தீபாவளியை வரவேற்கலாம் வாங்க

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கு நம்ம தோழிகள் தோழர்கள் எல்லாம் எந்த அளவுக்கு ரெடியாகி இருக்கீங்க. டிரெஸ் எடுத்தாச்சா, ஸ்வீட்ஸ்லாம் செய்ய ஆரம்பிச்சாச்சா, எந்த மாதிரி ப்ரீப்ளானோட இருக்கீங்க, இந்த வருடம் எந்த மாடல் டிரெஸ் தீபாவளி ஸ்பெஷலா இருக்கு , என்ன் ஸ்வீட்லாம் செய்ய போறீங்க. எவ்வளவு பாதுக்காப்பா இருக்கனும் வெடிக்கும் போதும், ஸ்வீட்ஸ் செய்யும் போதும் அப்படினுலாம் பேசலாம் வாங்களேன்
இந்த தீபாவளிய நம்ம அறுசுவைல இருந்து கொண்டாட ஆரம்பிக்கலாம்.

அக்கா நான் ரெடி, ட்ரெஸ் எடுத்துட்டேன், இந்த வருடம் காட்டன் மசகளி தான் பேமஸா இருக்கு நானும் அதான் எடுத்தேன், சேரி யும் எடுத்தேன்.
நீங்க எடுத்தீட்டீங்களா அக்கா? என்னா ஸ்வீட் அக்கா

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஹாய் சுபி நலமா? ஆமாம் காட்டன் அம்ரல்லா தான் வந்திருக்கு நானும் அதான் ஒன்னு எடுத்தேன் அப்பறம் 2 சாரீஸ் ஒரு காட்டன் ஒரு டிசைனர்.
ஸ்வீட்ஸ் பாசிபயறு உருண்டை, முறுக்கு, தட்டை, ரிப்பன் பகோடா, குலாப் ஜாமூன் இது தான் வழக்கமா செய்றது, இந்த முறை வேற ஏதாவது செய்யலாமேன்னு யோசிச்சுட்டு இருக்கேன் தீபாவளிகுள்ள யோசுச்சு செய்து பார்க்கனும் சொதப்புதா இல்ல ஓகேவான்னு.
சுபி நீங்க என்னலாம் பலகாரம் செய்வீங்க

ஹாய் அக்கா,

நான் உள்ள வரலாமா ! அனைவரும் நல்லமா,

வரலாமான்னு கேட்கவே வேண்டாம் வந்துடலாம், வரவேற்கிறோம். உங்க வீட்டு தீபாவளி பற்றி சொல்லுங்களேன் சவிதா

ஹாய் தேவி அக்கா,
வத்துடேன், ச்வீட் இல்லாய!
இன்னும் ஒன் வீக் தான் இருக்கு தீபாவளிக்கு,.

நான் ஒரு சரி, ஒரு நார்மல் சுடி, அப்புறம் எதவது ஸ்வீட்ஸ் செய்யணும்.

மேலும் சில பதிவுகள்