முருங்கைக்காய் இறால் கூட்டு

தேதி: January 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கைக்காய் - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மீன் மசாலா - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
இறால் - 100 கிராம்
தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
சீனி - ஒரு தேக்கரண்டி


 

இறாலைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி இரண்டாக வகுந்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முருங்கைக்காய், பச்சை மிளகாய், இறால், பாதி அளவு வெங்காயம், உப்பு மற்றும் மீன் மசாலா போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி போடாமல் ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவிட்டு, மூடியை திறந்து ஒரு முறை கிளறிவிடவும்.
முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் விழுது போட்டு 3 நிமிடங்கள் கிளறிவிடவும்.
முருங்கைக்காய் மசாலாவுடன் தேங்காய் விழுது ஒன்றாக சேர்ந்து சற்று கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, சோம்பு தூள் சேர்த்து ஒரு முறை வதக்கிவிடவும்.
வதக்கியவற்றை முருங்கைக்காய் மசாலாவுடன் சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் சீனி சேர்க்கவும்.
சுவையான முருங்கைக்காய் இறால் கூட்டு தயார்.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முருங்கை இறால் கூட்டு விருப்பப்பட்டியல்ல சேர்த்துகிட்டேன் உங்க குறிப்புகள் நிறைய செய்து பார்த்துருக்கேங்க. இதையும் செய்துட்டு சொல்றேன்

ரொம்ப அருமை. முருங்கையை அப்படி ஒடைச்சு போட்டிருக்குறது ஏன்? நல்லா இருக்கு பார்க்கவே. செய்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா