வளைகாப்பு மெனு

அடுத்த மாதம் என் தோழிக்கு வளைகாப்பு. என்னென்ன சாதம், குழம்பு, பொரியல் செய்யலாம்? நான்வெஜ் சமைக்கலாமா? அப்படி சமைப்பதென்றால் என்ன சமைக்கலாம்? வேற இழை ஏதும் இது சம்பந்தமா அறுசுவைல இருக்கிறதா? கொஞ்சம் சொல்லுங்கப்பா.Pls. இது எல்லோருக்கும் பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.

அன்பு உமா,

வளைகாப்புக்கு சைவ சமையல் என்றால், ஐந்து வகை, ஏழு வகை, ஒன்பது வகை கலந்த சாதம் செய்வாங்க.

சிலர் வீட்டில் ஏழாம் மாதம் என்றால் ஏழு வகையும், ஒன்பதாம் மாதம் வளைகாப்பு என்றால் ஒன்பது வகையும் செய்வாங்க.

சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம், வெண் பொங்கல், புளியோதரை, எலுமிச்சம்பழ சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், வெஜ் பிரியாணி, வெஜ் புலவ் - இப்படி செய்யலாம்.

உருளைக்கிழங்கு பொரியல், அவியல், ரைத்தா, சேனை/சேம்பு சாப்ஸ், சிப்ஸ், அப்பளம், காரட் கோசுமல்லி, ஊறுகாய், அப்பளம், பீட்ரூட் ஜாம், இத்துடன் ப்ளெயின் ரைஸ், அதோட ரசம், சாம்பார் செய்யலாம்.

ஒரு ஸ்வீட், அத்துடன் வடை, பாயசம் சேத்துக்கலாம்.

ஐஸ்க்ரீம் அல்லது புட்டிங்.

ஒரு வளைகாப்பு வைபவத்தில் சீஸ் சேர்த்த சாலட், செய்திருந்தாங்க.

இன்னும் தோழிகள் வந்து சொல்வாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றிம்மா. நான்வெஜ் சமைக்கலாமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வேற ஐடியா இருந்தாலும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு உமா,

நான் வெஜ் பத்தி எனக்குத் தெரியலையே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. மற்ற தோழிகள் வருவாங்கன்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

நான்வெஜ் சமைக்கலாமா? சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்!

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

எனக்கு தெரிந்ததை சொல்றேன் உமா,நான் வெஜ் பன்ன மாட்டாங்கப்பா வளைக்காப்பு மெனுவுல.ஒன்லி வெஜ் அயிட்டம் மட்டும் தான் இருக்கும்.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

hi i am bagavathi,

சிக்கன் பிரியாணி செய்து கிரேவி வைக்கலாம். ஆனால் ஓன்பது வகையான இனிப்பு வைப்பர்கள். ஏழாவது மாதம் என்றால் 7 வகையான இனிப்பு வைப்பர்கள்.

நன்றி தோழிஸ்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Hi friends yennakku 7th month markalila varuthu athunala 6th month valakappu pannanumnu my mother in law told,but amma veettu side 6th month valakappu panna kudathunu solranga yeravathu sollunga pa pls,yeppa pannanumnu?

பொதுவா 7வது அல்லது 9அது மாதத்தில் பண்ணுவாங்கன்னு சொல்லி கேட்டிருக்கேன். அதாவது ஒத்தபடையில் வரணும் என்பாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்