Robert

எனக்கு மூச்சு விடுவது சிறமாக உள்ளது மேலும் மூச்சு தினரல் மையக்கநிலைக்கு எடுத்து செல்கிறது. படுத்து அமர்த்தாஜன் தைலம் முகர்ந்தால் 10 நிமிடத்தில் சிறய தெலிவுகிடைக்கிறது. மேலும் உடல் சோர்வும் மிகவும் உள்ளது அந்தநேரத்தில் TATA Gluco+ குடித்தால் சற்று தேளிவாக உள்ளது. 6 மருத்துவரை பார்த்துவிட்டேன் ECG, X-Ray, இரத்தபரிசோதனை எல்லாம் எடுத்தாச்சி அனைத்தும் நார்மல் சளியும் இல்லை ஆனல் எந்த மருத்துவரும் சரியான தீர்வும் தரவில்லை எனக்கும் இந்தபிரச்சனை சரியாகவில்லை... தயவு செய்து நல்ல ஒரு தீர்வும் விளக்கமும் தாருங்கள் ... இது சம்மந்தமாக எந்த மருத்துவரை அனுகுவது என்றும் கூறுங்கள் (Dec 2013)

//எந்த மருத்துவரும் சரியான தீர்வும் தரவில்லை எனக்கும் இந்தபிரச்சனை சரியாகவில்லை.// ம்... //தயவு செய்து நல்ல ஒரு தீர்வும் விளக்கமும் தாருங்கள் // இது இரண்டும் இல்லை. எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன். தவறாகக் கூட இருக்கலாம்.

அலர்ஜிக் ரியாக்க்ஷனாக இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறதா? எவ்வளவு காலமாக இப்படி ஆகிறது? காரணம் நீங்கள் நினைக்காத, வெகு சாதாரணமான ஒன்றாகக் கூட இருக்கலாம். உங்கள் சுற்றாடலில் காற்று எப்படி? அயலில் கோவில்கள் இருக்கிறதா? ஊதுபத்தி வாசனை சிலருக்கு ஆகாது. கொசுவர்த்தி, பூக்கள் வாசனை... பெரிய லிஸ்ட் சொல்லலாம். அடுத்த தடவை இப்படி ஆகும் போது அவதானித்துப் பாருங்கள். உங்கள் அருகே அந்தச் சமயம் நிற்பவர் வாசனைப் பொருள் ஏதாவது அணிந்திருக்கிறாரா என்பதைக் கவனித்துப் பாருங்கள். என்ன சாப்பிட்டீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். பதில் போட்டு வையுங்கள். மீண்டும் வந்து பார்க்கிறேன்.

த்ரெட் தலைப்பு 'ராபர்ட்' என்று பதிவாகி இருக்கிறது. ;) 'மூச்சுத் திணறல்' என்று மாற்றி விடுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்