வெங்காய சட்னி

தேதி: November 11, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிவப்பு வெங்காயம் - கால் கிலோ
காய்ந்தமிளகாய் - ஆறு
புளி - நெல்லிக்காயளவு
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரைதேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

வெங்காயத்தை தோலை நீக்கி விட்டு நான்காக நறுக்கவும்.
பிறகு கைகளால் உரித்து வைக்கவும்.
வாயகன்ற சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை காய வைத்து உளுத்தம்பருப்பையும், காய்ந்த மிளகாவையும் போட்டு சிவக்க வறுக்கவும்.
பிறகு வெங்காய வில்லைகளைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து புளி, பெருங்காயத் தூளையும் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு சிவந்து வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.
பிறகு சூடு ஆறியவுடன் அம்மியிலோ, அரவை இயந்திரத்திலோ போட்டு உப்பைச் சேர்த்து நறநற வென்று அரைத்துக் கொள்ளவும்.
தண்ணீரே ஊற்ற கூடாது. பிறகு ஒரு சிறிய சட்டியில் மீதமுள்ள எண்ணெயைக் காயவைத்து தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து கொட்டி கலக்கி வைக்கவும்.
இந்த சட்னியை வெளியூர் பயணம் செல்லும் பொழுது இட்லியுடன் எடுத்துச் செல்லலாம். சீக்கிரத்தில் கெடாது. நல்ல சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் மனோகரி மேடம்
நலமா? நான் வெங்காய சட்னி செய்து பார்த்தேன் . எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. மிக்க நன்றி
மாஜிதா சுபைர்

majithazubair

ஹலோ மாஜிதா இந்த சட்னியை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.