்னொரு முறை இரண்டையும் சேர்த்து செய்துப் பாருங்க ஏனெனில் இந்த சாம்பாரின் ஸ்பெஷாலிட்டியே இந்த இரண்டு காய்களின் காம்பினேஷனின் சுவைத்தான் சரீங்களா. தங்களின் பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி.

முள்ளங்கி முருங்கை சாம்பார்
இன்று காலை செய்தேன் இட்லியுடன் ரொம்ப நல்லா இருந்தது.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..