அப்பகோவ இலை சட்னி

தேதி: January 9, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

அப்பகோவ இலை - 4 கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் - 150 கிராம்
வரமிளகாய் - 4
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - 5
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் - ஒரு மூடி
கறிவேப்பிலை - 4 இணுக்கு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

அப்பகோவ இலையை நல்ல தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து, 2 முறை அலசிவிட்டு நீரை வடியவிடவும். 5 நிமிடங்கள் மட்டும் தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். அதிக நேரம் வைத்திருந்தால் இலைகள் அழுகியது போல ஆகிவிடும். (இப்படி போட்டு வைப்பதால் இலையின் மீதுள்ள மண் மற்றும் தூசிகள் தண்ணீரின் அடியில் தங்கிவிடும். அனைத்து வகையான கீரைகள், புதினா மற்றும் மல்லித் தழைக்கும் இது பொருந்தும்).
மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு போட்டு லேசாக சிவந்தவுடன், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வரமிளகாய், சீரகம், மிளகு, தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாக வரிசை கிரமமாக போட்டு வதக்கி எடுத்து ஆறவிடவும்.
பிறகு அதே வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் அப்பகோவ இலையைப் போட்டு வதக்கி ஆற வைக்கவும். (வதங்கியதும் நான்கு கைப்பிடி அளவுள்ள இலைகள் பாதியாக குறைந்துவிடும்).
வதக்கி ஆறவைத்தவற்றுடன் தேங்காய் துருவல், புளி மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
அப்பகோவ இலை சட்னி தயார். சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

புளிக்கு பதிலாக 2 பெரிய நெல்லிக்காய்களை பச்சையாக அரிந்து போட்டுக் கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும். சளிக்கு மிகவும் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாங்க அருளு வாங்க... ஏற்கனவே வந்த அப்பகோவாவையே இன்னும் செய்ய இலையை தேடுறேனாம், அதுக்குள்ள அடுத்த அப்பகோவாவா!!! அப்பப்பா... முடியலப்பா. அது சரி... அதென்ன அப்பகோவா சட்னி பக்கத்துல கறிவேப்பிலை? இது கறிவேப்பிலை சட்னி இல்லை தானே... அதனால் அடுத்த முறை அப்பகோவாவே பக்கத்துல இருந்தா தான் ஒத்துக்குவேன். ;)

முன்பு குறிஞ்சான்னு ஒரு இலை (அதுவும் கொடி போல வேலியில் இருக்குமாம்) அறுசுவையை ஒரு வழி பண்ணுச்சு. அதன் பின் எங்க போனாலும் எந்த கொடியை பார்த்தாலும் இது அதுவான்னே யோசிப்பேன். இன்னுமே அந்த தேடல் ஓயல. அதுக்குள்ள அடுத்த தேடலை நீங்க துவங்கி வச்சுட்டீங்க. இப்பொ வெத்தலை வடிவில் இருந்தா குறிஞ்சாவான்னு பார்க்கிறேன், கடுகு இலை வடிவில் இருந்தால் அப்பகோவாவான்னு பார்க்கிறேன். இப்படி குப்பை செடியை எல்லாம் தொட்டு முகர்ந்து நின்னு நின்னு பார்த்தேன்னா கூடிய சீக்கிரம் என்னை கீழ்பாக்கம் அனுப்பிடுவாங்க. :( இதுக்கு விதை ஏதும் இருந்தா குரியர் பண்ணிடுங்க அருள்... புண்ணியமா போகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Appoko elaiku vera ethavathu peyar unda

//வாங்க அருளு // மவராசியா இரும்மா ..:) அருளிட்டேன் பெற்றுக்கொள்ளுங்கம்மிணி :))

வனி கறிவேப்பிலைய தாளிக்கவெச்சிருந்தேன். அதுக்குள்ள எதுக்கு கஷ்டப்பட்டு தாளிக்கணும் அப்படியே சாப்புடலாமேனு நினைச்சதில போட்டோவுக்கு போஸ் கொடுக்க வெச்சாச்சு. அப்பகோவத்தை அன்னிக்கே ரசத்துக்கு பக்கத்தில வெச்சு போட்டா புடிச்சு போட்டிருந்தனே!! அடிக்கடி போஸ்கொடுக்க வெக்கிறியானு மொறச்சாங்க, அதான் வதக்கி, அரச்சுனு களேபரம் பண்ணிப்புட்டேன்.

( முதல் போட்டோல தெளிவா போட்டிருக்கேன் பாருங்க :) ஒருவேளை எனக்கு மட்டும்தான் தெளிவா தெரியுதோ? காக்காய்க்கும் தன் போட்டோ அழகு போட்டோங்கிறாப்பில...)

