இடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது

எனக்கு 30 வயதாகிறது கணிபொறி வல்லுனராக இருக்கிறேன் இடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கவும் செய்தது. மருத்துவரிடம் (கொலம்பியா ஆசியா ) சென்றேன். எதுவும் பரிசோதிக்காமல் நேரடியாக எக்கோ, TMT, ECG, லிபிட் ப்ரொபைல் (lipit profile) எல்லாம் எடுக்க சொன்னார்கள்.எல்லாம் நார்மல் தான். combiflam ன்னு ஐந்து நாளுக்கு தந்தார். ஏதும் பயனில்லை. மூன்று நாள் கழித்து போனேன், உடனே அன்ஜியோகிராம் எடுக்கணும் ன்னு சொல்லிடங்க - எனக்கு உடன்பாடு இல்லை. உடனே வேற ஒரு டாக்டரிடம் சென்றேன் அவர் எல்லாத்தையும் பார்த்துவிட்டு எல்லாம் நலமாக தான் இருக்கிறது அப்புறம் என் அன்ஜியோ போகணும் ன்னு கேட்குறார். இவர் ஒரு மாத்திரை கொடுத்தார் எல்லாம் சரியாகி போனது. மீண்டும் கை கடுக்க ஆரம்பிக்கிறது. நெஞ்சில் அவ்வபோது மிதமான வலி வருகிறது

என்ன காரணமாக இருக்கும் ?

நன் டெல்லி (குர்கான் ) இல் உள்ளேன் எல்லா மருத்துவரும் பணம் மட்டுமே குறிகோளாக கொண்டு உள்ளார்கள்.

வலியின் காரணம் என்ன? யாரவது கூறுங்களேன்

நன்றி
பாபு நடேசன்

எக்கோ இசிஜி எல்லாம் நார்மலா இருக்கும் போது பயப்பட தேவையில்லை. ஆனாலும் எதுவும் நாம் கெஸ் செய்வது போலும் இருக்காது. நல்ல டாக்டரை தேடி பிடிப்பது இப்போது எல்லாம் மிகவும் சிரமமாகிவிட்டது. சுற்று வட்டாரத்தில் நன்கு விசாரித்து ஒரு டாக்டரை போயி எதற்கும் பாருங்கள். சில வாயு பிரச்சனையும் காரணமாக இருக்கலாம்.ஒரே இடத்தில் அமர்ந்து இருக்காமல் பிசிகல் ஆக்டிவிட்டி இருப்பது அவசியம்.. பெருங்காயத்தை நெயில் சிறிது வறுத்து தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள். இந்த லின்கில் உள்ளது படி செய்து சாப்பிடவும். நல்ல மருத்துவரை விசாரித்து செக் செய்து பார்த்து விடுவது நல்லது. இந்த தளத்தில் பயனுள்ள தகவல் உங்களுக்கு கிடைத்தாலும் இது போன்ற விஷயத்தில் நாமே முடிவது செய்து எந்த ரிஸ்க்கையும் எடுத்துக் கொள்ள வேண்டாமே.

http://www.arusuvai.com/tamil/node/20873

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//எதுவும் பரிசோதிக்காமல் நேரடியாக எக்கோ, TMT, ECG, லிபிட் ப்ரொபைல் (lipit profile) எல்லாம் எடுக்க சொன்னார்கள்.//

இல்லை.. எக்கோ, TMT எல்லாமே பரிசோதனைதான். நீங்க வலின்னு போன உடனே ஒரு நல்ல டாக்டர் இதைத்தான் செய்ய சொல்வாங்கன்னு நான் நம்புறேன். நீங்க சொன்ன நாலு டெஸ்டுமே எல்லாரும் அப்பப்ப செய்துக்க வேண்டிய டெஸ்ட்ஸ். பொதுவா 40 வயசை தொட்டுட்டா கண்டிப்பா செய்திடணும். 30 ங்கிறது கொஞ்சம் ஏர்லியரா இருந்தாலும், உங்களுக்கு பிரச்சனைன்னு போனதால செய்ய சொல்லி இருக்காங்க. அதனால அதுல தப்பு இருக்கிறதா தெரியலை. அதுதான் சரியான முறைன்னு நான் நினைக்கிறேன்.

ஆனா, அந்த ரிப்போர்ட்ஸ் எல்லாமே நார்மலா இருக்கிறப்ப Angio பண்ணச் சொன்னதுதான் கொஞ்சம் அதிகமா தெரியுது. அந்த டெஸ்ட்க்கு போறதுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தமான சிம்டம்ஸ் இருக்கணும். மற்ற எல்லா டெஸ்ட்டும் நார்மலா இருக்கிறப்ப வலி குறையவே இல்லைங்கிறது வேற என்ன காரணமா இருக்கும்னு யோசிக்க வச்சிருக்கலாம். எதுக்கும் angio பண்ணிடலாமேன்னு அவர் நினைச்சு இருக்கலாம். இருந்தாலும் இன்னொரு டாக்டர் சொன்னது மாதிரி, எதுக்கு ஆன்ஜியோ ங்கிற கேள்விதான் எல்லாருக்குமே வரும். மத்த டெஸ்ட் மாதிரி ஈசி டெஸ்ட் இல்ல அது. சரி போனாப் போகுது செஞ்சுட்டு போவோம்னு சொல்றதுக்கு. அதேசமயம் வலி நெஞ்சுலங்கிறதால எதையும் அலட்சியப்படுத்தவும் முடியாது.

பணம் சம்பாதிக்கிறது ஒரு காரணமா இருந்தாலும், இன்னைக்கு டெக்னாலஜி இருக்கிறதால, எல்லா டாக்டர்ஸ்மே இருக்கிற டெக்னாலஜியை கடைசி வரைக்கும் யூஸ் பண்ண நினைக்கிறாங்க. அசெம்ப்சன்ஸ்ல எதையும் கொண்டு போக விரும்பறது இல்லை. patient நாமதானே.. அதனால patience maintain பண்ண வேண்டி இருக்கு.

ஒரு சாதாரண பரிசோதனை எல்லாரும் சொல்றதை நீங்க ட்ரை பண்ணுங்க. வாயுப் பிரச்சனைக்கான கைவைத்தியம் சிலதை முயற்சி பண்ணுங்க. அடுத்து கைக்கு, உடலுக்கு கம்ப்ளீட்டா ரெஸ்ட் கொடுங்க. முடிஞ்சா ஒரு வாரம் லீவு போட்டுட்டு கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருங்க. ரெஸ்ட்ல இருக்கிறப்ப வலி இருக்கான்னு பாருங்க. இதை டாக்டர்ஸ் கண்டிப்பா சொல்லி இருப்பாங்க. வாயுப் பிரச்சனை இல்ல, ரெஸ்ட்ல இருக்கிறப்ப வலி இருக்குங்கிறது கன்பர்ம் ஆனா, சென்னை வந்து நல்ல டாக்டரை பாருங்க. ராமச்சந்திரா போகலாம். நான் மயிலாப்பூர் டாக்டர் சிவகடாட்சம் கிட்டே போயி இருக்கேன். :-) (உங்க மாதிரி இல்லேன்னாலும் எனக்கும் சில பிரச்சனைகள் இருந்துச்சு. போயி சில டெஸ்ட் எல்லாம் பண்ணி, எல்லா டவுட்டையும் க்ளியர் பண்ணிக்கிட்டேன்.)

வேற தகவல்கள் எதுவும் வேணும்னா இங்க கேளுங்க..

அன்பு திரு பாபு நடேசன்,

இடது கை வலி, நெஞ்சில் வலி என்றால் தாமத்திக்காமல் எல்லா டெஸ்டும் எடுத்தது நல்லதுதான்.

ஒரு சின்ன யோசனை - கம்யூட்டரில் கம்ப்யூட்டர் கேம்ஸ் - தொடர்ந்து விளையாடுகிறீர்கள் என்றால் அதற்கு ஓய்வு கொடுங்கள்.

