வாழ்த்து!

வாழ்த்து!! ஆம் வாழ்த்து என்னும் மந்திரச்சொல் ஒவ்வொரு மனித வாழ்விலும் நிச்சயம் இடம் பெறாமல் இருக்காது :)

வாழ்த்துக்கள்தான் எத்துணை விதமாக வருகிறது. வாழ்த்தை வெறுக்கும் மனிதன் தான் உண்டோ? எவ்வளவுதான் கல்நெஞ்சக்காரராக இருந்தாலும் அந்த கல்லையும் கனிய வைக்கும் தன்மை கொண்டதுதான் வாழ்த்து. :)

நமது தினசரி வாழ்வில் பார்த்தோமேயானால் காலை எழுந்தவுடன் புன்சிரிப்புடன் நம்மை எதிர்நோக்கும் நம் உறவுகள் சிந்தும் மென்புன்னகையும் கூட ஒருவித வாழ்த்துதான். பிறந்த குழந்தையின் மென்சிரிப்பில் கடவுளின் வாழ்த்தை பார்க்கிறோம்.

தலைகோதிச் செல்லும் தென்றலும் கூட இயற்கை நமக்களிக்கும் வாழ்த்துதானோ!! இருள்பிரியாத அதிகாலைவேளையில் புல்லினங்கள் எழுப்பும் சப்தமும் நமக்கான வாழ்த்துதானோ!! வானம் பூமிக்கு பாடும் வாழ்த்துப் பா தான் மழையோ!! கெட்டி மேளம்!! கெட்டி மேளம்!! என்றவுடன் ஒலிக்கும் மங்கள இசைக்கு நடுவே மணமகன், மணமகளின் கழுத்தில் மங்கள நாண் ஏற்றிய அந்த வேளையிலே, அட்சதை மழையில் நனைந்தவாறே நாணத்துடன் தலை கவிழ்ந்த மணமகளை போல் மரங்கள் நிற்கின்றன, வானமகள் அனுப்பிய வாழ்த்தினை தலை கொள்ளாமல் ஏந்தியபடி. பதிலுக்கு தன் நன்றியை பச்சை வண்ண பாய் விரித்து பதில் மரியாதை கொடுக்கிறாளோ பூமி அன்னை!! நன்றி மறக்காதே!! நீ கடந்து வந்த பாதையை என்றும் மறவாதே!! என்பதை நமக்கு உணர்த்தும் விதம்தானோ இது!!

குழந்தை பிறந்தவுடன் வரும் வாழ்த்து செய்தி, அக்குழந்தையின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அத்தாயின் மனக்கண்முன்னால் நிழலாடிச்செல்லும். வாழ்த்தானது கொடுப்பவரையும் மகிழ்விக்கும், பெறுபவரையும் பூரிப்படையச்செய்யும் :)

இதயம் கனிந்த, உளப்பூர்வமான, மனப்பூர்வமான, இனிய, இன்னும் இதுபோல் பலப்பல அழகிய சொற்களை தாங்கி வரும் வாழ்த்துக்கள் நிச்சயம் ஒருவரை உற்சாகத்துடன் இயங்கவைக்கும் என்பதில் மிகையேதுமில்லை. இந்த வார்த்தைகள்தான் எவ்வளவு அழகு :)

என்னுடைய வாழ்த்துப்பூக்களை காற்றுவெளியில் தூவி தங்கள் அனைவருக்கும் அனுப்பி வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்!! சேகரித்து வைப்பீர்கள் என்னும் நம்பிக்கையில் :)

Average: 5 (4 votes)

Comments

அண்ணா எனக்கு எழுத வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி :)
நானும் எழுதுவேன் என்பதை எனக்கு அறிமுகம் செய்துவைத்ததே அறுசுவைதான், நிச்சயம் நல்ல பல விசயங்களை எழுதுவேன், என்னுள் எழும் எண்ணங்களை எழுத்தில் பார்த்ததே அறுசுவை வாயிலாகத்தான் :) அறுசுவைக்கு மனமார்ந்த நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹாய் அருள்,

இன்றுதான் முதல் முறையாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன்.ரொம்ப அழகா

எழுதியிருக்கீங்க.

//தலைகோதிச் செல்லும் தென்றலும் கூட//

இந்த பத்தி முழுக்க,ஒவ்வொரு வரியும் கவிதைதான்,இயற்கை வாழ்த்து கொள்ளை

அழகு.

