அறுசுவை சர்வர் பராமரிப்பு பணிகள்

அறுசுவை நேயர்களுக்கு வணக்கம்.

அறுசுவை தளம் சமீபத்தில் புதிய சர்வருக்கு மாற்றப்பட்டதை அறிவீர்கள் என்று நம்புகின்றேன். சர்வர் மாற்றம் சற்று அவசரமாக நடைபெற்றதால், சர்வர் ஆப்டிமைசேசன், ஃபைன் ட்யூனிங் பணிகளை அப்போது செய்யாமல், உடனடியாக தளத்தை வெளியிடவேண்டியதாயிற்று. பக்கங்கள் வேகமாக திறப்பதற்கு தேவையானவை மற்றும் பல்வேறு சர்வர் பாதுகாப்பு அம்சங்கள் என்று ஒவ்வொன்றாக இப்போது செய்து வருகின்றேன். கூடுமானவரை இந்தப் பணிகளை அறுசுவையில் பார்வையாளர்கள் குறைவாக இருக்கும் நள்ளிரவு நேரத்தில் (இந்திய நேரம்) செய்து வருகின்றேன். இதனால் சில நிமிடங்களில் இருந்து சில மணி நேரம் வரை அவ்வபோது தடங்கல்கள் வர வாய்ப்புள்ளது.

சர்வர் கான்பிகரேசன் செய்வதில் இன்னமும் சில சிக்கல்கள் நீடிப்பதால், அடுத்த சில தினங்களுக்கும் தொடர்ந்து இந்த பணிகளைச் செய்ய வேண்டி உள்ளது. கூடிய விரைவில் இந்தப் பணிகளை முடித்து, சர்வர் செயல்பாடு சிறப்பாக இருக்குமாறு செய்கின்றோம். இதனால் அவ்வபோது ஏற்படும் தடங்கல்களை தயவுசெய்து பொறுத்தருளவும்.

அன்பு அட்மின் அவர்களுக்கு,

மன்றத்தில் இன்று தலைப்பில் - சமீபத்தில் உள்ள கேள்விகள் மேலே இருக்கும். வரிசையில் கீழ்ப்பகுதியில் உள்ள இழைக்கு பதிவு கொடுத்தால் - அது முதலில் வந்து விடும்.

இப்ப அப்படி வர மாட்டேங்குதே. சூடான தலைப்புகளில் மட்டும் மாற்றம் வருகிறது. மன்றத்தில் இன்று - அப்படியே இருக்கே, ஏன்?

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புள்ள மேடம்,

கொஞ்சம் டெக்னிக்கல் விசயம் காரணமாகவே இந்த மாற்றம்.

சூடான தலைப்புகள் (hot topics) என்பது சமீபத்தில் மாற்றங்கள் அல்லது சேர்க்கைகள் சேர்க்கப்பட்ட இழைகளின் பட்டியலாக இருக்கும். புதிய தலைப்புகளில் புதிதாய் சேர்க்கப்பட்ட இழைகள் இருக்கும். முன்பு ஹாட் டாபிக்ஸ் தான் முகப்பில் வருமாறு கொடுத்து இருந்தோம்.

சூடான தலைப்புகளை பட்டியலிட டேட்டாபேஸ் ஸ்க்ரிப்ட், இருக்கின்ற எல்லாம் தலைப்புகளையும் பார்த்து, எதில் சமீபத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டது என்பதை கண்டறிந்து பட்டியலிட வேண்டும். சமீபத்திய சேர்க்கைகள் என்பது கடைசியாக சேர்க்கப்பட்ட ஒரு 10 பதிவுகளை மட்டும் எடுக்க வேண்டும். இது மிகவும் எளிதானது. சூடான தலைப்புகளுக்கு ஸ்கிரிப்ட் எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகமாக இருந்தது. இதேபோல்தான் சமீபத்திய கருத்துக்களும். இரண்டுமே பட்டியலிடுவதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்கின்றன. முகப்பு பக்கத்தில் இப்போது நிறைய படங்கள் வருமாறு செய்து இருப்பதால், அவை வேறு நிறைய நேரம் எடுத்துக்கொள்கின்றன. இதனால் பக்கங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

பக்கங்கள் திறப்பதற்கு ஆகும் நேரத்தை குறைப்பதற்கான வழிமுறைகளைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கின்றேன். அதற்காக சில மாற்றங்களைச் செய்ய வேண்டி உள்ளது. சர்வர் பெர்ஃபார்மன்ஸ் அதிகரிக்கப்பட்டவுடன், மீண்டும் பழையபடி அவற்றைக் கொடுக்கின்றேன். பத்து நாட்களுக்கு மேல் சர்வருடன் போராடிக்கொண்டிருக்கின்றேன். அதனால்தான் புதிய சேர்க்கைகள் எதுவும் இல்லை. இந்த வேலைகள் முடிந்ததும் நிச்சயம் தேவையான மாற்றங்களைக் கொண்டு வருகின்றேன்.

மேலும் சில பதிவுகள்