கம்ப்யூட்டரில் வேலை செய்வது - அதாவது டைப் செய்வது, பார்ப்பது என்றால் ஓரளவுக்காவது மூவ்மெண்ட் இருக்கும்.

ஆனால் - கேம்ஸ் - அதுவும் குறிப்பாக - சாலிடெர், ஃப்ரீசெல் - இதெல்லாம் விளையாடும்போது - மவுஸ் மட்டுமே உபயோகிப்போம். அதனால் முழங்கைக்கு மேலுள்ள பகுதியும், நெஞ்சிலும் வலி ஏற்படுவதுண்டு. (எனக்கு வலி இருந்தது - கேம்ஸ் விளையாடுவதை நிறுத்திய பிறகு வலி நின்று விட்டது).

திரும்பவும் வலி வந்தால், மீண்டும் டாக்டரிடம் சென்று கன்சல்ட் செய்து விடுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

பதில் அளித்த அனைவருக்கும் நன்றி

அட்மின் அவர்களுக்கு

எதுவும் பரிசோதிக்காமல் என்று சொன்னது இதய துடிப்பு, இரத்த அழுத்தம் , என் எதுவும் பரிசோதிக்க வில்லை, போனதும் என்ன செய்கிறது என்று கேட்டு விட்டு போய் டெஸ்ட் எடுங்கள் என்று சொல்லிவிட்டார். அடுத்த நாள் எடுத்த ரிப்போர்ட் ஏதும் திருப்பி கூட பார்க்கவில்லை அதுனாலதான் அப்படி சொன்னேன்

நன்றியுடன்
பாபு நடேசன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை | தாயை வணங்கிடு தப்பில்லை | மனைவியை மதித்திடு குறையுமில்லை

சீதாலஷ்மி அவர்களுக்கு,

நான் கேம் எல்லாம் விளையாட மாட்டேன். ஆபீஸ் ல கீ போர்ட் அதிகம் பயன்படுத்துவேன். அதையும் இனி குறைக்க பார்கிறேன்

அறிவுரைக்கு மிக்க நன்றி

நன்றியுடன்
பாபு நடேசன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை | தாயை வணங்கிடு தப்பில்லை | மனைவியை மதித்திடு குறையுமில்லை

ரம்யா அவர்களுக்கு

தாங்கள் பரிந்துரை செய்ததை செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி

நன்றியுடன்
பாபு நடேசன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை | தாயை வணங்கிடு தப்பில்லை | மனைவியை மதித்திடு குறையுமில்லை

Do you ride two wheeler often? if it so sometimes you may have problems in neck cervical,symptoms are same what you told,I may be right or wrong but pls check it.

Thanks Thanapal,

Yes i am riding two wheeler. but perday up and down 10 KM only, just going to office. never use to drive more than 10 KM. So if neck cervical symptoms means what i need to do?
--
நன்றி தனபால்
ஆம் நான் இரண்டு சக்கர வாகனம் ஒருநாளிக்கு 10 கிலோமீட்டர் சென்று வருகிறேன் (போய் வர 10 கி மீ ) அப்படி கழுத்து பிரச்சினைன்ன என்ன பண்ணலாம் - எதாவது அறிவுரை கூறுங்கள் - அதிக தூரம் நான் வண்டியில் செல்ல மாட்டேன் .

நன்றியுடன்
பாபு நடேசன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை | தாயை வணங்கிடு தப்பில்லை | மனைவியை மதித்திடு குறையுமில்லை

Dont wory,feel free,dont get tensd u vl b alright soon,sometimes it may be due to muscle catch ,gastric problems,ur proffesion,sitting style,mental worries,Better u can try for good trained acupunturist,dont go to dr and waste ur money,nothing for u.pray god.

Why don't you consult an good acupuncturist? In acupuncture, they will find the cause for the problem and rectify it. Most of them are not money minded. I hope definetly you will be releived.

Thanks.

மேலும் சில பதிவுகள்