இறால் கறி

தேதி: November 10, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இறால் - 1/4 கிலோ
முட்டை - 3
உருளைகிழங்கு - 3
மிளகாய் - 2
வெங்காயம் ( பெரியது) - 2
தக்காளி - 2
மிளகாய்தூள் - 5 தேக்கரண்டி
உப்பு - 3 தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி - 2 தேக்கரண்டி
தாளிக்க தேவையானவை
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

இறாலை சுத்தம் செய்து உப்பு 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் 2 தேக்கரண்டி, கலந்து தனியே வைத்துக் கொள்ளவும்
முட்டையை தனியே வேக வைத்து எடுத்து கொள்ளவும்
உருளைகிழங்கை உப்பு போட்டு வேக வைத்துக் தோலுரித்து பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
கிழங்கு மிக அதிகமாக வேக தேவையில்லை ( மசிக்கும் அளவுக்கு தேவையில்லை )
வெங்காயம் , தக்காளியை பொடிதாக நறுக்கி கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு இறாலை போட்டு பொரித்து தனியேஎடுத்து வைத்துக் கொண்டு அதே எண்ணெயில் கடுகு ,நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
வெங்காயம் சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுதுபோட்டு வதக்கி தக்காளி மிளகாய் போட்டு வதக்கவும்
தக்காளி நன்கு வதங்கிய பின் மிளகாய்தூள் , கரம் மசாலாதூள் , உப்பு போட்டு மசாலா வாசனை போனதும் வேக வைத்த உருளைகிழங்கு போட்டு 1 நிமிடம் வதக்கவும்
பின் வேக வைத்த முட்டையை போட்டு 1 நிமிடம் வதக்கவும்
அதன்பின் பொரித்த இறாலை போட்டு 2 நிமிடம் சிம்மில் வைத்து கிளறி இறக்கவும்
கிளறும் போது முட்டை , கிழங்கு உடையாமல் பார்த்துக்கொள்ளவும்


இறால் அதிக நேரம் பொரிக்கக்கூடாது இந்த மசாலா செய்யும் போது முழுவதுமே சிம்மில் வைத்தே செய்யவும்

மேலும் சில குறிப்புகள்