கேழ்வரகு இனிப்பு அடை

தேதி: November 9, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேழ்வரகு மாவு - இரண்டு கோப்பை
தூளாக்கப்பட்ட வெல்லம் - ஒரு கோப்பை
உப்புத்தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - கால் கோப்பை


 

வெல்லத்தை தூளாக்கும் பொழுது சிறிது கட்டியும் தட்டியுமாக தூள் செய்யவும். நன்கு தூளாக்க வேண்டாம்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் மாவைப்போட்டு உப்புத்தூளை போட்டு கலக்கவும்.
பிறகு வெல்லத்தூளைப் போட்டு கலக்கவும். தொடர்ந்து ஒரு கோப்பை நீரை சிறிது சிறிதாக தெளித்து பிசையவும்.
மாவின் பதம் சற்று தளர்ந்து இருந்தாலும் பிரச்சனை இல்லை.
பிறகு இதனை கையில் எண்ணெயை பூசிக்கொண்டு பெரிய எலுமிச்சைப்பழம் அளவுக்கு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெயை தடவி காயவைக்கவும். பிறகு தயாரித்துள்ள உருண்டைகளை எண்ணெய் தடவிய தட்டில் வைத்து அடையாக தட்டவும்.
அதை உடனே கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெயை ஊற்றி வெந்ததும் திருப்பி விட்டு எண்ணெயை சுற்றிலும் ஊற்றி சிவக்க சுட்டெடுக்கவும். எல்லா உருண்டைகளையும் இதைப் போலவே சுட்டெடுக்கவும்.
சுட்ட அடை பார்ப்பதற்கு கட்டிதட்டிய வெல்லம் ஆங்காங்கே கரைந்து அதற்கேவுரிய நிறத்துடன் பார்த்தவுடனே சாப்பிட தூண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி. நர்மதா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த அடையின் படம்

<img src="files/pictures/aa78.jpg" alt="picture" />