தேதி: December 31, 2013
சாட்டின் ரிப்பன் - 6 நிறங்களில்
அட்டை
கம்
ஸ்டோன் & ஜமிக்கி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். அட்டையை ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிற்கு வட்டமாக வெட்டி வைக்கவும்.

ஒன்றரை இன்ச் அளவில் ரிப்பனை நறுக்கிக் கொள்ளவும். (ஒவ்வொரு நிறத்திலும் இரண்டு துண்டுகள் நறுக்கவும்).

ரிப்பனின் ஒரு முனையில் கம் தடவிக் கொள்ளவும்.

அதன்மீது மறுமுனையை ஒட்டி காயவிடவும்.

இதேபோல் நறுக்கிய அனைத்து ரிப்பன் துண்டுகளையும் ஒட்டி காயவிடவும்.

காய்ந்த பிறகு அட்டையில் கம் தடவி ரிப்பனை ஒட்டவும்.

6 நிற ரிப்பன்களையும் இதேபோல் ஒட்டி காயவிடவும்.

நன்கு காய்ந்ததும் அட்டையைத் திருப்பி வைத்து படத்தில் காட்டியபடி ரிப்பனை (கவிழ்த்தது போல்) ஒட்டவும்.

இதேபோல் மீதமுள்ள ரிப்பன்களையும் ஒட்டி காயவிடவும்.

பிறகு அட்டையைத் திருப்பி பூவின் நடுவில் ஸ்டோன் மற்றும் ஜமிக்கி ஒட்டவும்.

விரும்பினால் இதேபோல் ஸ்டோன் மட்டும் ஒட்டலாம்.

Comments
வாவ்!!!
ரொம்ப அழகு... அப்படியே ஒரு க்ளிப்பில் ஒட்டினால் குட்டீஸ் தலைக்கு வெகு ஜோரா இருக்கும். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அழகு
அழகு
சாட்டின் பூ
மல்டிகலர்ல அழகா இருக்கு.
- இமா க்றிஸ்
சாட்டின் ரிப்பன் ஃப்ளவர் ஈஸி
சாட்டின் ரிப்பன் ஃப்ளவர் ஈஸி , சூப்பர்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *