ஹாய் தோழிகளே,
'arbi trek ' பற்றி
தெரிந்தவர்கள் யாரவது சொலலமுடியுமா? 50
வயதுக்குமேல் உள்ள பெண்கள்
உபயோகப்படுத்தலாமா? அப்படியென்றால்
எவ்வளவு வேகம் வைத்து கொள்ள வேண்டும்?
எவ்வளவு நிமிடம் பண்ண வேண்டும்? தயவு
செய்து யாராவது விளக்கம் சொல்லுங்களேன்
ப்ளீஸ்.
Orbitrek
முதல் பிரசவத்திற்குப் பின் ஆர்பிட்ரக்-ல் உடர்பயிற்சி செய்ததில் எனக்கு நல்ல மாற்றம் தெரிந்தது..கூடவே சிறிது டயட் கன்ட்ரோல் செய்ததில் வேகமாக எடை குறைந்தது..
இப்பொழுது என் அம்மா அதை தினமும் பயன்படுத்துகிறார்கள்.அம்மாவுக்கு டயாபட்டீஸ் உண்டு.மிகவும் புத்துணர்ச்சியாக உணர்வதாக சொல்கிறார்கள்.resistance மிகவும் குறைவாக வைத்து பயன்படுத்துகிறார்கள்.அப்பொழுதுதான் மிதிக்க இலகுவாக இருக்கும்.எனது மெஷினில் வேகம் அட்ஜஸ்ட் செய்ய முடியாது.ஆனால் உங்களுக்கு மூட்டு பிரச்சனைகள் இருந்தால் இதில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.அது இன்னும் அதிக மூட்டு தேய்மானத்திற்கு வழிவகுக்கலாம்..மேலும் கர்ப்பப்பை கோளாறுகள் உள்ளவர்களும் மருத்துவர் ஆலோசனையின்றி செய்ய வேண்டாம்.
shanitha plz.
shanitha
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. எனக்கு மூட்டு பிரச்சனை இல்லை. ஆனால் சுகர் இப்பதான் ஆரம்ப நிலையில் இருக்கிறது. கொலஸ்ட்ராலுக்கு மருந்து எடுத்து கொள்கிறேன் ஆர்பி டிரகில் எவ்வளவு நேரம் பயிற்சி எடுக்கலாம் என்று தயவு செய்து சொல்லவும்.
orbitrek
ஆரம்பத்தில் அதிக நேரம் மிதிக்க முடியாது..முதல் நாள் 5 நிமிடங்கள் மட்டும் செய்யுங்கள்.பிறகு படிப்படியாக நேரத்தைக் கூட்டலாம்.அம்மா இப்பொழுது காலையில் 15 நிமிடங்கள் மாலையில் 15 நிமிடங்கள் செய்கிறார்கள்.
shanitha.thnks
மிகவும் நன்றி