சேமியா பாயசம்

தேதி: January 13, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

சேமியா - 200 கிராம்
சீனி - 250 கிராம்
பால் - அரை லிட்டர்
முந்திரி - 10
ஏலக்காய் - 4
நெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
கேசரி பவுடர் - 2 சிட்டிகை


 

சேமியாவை உடைத்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை உடைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் உடைத்து வைத்திருக்கும் முந்திரியை போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் சேமியாவை போட்டு ஒரு நிமிடம் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை போடவும்.
2 நிமிடம் கழித்து கேசரி பவுடர் போட்டு 5 நிமிடம் கழித்து சீனியை சேர்த்து சீனி கரையும் வரை 8 நிமிடம் கிளறி விட்டு அடுப்பிலேயே வைக்கவும்.
8 நிமிடம் கழித்து ஏலக்காய் பொடி தூவி கிளறி இறக்கி விடவும்.
இறக்கி வைத்த பிறகு மேலே வறுத்த முந்திரியை போட்டு பரிமாறவும்.
இந்த பாயசம் செய்முறையை திருமதி. மங்கம்மா அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

How to get a reciepe printout.
regards
Chandran

சூப்பர் ரெசிபி.

Don't worry be happy
Rajalakshmi

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜலக்ஷ்மி சுரேஷ்குமார்

சேமியா பாயசம் அப்படியே சாப்பிட தூண்டுது :) கேசரி பவுடர் சேர்த்திருப்பது நல்லாருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

விருப்பப்பட்டியலில் சேர்த்துட்டேன். அருமையான பாயாசம் அம்மா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பொங்கல் அன்று இந்த பாயசம்தான் செய்தேன், மிக சுவையாக இருந்தது :) அனைவருக்கும் பிடித்திருந்தது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.