தேதி: November 12, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில், இந்துக்களின் அனைத்து விசேசங்களிலும் இந்த வடை தவறாது இடம் பெற்றும் விடும். சந்தோசமான நிகழ்வுகளுக்கு இனிப்பாக பாயசம் என்றால், காரமாக இந்த வடைதான் இருக்கும். வீட்டில் எதாவது விசேஷமென்றால் நண்பர்களின் கேள்வி, இன்றைக்கு என்ன வடை பாயசமா? என்பதுதான். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வடையின் செய்முறைக் குறிப்பினை படங்களுடன் காண்க.
உளுந்து - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
உப்பு - அரைத் தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கொத்து
கேரட் துருவல் - கால் கப்
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை சற்று தடிமனாக துருவிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.

உளுந்தை சுமார் 2 மணிநேரம் ஊற வைத்து, கழுவி சுத்தம் செய்து அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அரைத்த மாவுடன் நறுக்கின வெங்காயம், கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு பிளாஷ்டிக் கவரில் அல்லது வாழை இலையில் எலுமிச்சை அளவு மாவு எடுத்து வட்டமாக தட்டி நடுவில் ஓட்டையிட்டு எண்ணெயில் போட்டு வேகவிடவும்.

வடை பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து எண்ணெய்யை வடியவிடவும். வடை வெந்தவுடன் அதை சுற்றி கொதித்தாற்போல் நுரை வருவது குறைந்துவிடும்.இதனை வைத்து வெந்ததை அறியலாம்.

இப்போது சுவையான உளுந்து வடை தயார். இதற்கு தேங்காய் சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Comments
it looks very soft in
it looks very soft in picture,i did in the same way but it not so soft,it was litle hard,what could be the problem tell me please.
இந்திரா - உளுந்தவடை
வடை சாஃப்ட்டா வரது மாவு அரைக்குறதுல தான் இருக்குன்னு சொல்வாங்க. எனக்கும் ரெம்பவே கஷ்டம் தான் ;) இருந்தாலும் இதுக்கு நல்லா யோசனை சொல்ல ஒரு ஆளை எனக்கு தெரியும்... சுவர்ணா விஜயகுமார்... அவங்களை கேளுங்க, புஸ்ஸு புஸ்ஸுன்னு வர என்ன பண்ணிருக்கனும், என்ன தப்பு பண்ணீங்கன்னு சரியா சொல்லுவாங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா