புடலங்காய் ஆப்பிள் சாலட்

தேதி: October 30, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

புடலங்காய் - ஒரு துண்டு (200 கிராம்)
ஆப்பிள் - ஒன்று
கேரட் - 2
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை சாறு - புளிப்பிற்கேற்ப
மிளகுத் தூள் - காரத்திற்கேற்ப
உப்பு - தேவையான அளவு

கேரட்டைத் துருவிக் கொள்ளவும். புடலங்காயை தோல் சீவி மெல்லிய அரை வட்ட வில்லைகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை நீளமாகவும், பச்சை மிளகாயை விதை நீக்கி நீளமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
ஆப்பிளை நீளமான துண்டுகளாக நறுக்கி கருத்துவிடாமலிருக்க சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு அகலமான பவுலில் நறுக்கிய அனைத்தையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
பரிமாறுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு உப்பு, மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
டேஸ்டி புடலங்காய் ஆப்பிள் சாலட் ரெடி.

மிகவும் சுவையான சாலட் இது. பார்ட்டிகளுக்கு ஸ்டாட்டராக வைப்பதற்கு ஏற்றது. புடலங்காயை வேகவைத்து சாப்பிடுவதைவிட இப்படி சாப்பிடுவதால் அதன் சத்து முழுமையாக உடலில் சேரும். க்ரீன் ஆப்பிள் சேர்த்து செய்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

புடலங்காய் ஆப்பிள் சாலட் பெயர் புதுமையா இருக்குங் :-) ரொம்ப நல்லா இருக்குங்க அக்காங் :-)

நட்புடன்
குணா

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றிங் தம்பிங். தீபாவளி எப்டிங்?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

தீபாவளி ரொம்ப நன்றாக போனதுங் அக்காங் :-) உங்களுக்கு?

நட்புடன்
குணா

எங்களுக்கு கிறிஸ்மஸ்தாங்க விசேஷம். ஆனாலும் தீபாவளியும் விசேஷமாதான் இருந்ததுங்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

தீபாவளி இந்த வருடம் ரொம்ப நல்லா இருந்துச்சுங்க, பல வாழ்த்துக்கள், பலவகை இனிப்புகளும், பிரியாணிகளும்.. ரொம்ப சூப்பரா இருந்துச்சுங் அக்காங் :-)
சரிங் அக்காங், கிறிஸ்துமஸ்க்கு கேக் அனுப்புங்க :-)

நட்புடன்
குணா

கண்டிப்பா தம்பி உங்களுக்கு இல்லாமலா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

:-) ஹிஹி டேங்க்ஸ்ங் அக்காங்

நட்புடன்
குணா