குந்தன் கொலுசு

தேதி: January 20, 2014

5
Average: 5 (4 votes)

 

குந்தன் ஸ்டோன்ஸ்
சிறிய கோல்டன் மணிகள்
கியர் லாக்
கியர் ஒயர்
கொலுசு கொக்கிகள் - 2
கோல்டன் நிறத்தில் சிறிய வளையம் - 4 (கொக்கிகள் கோர்க்க)
குறடு

 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
உங்கள் காலின் அளவுக்கேற்ப கியர் ஒயரை வெட்டியெடுத்து, ஏதாவது ஒரு முனையில் கியர் லாக்கை கோர்த்து உள்ளே தள்ளிவிடாமல் பாதியில் பிடித்துக் கொண்டு, அந்த ஒயர் முனையை கியர் லாக்கின் உள்ளே விட்டு சிறிய வளையம் போல் செய்து கியர் லாக்கை குறடால் அழுத்திவிடவும்.
அதன் மறுமுனையின் வழியாக மூன்று கோல்டன் மணிகளை கோர்த்து, அதற்கடுத்து ஒரு குந்தன் ஸ்டோனைக் கோர்க்கவும். அடுத்து மூன்று மணிகள், ஒரு குந்தன் ஸ்டோன் என்று மாறி மாறி கோர்க்கவும்.
இதேபோல் தொடர்ந்து 25 குந்தன் மணிகள் வரும் வரை கோர்த்து முடிக்கவும்.
கடைசியாக கியர் லாக்கைக் கோர்த்து, கியர் ஒயரின் முனையை அதனுள்ளே விட்டு வளையம் போல் செய்து கியர் லாக்கை குறடால் அழுத்திவிடவும். மீதமுள்ள ஒயரை வெட்டி எடுத்துவிடவும்.
கொலுசின் இரு முனைகளிலும் இதேபோல் கோல்டன் நிற வளையத்தைக் கோர்க்கவும்.
பிறகு அந்த வளையத்தில் கொலுசு கொக்கியைக் கோர்த்துவிடவும். இதே முறையில் மற்றொரு கொலுசையும் தயார் செய்து கொள்ளவும்.
அழகான குந்தன் கொலுசு ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

குந்தன் கொலுசு நல்லா இருக்கு. செய்யவும் மிக எளிமையாக இருக்கு நான் என் மகளுக்கு செய்து பார்க்க போர்றேன்.

கர்ர்ர்.. டீம். எனக்கு ஒண்ணு கொடுத்திருக்கலாம்ல! ;(
அழ..கா இருக்கு.

‍- இமா க்றிஸ்

டீமு டீமு... இது அநியாயம். எனக்கும் ஒன்னு வேணும் :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குந்தன் கொலுசு செம ப்ரிட்டாய யா கியூட்டா இருக்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கொலுசு அழகாக உள்ளது ,
இமா அக்கா, வனி அக்கா 2 பேரும் ஒரு கொலுசு ஒரு கொலுசுதான் கேக்கிறாங்க அதை 2 பேரும் போட முடியாது அதனால 2 கொலுசும் எனக்கு கொடுங்க நான் போட்டுக்கிறேன். செய்முறை சுலபமாக உள்ளது. நான் செய்து பார்க்கிறேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நாங்க கேட்டது ஒரு ஜோடி ;) ஜோடியை ஒன்னா தான் சொல்லனும், இரண்டுன்னு பிரிச்சு சொல்லப்புடாது. உங்களுக்கும் தனியா ஒரு ஜோடி அனுப்ப சொல்லிடலாம் டீமை. அவங்க ரொம்ப.... நல்லவங்க. கட்டாயம் உங்களுக்கும் தருவாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கொலுசு அட்டகாசமா இருக்கு. சூப்பர் கலர்.என் பொண்ணுக்கு செய்து கொடுக்கனும்னு காலையிலயே ஆர்டர் பண்ணிட்டு போயிட்டாங்க.. :)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கொலுசு ரொம்ப அழகா இருக்கு, நல்ல கலர். வாழ்த்துக்கள் டீம்

குந்தன் கொலுசு செய்ய‌‌ தேவையானவை எங்கு கிடைக்கும்?

Ithu enakum migavm Payanulathai Irukirathu.
ithil nengal solum anaithum Sulapamaga ulathu. nandri

தலைப்பைப் படிச்சதும் என்னவாக இருக்கும் என்று அறிந்துகொள்ளும் ஆவலில் உள்ளே வந்தேன். நான்ஸி ஏன் இங்கே ஸ்பூன் மிரர்னு எழுதி இருக்கீங்க!! என்ன அது!!

‍- இமா க்றிஸ்

eanakum oru jodi plssssss....