தேதி: November 13, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வஞ்சிரம் மீன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு / வெந்தயம் - கால் தேக்கரண்டி (தாளிக்க)
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகு - 2 தேக்கரண்டி
உப்பு
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - சிறிது
பெருங்காயம் - சிறிது
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தேங்காய் பால் - அரை கப்
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கிய வெங்காயக் கலவையுடன் தக்காளியை அரைத்துச் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் பெருங்காயம், சாம்பார் பொடி (அல்லது மிளகாய், தனியா தூள் 1:2 அளவில் கலந்தது), மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.

பிறகு தேவைக்கேற்ப நீர் ஊற்றி மசாலா வாசம் போகக் கொதிக்கவிட்டு, புளி கரைசல் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.

அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

பிறகு மீனைச் சேர்த்து மூடி வேகவிட்டு கடைசியாக தேவைக்கேற்ப ஃப்ரெஷ்ஷாக பொடித்த மிளகு தூள் மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். (விரும்பினால் மிளகு தூள் சேர்க்கலாம். சேர்க்காமலும் செய்யலாம்).

சுவையான பூண்டு மீன் குழம்பு தயார்.

Comments
Vani akka
சூப்பர் மீன் குழம்பு., வாழ்த்துக்கள்...
pakkave super ah iruku, nanum
pakkave super ah iruku, nanum try pannu ren.
Thulasi Kavi
s Thulasi Kavi good cmt nice
வனி
சூப்பரா இருக்குங்க.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
வனி
சூப்பர் மீன் குழம்பு வனி.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சசி
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
துளசி கவி
மிக்க நன்றி :) ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
முசி
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
உமா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
வனி சமயா இருக்கு மீன் குழம்பு பார்சல் அனுப்பிடுங்கோ எனக்கு ஏன்னா எனக்கு மீன் சமைக்க தெரியாது :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுவா
ஆ!! நண்டெல்லாம் சமைப்பீங்களே... மீன் செய்ய மாட்டீங்களா!!! புது தகவல் எனக்கு :) பார்சல் அனுப்பிடுவோம் சுவா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
வனி மீன் குழம்பு இப்பதான் வெச்சேன். ஒரே மணமா இருக்கு :) முதன்முறையா ட்ரை பண்ணியது நல்லா வந்திருக்கு :) மிக்க நன்றி வனி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள்
மீன் குழம்பு நல்லா வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி :) எங்க ஆளையே காணோம்? சீக்கிரம் வாங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா