வாழைப்பழ போண்டா

தேதி: November 16, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

பழுத்த வாழைப்பழம் - ஒன்று (பெரியது)
சீனி - 4 தேக்கரண்டி
மைதா - ஒரு கப்
ரவை - ஒரு மேசைக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க


 

வாழைப்பழத்தை தோலுரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் மைதா, ரவை, கார்ன் ஃப்ளார், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். (ரவை மற்றும் கார்ன் ஃப்ளார் சேர்ப்பதால் இது அதிகமாக எண்ணெய் குடிக்காது).
எளிதில் செய்யக் கூடிய சுவையான வாழைப்பழ போண்டா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இனிமையான, எளிமையான குறிப்பு.. வாழ்த்துக்கள்.. :-)

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

வாழைப்பழ போண்டா சூப்பர் அக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாழைப்பழ போண்டா சூப்பர் அக்கா. சாரி இரண்டு முறை பதிவாயிடுச்சு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முசி வாழைப்பழ போண்டா மிக அருமை :)
வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முசி ஈசி & டேஸ்டி போண்டா சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுலபமான சுவையான குறிப்பு...

வாழ்த்துக்கள்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

I try this today it comes very nice thanks nice snack

குறிப்பை வெளியிட்ட அட்மின் & குழுவினருக்கு நன்றி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிடும் உங்க அன்பிர்க்கு நன்றி,ஷபி.
ரொம்ப நன்றி,உமா.
பதிவிர்க்கு ரொம்ப நன்றி;அருள்.
நன்றி,சுவர்ணா.
வாழ்த்திர்க்கு மிக்க நன்றி;பிரேமா.
செய்து பார்த்து பதிவிட்டமைக்கு,மிக்க நன்றி.பர்ஜானா கலம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழை பழ போண்டா சூப்பர்,நான் குழிப்பணியார சட்டியில் ஊற்றினேன்
நன்றி

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு,மிக்க நன்றி.நீங்க‌ சொல்லி தான் பார்த்தேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.