மிளகுசீரக குழம்பு

தேதி: November 7, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம்பருப்பு - கால் கப்
முருங்கைக்கீரை - ஒரு கப் (உருவியது)
தக்காளி - ஒன்று
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 2 பல்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்துக் கொள்ளவும் :
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
அரிசி - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - 3
சீரகம் - சிறிது
நெய் - 2 தேக்கரண்டி


 

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை வறுத்துக் கொள்ளவும்.
வறுத்தவை ஆறிய பின் தேங்காய் துருவல், சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதி வந்த பின் முருங்கை இலையை போட்டு வேகவிடவும்.
அவை வெந்த பின் வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், தக்காளி போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும்.
பின் அரைத்த விழுது, உப்பு போட்டு 4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பின் தாளிக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை நெய்யில் தாளித்து குழம்பில் கொட்டி இறக்கவும்.


இதை சூடான சாதத்தோடு சேனை பொரியல் அல்லது வெண்டைக்காய் பொரியல் மற்றும் பொரித்த கூழ் வற்றல் வைத்து பரிமாறவும். உப்பை தேங்காய் விழுது போடும் போது தான் போடவும். முருங்கைக்கீரைக்கு பதில் முருங்கைக்காய், கத்தரிக்காய் உபயோகப்படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்