சிறுகுறிஞ்சான் மூலிகை அல்லவோ? சாப்பிடலாமா? இப்பதான் கேள்விபடுறேன்.
நீங்க சிறு குறிஞ்சான் கெடச்சா கொடுங்க, நான் அப்ப கோவ தலைய கொடுக்கிறேன்!! டீல் ஓகேயா?:)

வனி நீங்க மூக்குகிட்டலாம் கொண்டுபோய் முகரணும்னு அவசியமில்லிங்கோ!! வாசனைதானா வரும், சமையல் கேஸ் வெளியான வரும் வாசனை போல் இருக்கும், குறிப்பா சாண எரிவாயு.
இதுக்கு கிழங்குதான் இருக்கு வனி, அதுவும் ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு அதிலதான் அப்படியே படர்ந்து கெடக்கு. கிழங்கு வந்தா கட்டாயம் குரியர் பண்றேன் முகமறியா தோழியே!!
மிக்க நன்றி வனி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனக்கு தெரிஞ்சு இல்ல மீகா .. தெரிஞ்சா கட்டாயம் இங்க போடுவேன்.. வருகைக்கு மிக்க நன்றி தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆஹா அடுத்த குறிப்பு வந்துடுச்சா சூப்பருங்கோ :)
முதல் படத்துல தெளிவா போட்டுருக்கீங்க அப்பகோவ இலைய இருந்தும் இத பாத்ததுல்லயே :o
உங்க குறிப்ப பாத்ததும் இந்த சட்னியை அரைச்சு சாப்பிடனும்னு தோனுது ஆனா இலைக்கு நான் எங்க போவேன்
ஓம இலைன்னு சொல்லுவாங்களே அதுவா அருள் இது
எதுவாக இருப்பினும் ஆரோக்கியமான குறிப்பிற்க்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு அருட்செல்வி,

ஆஹா, அப்ப்கோவ இலை வச்சு, அடுத்த குறிப்பும் கொடுத்திட்டீங்க. மக்கள் இன்னும் அப்பகோவ இலை எப்படி இருக்கும்னு தலையைப் பிச்சுக்க ஆரம்பிச்சாச்சு.

கீரையை கழுவுவதற்கும், புளிக்கு பதிலாக நெல்லிக்காய் உபயோகிக்கலாம் என்றும் டிப்ஸ் கொடுத்திருப்பது சூப்பர்.

அன்புடன்

சீதாலஷ்மி

Hi arul chatni super.. Intha ilaikaka ethanai thedi iruken theriungala.. Payanuku nalungu podila serka... P.n. Palayathil irunthu relative konjundu kuduthanga... Ana ithu smell varume.... Chatni smell adikatha pa?

சுவா இலை தெரியலையா :(

சரி நீங்க கோவை வரும்போது கட்டாயம் பறித்து வைக்கிறேன் :)ஓம இலை நான் கேள்விப்பட்டது இல்லை சுவா, அது இல்லேனுதான் தோணுது :)
மிக்க நன்றி சுவா வாழ்த்திற்கும் பதிவிற்கும் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்களோட பதிவும், ஊக்கமும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது :)

ஒவ்வோர் ஊர்பக்கமும் ஒவ்வொரு இலை பிரசித்தம் போல இருக்கு :) மிக்க நன்றிங்க சீதாமேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹாய் ப்ரியா, ஓ நலங்கு பொடில சேர்ப்பாங்களா? எனக்கு இது புது விஷயம்தான்.

வதக்கிட்டா ஸ்மெல் வராதுப்பா :)துளிகூட வராது. பறிக்கும் பொழுதுதான்
கஷ்டம் :(
மிக்க நன்றி ப்ரியா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

appakivai ilaila adutha kuripa. Super ponga. Kandippa seithu parthuttu solren.vaazhthukkal.

மிக்க நன்றி ப்ரசன்னா :) கண்டிப்பா முயற்சித்து பார்த்து எப்படி இருந்தென்று கூறுங்கள் தோழி :) தமிழ் எழுத்துதவி முயற்சியுங்கள், நிறைய எழுத தோணும் ப்ரசன்னா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Sorry arul. Nan ippo kerala la irukken. Mobilil irundhu type panren. So ennala tamil la type panna mudiyala pa. :( Sorry anbu thozhi.

Hi,First time i saw this leaf.u the way of preparing also its good. lokking also very Yummy. Thank u dear.

VALZHA VALAMUDAN,ELLAM IRAIVAN SEYAL.

"Kedrostis Rostrata".