Butter chicken

Butter chicken செய்வது எப்படி தெரிந்தால் சொல்லுங்களேன் .நான் ஒரு ஹோட்டலில் Butter chichen சாப்பிட்டேன் சூப்பர் taste ஆக இருந்தது.எப்படி பண்ண வேண்டும்?சொல்லுங்களேன் please please.

டியர் நமூரா எப்படி இருக்கின்றீர்கள். தாங்கள் விருப்பபட்ட பட்டர் சிக்கன் குறிப்பை எனது குறிப்பு பக்கத்தில் இன்று கொடுத்துளேன். தயவு செய்து அங்கு சென்று பார்வையிடவும். கிட்ட தட்டவாது நீங்கள் உணவகத்தில் சுவைத்த ருசியில் இருக்கும் என்று நம்புகின்றேன். நன்றி.

நான் சூப்பராக இருக்கிறேன் மனோகிரி மேடம்.நீங்கள் எப்படி இருக்கீங்க?உங்களுடைய குறிப்பில் போய் பட்டர் சிக்கன் ரெசிப்பியை பார்த்தேன்.எனக்கு அதில் ஒரு சின்ன சந்தேகம்.நீங்கள் அதில் கடைசியாக கெட்டியான கிரீம் சேர்க்க வேண்டுமென்று எழுதி இருந்தீர்கள்.கெட்டியான கிரீம் என்றால் என்ன கிரீம்.அதன் பெயர் என்ன?கிரிம் பெயர் எழுதினீங்கன்னா நான் உடன் பட்டர் சிக்கன் செய்து விட்டு எப்படி இருந்ததென்று உங்களுக்கு உடன் எழுதுகிறேன் .மிக்க சந்தோசம். உடன் ரெசிப்பி கொடுத்ததற்கு மிக்க நன்றி

நான் பதிவுசெய் ஐ 2 தடவை அதிகமாக அழுத்திவிட்டேன்.மன்னித்துவிடுங்கள்.மனோகிரி மேடம்.

டியர் நமுரா, நல்லது. நானும் நன்றாக இருக்கின்றேன். மன்னிக்கவும், எழுதும்பொழுதே நான் கிரீம்முக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் எனோ மறந்துவிட்டேன். கிரீம் என்பது காய்ச்சிய பாலிலிருந்தோ அல்லது காய்ச்சாத பாலிலிருந்தோ அதிலுள்ள வெண்ணெயை அல்லது பாலேட்டை பிரித்தெடுத்து கடைந்து உபயோகிப்பதை தான் கிரீம் என்று ஆங்கிலத்தில் கூறுகின்றோம். வீட்டிலும் செய்யலாம். ஆனால் பாதுகாப்பான முறையில் பாலேட்டை குளிர் சாதன பெட்டியில் சேகரித்து வைத்து கடைய வேண்டும்.ஆகவே கடையில் வீட்டை விட சுகாதாரண முறையில் தயாரித்து விற்பனை செய்கின்றார்கள் அதையே உபயோகிப்பதே உத்தமாம் .நீங்கள் Fresh Dairy Products section சென்று பால் section பக்கதில் அல்லது அருகில் பார்த்தீர்களானால் fresh cream, whipping cream,Half and half cream. என்று பல விதங்களில் இருக்கும். அதில் whipping cream மை வாங்கி இந்த குறிப்பிற்க்கு பயன் படுத்தவும். அதிலும் medium என்று இருக்கும். சதாரண whipping cream மை மட்டும் வாங்கவும்.வாங்கும் பொழுது கண்டிப்பாக expiary date டை உறுதி செய்துக் கொண்டு வாங்கவும்.நன்றி.

அசைவ உணவு கிரேவிக்கு நீங்கள் சொன்ன இந்த கிரீமை தேங்காய்க்கு பதில் உபயோகபடுத்தலாமா?taste ல் வித்தியாசம் தெரியுமா?நன்றி

நல்லது நமுரா.மிகவும் நல்ல கேள்வி கேட்டீர்கள்.ஆமாம், தேங்காய் பாலுக்கு பதிலாக கிரீமை அசைவம் மற்றும் சைவ உணவுகளுக்கும் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் சுவையில்(taste)ல் கட்டாயம் வித்தியாசம் இருக்கும். தயிருக்கும் புளிகரைசலுக்கும் உள்ள வித்தியாசம் இவை இரண்டிலும் இருக்கும். தேங்காய் பாலில் கொழுப்புடன் இனிப்பு கலந்த சுவையும் மேலோங்கி இருக்கும்.ஆனால் கிரீமில் அந்த சுவையைத் தவிர மற்றபடி சுவையில் நல்ல Richness இருக்கும். ஆனால் கிரேவியின் தன்மையிலோ (Texture) ரில் இரண்டுக்கும் அதிகமான வித்தியாசம் இருக்காது.ஆகவே குறைந்த அளவில் செய்யும் கிரேவியில் தேங்காய் பாலுக்கு பதிலாக கிரீமை ஊற்றி செய்து பார்கவும்.நன்றி.

நன்றி மனோகிரி மேடம்.பட்டர் சிக்கன் செய்து பார்த்து விட்டு எப்படி இருந்ததென்று உடன் எழுதுகிறேன் .நன்றி

மேலும் சில பதிவுகள்