உஷார்! உஷார்!! உஷார்!!!

அவசரம், தயவு செய்து பகிரவும்!

இன்று காலை நமது (அறுசுவை) தோழி ஒருவரின் வீட்டிற்கு வந்த இரு பெண்கள், தாங்கள் காஸ் ஏஜென்ஸியிலிருந்து செக்கிங் செய்ய வந்திருப்பதாக சொல்லி, சுரக்‌ஷாவிலிருந்து இரண்டு பொருட்கள் கொண்டு வந்திருப்பதாக சொல்லி, ஆயிரத்து ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். விவரங்கள் எல்லாம் மிகவும் சரியாகச் சொன்னதால், இவரும் வாங்கி விட்டார். இருப்பினும், அவருக்கு கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டதால், எனக்கு ஃபோன் செய்தார். ஆனால் நான் அவருடைய ஃபோன் கால் மிஸ் செய்து விட்டேன்:(

இன்று காலையில் வெளி வந்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டரில் ‘சென்னையை கலக்கும் சீட்டிங் பெண்கள்’ என்ற தலைப்பில் இரண்டு பக்கத்துக்கு இந்த ஏமாற்றும் பெண்களைப் பற்றி, கட்டுரை வந்திருக்கிறது. நான் தோழியின் ஃபோன் கால் அட்டெண்ட் செய்திருந்தால், கண்டிப்பாக சொல்லியிருந்திருக்க முடியும்.

அந்தப் பெண்கள் போன பிறகு, மீண்டும் அவர் ஃபோன் செய்தார். அவ்வளவுதான், மாற்றி, மாற்றி, புலம்பிக் கொண்டிருக்கிறோம்:(

தோழிகள் தயவு செய்து இதைப் பகிருங்கள்.

அந்தப் பெண்கள் காலை 8 மணியிலிருந்து, 9 மணிக்குள் வருகிறார்கள். இதை வாங்குவது கட்டாயம் என்றும், நேரமாகிறது என்றும் இன்று வாங்கவில்லையென்றால் மறு நாள் க்யூவில் நின்று வாங்க வேண்டியிருக்கும் என்றும் பலவாறாக ஏமாற்றுகிறார்கள்.

உஷார்! உஷார்!! உஷார்!!!

ரம்யா இப்பத்தான் சொல்ல விரும்பினேன் பகுதியிலும் போட்டேன்.

தோழிகள் தயவு செய்து, உங்க உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் இந்தத் தகவலைப் பகிருங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

Kandippaga thozhigalea

மேலும் சில பதிவுகள்