naalai en magaludaiya school a oru competition iruku.that title is "cooking without fire"..nerupilamal seium unavuhal thaangaluku ethuvum therinthirunthaal thayavuseithu enaku uthavavum.
naalai en magaludaiya school a oru competition iruku.that title is "cooking without fire"..nerupilamal seium unavuhal thaangaluku ethuvum therinthirunthaal thayavuseithu enaku uthavavum.
நெருப்பில்லாத சமையல்
இப்படி தலைப்பைக் கொடுத்துவிட்டு போட்டியின்போது சிறிது குழப்பி விடுவார்கள். எந்தப் பொருளை பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் தெளிவாக கொடுத்து இருக்க வேண்டும். பிஸ்கட், ப்ரட் போன்ற சில ரெடிமேட் பொருட்களுக்கு அனுமதி உண்டா என்பதை கேட்டு உறுதி செய்துகொள்ளுங்கள். அதேபோல்தான் ஐஸ்கட்டியும். உறைய வைப்பதற்கு பயன்படுத்துவார்கள். நான் நடுவராய் சென்றிருந்த ஒரு சமையல் போட்டியில் இவற்றை பார்த்து இருக்கின்றேன்.
நெருப்பில்லாத சமையல் என்றால் முதலில் வருவது சாலட் வகைகள்தான். அடுத்து ஜூஸ் வகைகள். இளநீர், தேன், இஞ்சி எல்லாம் கலந்து ஒருவர் செய்திருந்த பானம் ஒரு பரிசு பெற்றதாக நினைவு.
அவலை ஊற வைத்து சீனி, தேங்காய்பூ போட்டு பிசறி இனிப்பு போல் செய்யலாம். ஊற வைத்த அவலில் மசாலாக்கள் சேர்த்து காரமாகவும் செய்யலாம். ஊற வைத்த அவலைக்கொண்டு நிறைய செய்யலாம். ப்ரெட், பிஸ்கட் அலோவ்டு என்றால் இன்னும் நிறைய செய்யலாம்.
பொரி, பொரி அரிசி மாவு இதைக் கொண்டெல்லாம் உணவுகள் செய்து வைத்திருந்தார்கள். இவை எல்லாம் விதிகளுக்குள் அடங்குமா என்பது சந்தேகமே. விதிமுறைகளைத் தெளிவுபடுத்தாவிடில் இது போன்ற குளறுபடிகள் நடக்கும். நான் சென்ற போட்டியில் நிறைய நடந்தது.
cooking without fire
bred ,biscuit ivatrirku anumathi undu..ivatrai vaithu ethenum oru receipe seyya iyaluma
faizulnoori
http://www.arusuvai.com/tamil/node/25048
மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் தட்டிப் பாருங்கள்,இதே தலைப்பிர்க்குறிய விஷயங்கள் உள்ளன.