12 தங்க நாணயங்கள் உள்ளன
அதில் ஒரு நாணயம் மட்டும் போலி நாணயம். போலி நாணயம் மற்ற நாணயங்களை விட எடை குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்கும். ஆனால் மற்ற 11 நாணயங்களும் சமமான எடையில் இருக்கும்
இப்போது போலி நாணயத்தை மட்டும் மிக சரியாக கண்டுபிடிக்க வேண்டும்
ஒரே ஒரு தராசு மட்டும் உள்ளது
மூன்று முறை மட்டுமே எடை பார்க்க வேண்டும் கண்டுபிடியுங்கள் பார்கலாம்
போலி நாணயம்.
1. முதலில் 6 நாணயங்களை ஒரு தட்டிலும் அடுத்த 6 நாணயங்களை மறு தட்டிலும் வைத்து எடை பார்க்கவேண்டும். எடை குறைவாக உள்ள தட்டில் உள்ள 6 நாணயங்களில் தான் போலி நாணயம் உள்ளது.
2. அடுத்து அந்த 6-ஐயும் மூன்று ஒரு தட்டிலும் மறு மூன்றை அடுத்த தாட்டிலும் வைத்து எடை பார்க்க வேண்டும். எடை குறைவாக உள்ளதை தனியே எடுக்கவும். அதில் தான் பொலி உள்ளது.
3. இப்போது அந்த மூன்றிலிருந்து ஏதாவது இரண்டை எடுத்து ஒன்றை ஒரு தட்டிலும் மற்றதை மறு தட்டிலும் வைத்து எடை பார்க்கவும்.
எடை குறைவாக இருப்பது போலி நாணயம். இரண்டும் சமமாக இருந்தால் மூன்றவதாக உள்ளது போலி நாணயம்.
அன்புடன்,
இஷானி
வாய்ப்பில்லை..
//எடை குறைவாக உள்ள தட்டில் உள்ள 6 நாணயங்களில் தான் போலி நாணயம் உள்ளது.//
எடை குறைவில் உள்ளது போலி என்று எப்படி தெரியும்? எடை அதிகமானதில் கூட போலி இருக்கலாமே! போலி நாணயம் எடை குறைவாகவோ, கூடுதலாகவோ இருக்கலாம்னு சொல்லி இருக்காரே..!
யாருப்பா அது, காலையில எழுந்திரிச்சதுமே இப்படி மூளையை வேக வைக்கிறது.. !! :-)
நல்ல முயற்சி ஆனால் பலன் இல்லை
நல்ல முயற்சி
ஆனால் பலன் இல்லை கேள்வி யை நன்றாக வாசிக்க வேண்டும்
Do AnY ThInG BcOZ nO OnE cAn PeRfEcT.
போலி நாணயம்
எடை 1. முதலில் நான்கு நான்கு நாணயங்களை ஒவ்வொரு தட்டிலும் வைக்க வேண்டும்.
இரண்டும் சமமாக இருப்பின் மூன்றாவது நான்கில் தான் போலி நாணயம் உள்ளது.
எடை 2. இப்போது நல்ல நாணயத்தில் இருந்து இரண்டை இடது தட்டிலும் மூன்றாவது 4 ல் இருந்த நாணயத்தில் இரண்டை வலது தட்டிலும் வைக்கவும். தட்டு சமமாக இருந்தால் மீதமுள்ள இரண்டில் தான் போலி நாணயம். சமமாக இல்லை எனில் வலது தட்டில் உள்ள இரண்டில் தான் போலி நாணயம்.
எடை 3. இடது தட்டில் நல்ல நாணயம் ஒன்றையும் வலது தட்டில் போலி உள்ள இரண்டிலிருந்து ஒன்றை வைக்கவும். சமமாக இல்லையெனில் வலது தட்டு நாணயம் போலி. சமம் எனில் மீதமுள்ள ஓன்று போலி.
இப்போது முதல் எடையில் வலதும் இடதும் சமம் இல்லையெனில், போலி நாணயம் அந்த எட்டில் ஒன்று தான்.
இதற்கு இன்னும் விடை தெரியவில்லை. விரைவில் கண்டு பிடித்து விடலாம்.
வலது, இடது தட்டுகளுக்கிடையே உள்ள நாணயங்களை மாற்றி வைத்து தான் போலியை கண்டு பிடிக்க முடியும்.
அன்புடன்,
இஷானி
போலி நாணயம்
//இப்போது முதல் எடையில் வலதும் இடதும் சமம் இல்லையெனில், போலி நாணயம் அந்த எட்டில் ஒன்று தான் //
சமமாக வரும்வரை நாணயங்களை மாற்றி மாற்றி வைத்தால் போதுமே(.இதை எடை-1 என்று தான் கொள்ள வேண்டும்)
இந்த முறையில் விடையை கண்டுபிடிக்கலாம் தானே