மாதவிடாய் வயிட்று வலி

மாதவிடாய் நேரத்தில் அடி வயிறு மிகவும் வலிக்கிறது. இதற்கு வீட்டு வைத்தியம் சொல்லுங்கள். நன்றி

வயிறு வலிக்கு வேப்பிலை மஞ்ஜல் அரைத்து குடிக்கவும் அல்லது கருப்பு கலர் + எலுமிச்சை பழம் பிழித்து குடிக்கவும் சரிஅகும்

அன்பு மீனாள்,

ஒரு பித்தளைச் சட்டியில் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் - கருப்பட்டியை சிறு துண்டுகளாகத் தட்டிப் போடுங்க. தண்ணீர் ஊற்றக் கூடாது. கருப்பட்டி சூடாகி, இளகும். தீ மிதமாக இருக்கணும். கருப்பட்டி முழுதும் இளகி, பொங்கி வரும்போது, ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றுங்க.

இந்தத் தண்ணீரைக் குடித்தால் வயிற்று வலி குறையும்.

மாதவிடாய் ஆகி, முதல் மூன்று நாட்களும் இப்படிக் குடிக்கலாம்.

சிலருக்கு இதைக் குடிக்கும் போது, இரத்தப் போக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால், வயிறு சுத்தமாகி, வலி குறைந்து விடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

romba nandri seethalakshmi.

மேலும் சில பதிவுகள்