செட்டிநாடு சிக்கன்

தேதி: January 2, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

சிக்கன் - 500 கிராம்
எண்ணெய் - 75 மி. லி
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
பட்டை, இலவங்கம், ஏலக்காய் - தலா 2 கிராம்
சீரகம் - 5 கிராம்
கறிவேப்பிலை - 2 கிராம்
மஞ்சள் தூள் - 10 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப
அரைக்க :
வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு - தலா 50 கிராம்
சோம்பு - 50 கிராம்
சீரகம் - 20 கிராம்
மிளகு - 25 கிராம்
காய்ந்த மிளகாய் - 10 கிராம்
தேங்காய் - 100 கிராம்


 

சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ளப் பொருட்களை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
சிக்கனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஊற வைக்கவும். (வெங்காயம், தக்காளி வதங்கும் வரை ஊறினால் போதும்).
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, இலவங்கம், ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
அதனுடன் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
ஊற வைத்த சிக்கனைச் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும். பிறகு தேவையான அளவு நீர் ஊற்றி மூடிபோட்டு வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்து கிரேவி கெட்டியாக ஆனதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி விடவும்.
சுவையான செட்டிநாடு சிக்கன் தயார்.

இது காரசாரமாக இருக்கும். எனவே காரம் உங்களுக்கு பிடித்தாற்போல் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு எனது நன்றிகள்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

வாசமா இருக்கும் போலிருக்கே :) அருமையான குறிப்ப்புக்கு வாழ்த்துக்கள் ஃபரிதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

nalla potti aal vanthachu faritha ku valthukal

lifela onnum illai 8344525601

வாசனை இங்க வருது. அடுத்த தடவை இந்த சிக்கன் குழம்புதான். வாழ்த்துக்கள் ஃபரீதா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உங்களிடம் பேசி பல நாள் ஆகிறது.. நலமா?
உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள் அக்கா...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

பாராட்டுக்கு நன்றிகள்.. நான் இப்போது தான் சமையலில் முதல் நிலையில் உள்ளேன் அதற்குள் என்னை போய் போட்டி என்று சொல்கிறீர்களே.. வணி அக்காவின் முன்னால் என்னால் நிற்க கூட முடியாது..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

நிச்சயம் செய்து பாருங்கள் சுவை நன்றாக இருக்கும்... பாராட்டுக்கு என் நன்றிகள்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Faridha,
செட்டிநாடு சிக்கன் மிகவும் வித்தியாசமாக, நல்ல சுவையாக இருந்தது! மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

I tried this recipe today and it came out well...