//வாழ்த்துக்கள் நிச்சயம் ஒருவரை உற்சாகத்துடன் இயங்கவைக்கும் என்பதில் மிகையேதுமில்லை//

சத்தியமான வார்த்தைகள்!!

உங்கள் வாழ்த்து என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது,நன்றி தோழி.

வாழ்த்துக் கவி படைத்த அருளிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

அன்புடன்
நித்திலா

வாழ்த்துப்பற்றிய வர்ணனைகள் ஒவ்வொன்றும் மிக அருமைங்க, வாழ்த்துக்கள்

நட்புடன்
குணா

வாழ்த்துக்கே வாழ்த்துச்செய்தி சொல்லி காற்றோடு தூது விட்ட என் தோழி உங்களுக்கும் உங்கள் எழுத்துக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...:)தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஒவ்வொரு வாழ்த்தும் ஒரு விதம்.. இப்ப வாழ்த்துக்கே வாழ்த்து சொல்கிறோம்.வாழ்த்துக்கள் செல்வி

Be simple be sample

இது உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கான நேரம்... மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! :)

வித்யா பிரவீன்குமார்... :)

நித்திலாவின் வருகை நல்வரவாகட்டும் :) சொல்லப்போனா முதல் பதிவரான உங்களுக்கு இரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கணும் :) இந்த பூங்கொத்தை உங்களுக்கு எனது அன்பான பரிசா அளிக்கிறேன் :)

//இன்றுதான் முதல் முறையாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன்.ரொம்ப அழகா//
முதல்முறை வாசித்து பதிவிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல நித்திலா :)
வாழ்த்திற்கு மகிழ்ச்சி கலந்த நன்றி :)
முதல் முறையாக பதிவிடும் அனைவருக்கும் எனது அன்பான அழகிய மலர்கொத்தினை பரிசா அளிக்கிறேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குணா உங்களோட பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுமி உங்களோட வாழ்த்தும், பாராட்டும் மேன்மேலும் உற்சாகத்தை அளிக்கிறது :)
மிக்க நன்றி சுமி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Welcome to new arusuvai

Kalam pon ponrathu

ரேவதி என்னுடைய மனமார்ந்த நன்றிகள் :) உங்களுடைய பதிவு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மனமார்ந்த நன்றி வித்யா :) அழகா சொல்லி இருக்கீங்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்களையும் இனிதே வரவேற்கிறேன் :) மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பிச்சிப்புட்டீங்க பிச்சு... என்ன எழுத்துங்க!!! கலக்கறீங்க போங்க. உங்களுக்கும் எங்கள் அன்பு வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துப்பூக்களை காற்றுவெளியில் தூவிய எனதன்பு தோழிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் :) வாழ்த்துக்களை இத்தனை அழகா சொல்லலாமென்று உங்களிடம் தான் கற்றுக்கொள்ளனும் அருள் சூப்பர் (y)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாங்க வனி :) உங்களோட வாழ்த்தும்,பாராட்டும் பலமடங்கு உற்சாகம் அளிக்குது, மிக்க நன்றி வனி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாங்க சுவா :) ஆமா சுவா தினமுமே காற்று வெளியிலதானே வாழ்த்துப்பா பாடுறோம் எல்லோரும் :) உங்க பதிவும், பாராட்டும் மனதினில் புதுவெள்ளம் பாய்ந்தாற்போல இருக்கு :) மிக்க நன்றி சுவா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருமை, அழகு, அற்புதம்... மேலும் என்ன சொல்ல?

படிக்கும் போதே ஒருவிதமான இனிமையான அனுபவத்தை தந்த பதிவு அருள்!

மிகவும் அருமை...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

உங்கள் எழுத்துகளை முதல் முறையாக வாசிக்கிறேன் ஒரு ஒரு எழுத்தும் அருமை வருணனைகள் அழகு வாழ்த்துக்கு வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

உண்மை தான் அருள்
வாழ்த்து நம்மை உற்சாகப்படுத்தும் மந்திரச்சொல்

அன்பு அருட்செல்வி,

அருமையாகச் சொல்லியிருக்கீங்க. எங்களது மனம் நிறைந்த வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

வாங்க பிந்து :) உங்க கதைய படிச்சிட்டு எனக்கு வார்த்தைகளே மறந்து போச்சு அவ்வளவு அழகா தெளிந்த நீரோடைபோல கதைய நகர்த்தியிருந்தீங்க, உங்களோட பாராட்டை இங்க பார்த்து அளவிலா ஆனந்தமே எனக்கு :) மிக்க நன்றி பிந்து :)

தனா வாங்க :) நீங்களும் முதல்முறையா வாசிக்கிறீங்களா :) உங்களுக்கும் என் எழுத்து பிடிச்சிருக்குனு கேட்கும்போது மிக்க மகிழ்ச்சியா இருக்கு, மிக்க நன்றி தோழி :)

வாங்க நிகிலா :) நீங்களும் ஒத்துக்கிறீங்களா :) மிக்க நன்றி தோழி பதிவிற்கும் பாராட்டிற்கும்.

