போட்டோ வைப்பதில் சந்தேகம்

இறந்த பெரியவர்கள் போட்டோவை எந்த திசையில் வைக்க வேண்டும்.

பூஜை அறையில் வைக்கலாமா ?

அல்லது ஹாலில் வைக்கலாமா? அப்படி வைக்கும் பொது எந்த திசையில் வைக்க வேண்டும்.

இடம் இல்லாத பட்சத்தில் ஒரு பையில் போட்டு மேலே வைத்துவிடலாமா ?

அப்படி செய்தால் ஏதேனும் கெடுதல் வருமா?

யாராவது தெரிந்தவர்கள் கூறினால் உதவியாக இருக்கும்.

//இடம் இல்லாத பட்சத்தில் ஒரு பையில் போட்டு மேலே வைத்துவிடலாமா ?

அப்படி செய்தால் ஏதேனும் கெடுதல் வருமா?// ஃபோட்டோவுக்குக் கெடுதல் வருமா இல்லையா என்பது நீங்கள் எப்படி வைக்கிறீர்கள் அன்பதைப் பொறுத்தது. ஃப்ரேம் பண்ணிய ஃபோட்டோ பற்றிக் கேட்கிறீர்களா? அல்லது ஃப்ரேம் பண்ணாமல் இருக்கிறதா?

வைக்க இடம் இல்லாவிட்டால்... எதற்காக எடுத்தீர்கள்? எனக்கு வீட்டில் சாமி படம், இறந்தவர்கள் படம் எல்லாம் ஃப்ரேம் போட்டு மாட்டி வைப்பது பற்றி தயக்கம் இருக்கிறது. இப்போது இடம் இருந்தாலும் எங்கள் வருங்காலச் சந்ததி என்ன செய்யப் போகிறார்கள்! தூக்கிப் போடும் சந்தர்ப்பம் என்றாவது வரத்தான் போகிறது.

உங்களுக்கு எங்கே மாட்டிவிடப் பிடிக்கிறதோ அங்கே மாட்டுங்கள். இதில் திசை எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. ஃபோட்டோ எல்லாம் நவீன தொழில்நுட்பத்தோடு வந்த விடயமே தவிர மதம், கலாச்சாரம் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. ஒரு ஞாபகத்துக்கு வைத்துக் கொள்வதுதான்.

‍- இமா க்றிஸ்

இல்லை இமா அவர்களே ,

நாங்கள் முன் இருந்த வீட்டில் இடம் நிறைய இருந்தது தற்போது இருக்கும் வீட்டில் இடம் இல்லை.

அனைத்தும் ப்ரேம் செய்த போட்டோக்கள் தான்.

கெடுதல் வருமா கேட்டது குடும்பத்திற்கு, ஏன் என்றால் முன்னோர்கள் ஆசிர்வாதம் இருந்தால் தான் குடும்பத்திற்கு நல்லது. அதற்காக தான் இந்த கேள்வி , தெரிந்த பெரியவர்கள் கூறுவார்கள் என எதிர் பார்க்கிறேன்.

// தெரிந்த பெரியவர்கள் // - நான் இந்த கேட்டகிரி இல்லைங்க. ஆனால் எப்போதோ ஜோஷியம் சம்பந்தப்பட்ட ஒரு டிவி நிகழ்ச்சியில் ஒருவர் இது போல போட்டோக்களை வீட்டில் மாட்டாமல் இருப்பது நல்லது, முக்கியமாக மற்றவர் கண்ணில் படும்படி மாட்டாமல் இருப்பது நல்லதுன்னு சொன்னாங்க. காரணம் எல்லாம் இப்போது நினைவில்லை. எனக்கும் இமா சொன்னது தான் சரின்னுபடுது... ஃபோட்டோ மாட்டுறதால மட்டும் பெரிவர்கள் ஆசிர்வாதம் கிடைக்காது. உயிரோடு இல்லாதவர்களுக்கு உங்கள் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டிய சாஸ்திரங்களை சரியா செய்யுங்க. அது போதும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//தெரிந்த பெரியவர்கள் கூறுவார்கள் என எதிர் பார்க்கிறேன்.// :-) சாரிங்க. பெரியவர் இல்லைன்னாலும் எனக்குத் 'தெரிந்ததை' சொன்னேன். இதற்கெல்லாம் நான் எதிரி இல்லை. இங்க கேள்வி போட்டீங்கன்னா எல்லா வகை பதிலும் எதிர்பார்க்கத்தான் வேண்டும். :-)

//முன்னோர்கள் ஆசிர்வாதம் இருந்தால் தான் குடும்பத்திற்கு நல்லது.// உங்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் ஆசீர்வாதம் ஃபோட்டோ மாட்டாவிட்டால் கூட உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் இருக்கும். ஒரு ஃபோட்டோ தப்பா மாட்டினீங்க என்கிறதாலோ இல்ல மாட்டல என்கிறதாலோ பிரியம் உள்ளவர்கள் நிச்சயம் கோச்சுக்க மாட்டாங்க.

எங்க இடம் இருக்கோ அங்க தான் மாட்டலாம். உங்க மனசு சொல்றதைக் கேட்டு பண்ணுங்க. அதிகம் குழப்பிக்க வேணாம்.
சந்தோஷமா இருங்க.

‍- இமா க்றிஸ்

enaku therinthathai nan solkiren pa.enga vetla iranthavaga photo keelaium samy photo melaium vachi irukuram.neraya per enga vetil vanthu pathutu ippadi than vaikanum nu sonaga.so negalum ipadi vaiga.

எங்க வீட்டு பெரியவர்கள் சொல்லி கேட்டதில் எனக்கு தெரிந்த வரை...

சாமி போட்டோவோடு இறந்தவர்கள் படத்தை சேர்த்து வைக்க கூடாது... இறந்தவர்கள் படம் கீழ் ஷெல்பிலும், சாமிப்படங்கள் மேல் ஷெல்பிலும் தான் இருக்க வேண்டும்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்