வற்றல் குழம்பு

தேவையான பொருட்கள்:

புளி - எலுமிச்சை பழ அளவு
மிளகாய் வற்றல் - 2
கத்தறி வற்றல் - 10
மணத்தக்காளி வற்றல் - 1 கைப் பிடி
பூண்டு - 10 பல்
வெந்தயம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்

அரைக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1/4 மூடி
பூண்டு - 5 பல்
மிளகு - 20
சீரகம் - 2 ஸ்பூன்

செய்முறை:
1. புளி கரைசலை கரைத்து எடுத்துக் கொள்ளவும் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
2. தேங்காய் துருவல், பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை நன்கு வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
3. கடாயில் நல்லெண்ணை அல்லது ஆயில் ஊற்றி வெந்தயம்,மிளகாய் வற்றல், கத்தறி வற்றல், மணத்தக்காளி வற்றல், பூண்டு ஆகியவற்றை கழுவி கடாயில் போட்டு நன்கு வதக்கவும். பிறகு கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி மூடவும்.
4. குழம்பு நன்கு கொதித்தவுடன் அரைத்த மசலாவை கொட்டி நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். சிறிய அளவு வெல்லம் சேர்த்துக் கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்

சுவையான வற்றல் குழம்பு தயார்... (இதில் உங்களுக்கு பிடித்த வற்றலை சேர்த்துக் கொள்ளலாம்

//புலி கரைசலை// திருத்திவிடுங்க துர்கா தேவி.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்