சீதாமேடம் வாங்க :) நிச்சயம் ஏற்றுக்கொள்கிறேன் தங்களின் வாழ்த்துக்களை, எனது மனமார்ந்த நன்றியை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் :) மிக்க நன்றிங்க :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாழ்த்து ... எப்போவுமே நான் எதிர்பார்க்கிற ஒன்று... ப்ரெண்ட்ஸ் ரிலேடிவ்ஸ்க்கு இந்த நாள் வரைக்கும் பண்டி,கை மணநாள், பிறந்த நாள்னு வாழ்த்து சொல்லிட்டு இருந்தேன்... ஆனா அது வெறும் வார்த்தை மட்டும் இல்லனு புரியுது...
வாழ்த்துக்களோட அருமைய ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. // வாழ்த்தானது கொடுப்பவரையும் மகிழ்விக்கும், பெறுபவரையும் பூரிப்படையச்செய்யும் // சூப்பர் லைன்ஸ்...உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அருள், பறவைகள் பலவிதம், மனிதர்களும் பலவிதம்.. அந்த வகையில் வாழ்த்துக்களின் வகைகளை எத்தனை அழகாக கவிதைநயமா எடுத்து சொல்லி இருந்தீங்க. சொன்னவிதமும், சொல்லியவிதமும் மாலைநேர இளவெயிலின் இனிய அனுபவத்தை தந்தது. அதிகாலையின் புத்தம்புது பனிதுளியின் சிலிர்ப்பை தந்தது. மொத்தத்தில் அட்டகாசம் அருள்.

கலக்குங்க..அருள். நாங்க கூட வர்றோம். வாழ்த்துக்கள் எனதன்பு தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாங்க கனி :) ஆமாம்பா எல்லோருமே வாழ்த்து எதிர்பார்க்காம இருக்கமாட்டோம் :)
நிச்சயம் வாழ்த்தும் யாரும் உள்ளொன்று வைத்து புறமொன்று வாழ்த்தமாட்டாங்க :) மனிதனுக்கே உரிய இயல்புதான் இது :) மிக்க நன்றி கனி பதிவிட்டு,பாராட்டியமைக்கு :)

கல்ப்ஸ் வாங்கோ :) நீங்க சொல்லி இருக்கும் அழகான சொற்களைவிடவா நான் பதிவில போட்டிருக்கேன். வாழ்த்தைப்பற்றி உங்களிடம் பேசமுடிய்மா கல்ப்ஸ் :)

// கலக்குங்க..அருள். நாங்க கூட வர்றோம். வாழ்த்துக்கள் எனதன்பு தோழியே :)//
...:) பேசமுடியாம செய்திட்டீங்க கல்பூ :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நீங்கள் வாழ்த்தோடு ஆரம்பித்திருக்கும் இந்த வலைப்பூ சிறக்க என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

வாங்க இமா :) எப்ப வருவீங்கனு எதிர்நோக்கியிருந்தேன், சிவப்பு கம்பளம் வெயில்ல காஞ்சு கலரே மங்கி போயிடுமோனு நினைச்சிட்டு இருந்தேன்.
பார்த்து மெதுவா வாங்கனு சொல்லும் முன்னாடி உங்களுக்கே உரிய வேக நடைல வந்து அசத்திப்போட்டீங்க.
தங்களின் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

hai your vazthu is very different to others .i like your thinking.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

தங்களின் புரஃபைல் பார்த்தேன். உன்னதமான பணிசெய்து ஓய்வு பெற்றிருக்கும் தங்களிடமிருந்து பாராட்டு கிடைத்தமை எனக்கு இன்னும் உற்சாகம் அளிக்கிறது.

மிக்க நன்றிங்க மேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

sweet selvi
after retirement i feel very lonely.
your reply is boost for my soul.

thank u
rajini

kai alavu manasu

katal alavu aasai

கடல் அளவு ஆசை
கையளவு மனசு