எதிர் வீட்டு லெட்சுமி - M. சுபி

அழகான நேரம் விடிந்தும் விடியாத காலை வேளை எந்திரிக்கலாமா வேண்டாமான்னு புரண்டு புரண்டு படுக்கும் போது டம் டும், இதை அங்க வை, இங்க வை, ஏய் பார்த்து, மெதுவா வைன்னு சத்தம், என்னாடானு யோசிச்சா எதிர்ல ஒரு சின்ன வீடு காலியா இருந்தது, குடி வராங்க போலனு யூகிச்சு விடிஞ்சதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்னு கொஞ்ச நேரம் படுத்துட்டு எழுந்து வழக்கம் போல காலை வேலை செய்ய ஆரம்பிச்சிட்டேன்.

ஒரு நாள் போச்சு எதிர் வீட்ல யாரும் கண்ணுல படல, 2 வது நாள் காலைல ஒரு பெரிய மனுஷி 8, 9 வயசு இருக்கும் அப்படி இப்படி தண்ணி தெளிச்சு கூட்டி கோலம் போட்டாங்க, சும்மா சொல்ல கூடாது கோலம் அழகாவே இருந்தது. அப்புறம் ஒரு அம்மா குடம் எடுத்துக்கிட்டு தண்ணி பிடிக்க வந்தாங்க அவங்க தான் அந்த பெரிய மனுஷியோட அம்மா, பிறகு ஒரு பையன் பேச்சுக்குரல் ஏண்டி அதை எடுத்த, என்னை தொல்லை பண்ற, உடனே அம்மா இங்க பாருமா அண்ணன் அடிக்கிறான், அண்ணன் அடிக்கிறான் நல்ல மரியாதை அப்புறம் ஒரே பரப்பரப்பு முதல்ல பெரிய மனுஷி ஸ்கூல் க்கு போனாங்க, பின்னாடியே அந்த பையனும் ஸ்கூலுக்கு போய்ட்டாங்க.

பிறகு அம்மானு யாரோ கூப்பிட்டாங்க இந்தாங்கமா சாவி எங்க தம்பி, பாப்பா வந்தா கொடுங்கனு அவங்க அம்மா வெளியே போய்ட்டாங்க, என் கூட பழக்கமே இல்ல இருந்தாலும் என்னை நம்பி கொடுத்தாங்க, என் முகத்தைப் பார்த்தே நல்லவங்கனு முடிவு பண்ணியிருப்பாங்க, சரி விடுங்க விடுங்க, நானே யூகிச்சேன் வேலைக்கு போராங்க போலனு, 4 மணி இருக்கும் அந்த தம்பி வந்து சாவி வாங்கிட்டு கதவை சாத்திட்டாங்க, கொஞ்சம் நேரம் கழிச்சு ஏய் அண்ணா கதவை திறடா, எவ்ளோ நேரமா நிக்கிறேனு சத்தம். யாருனு பார்த்தா அந்த வீட்டு சின்ன மேடம் தான், பிறகு அந்த பையன் கதவை திறந்த உடனே மேடம் ஸ்கூல் பேக்கை வச்சாங்க, ட்ரெஸ மாத்திட்டு சாயங்காலம் கோலம், உள்ளே போய் உனக்கு டீ வேணுமா, காபி வேணுமானு கேள்வி, நானும் எட்டி பார்க்கிறேன் என்னதான் பண்ணுதுனு, பொறுமையா ஸ்டவ் பத்த வச்சு, அழகா டீ போட்ட விதம் இருக்கே, ஏழு கழுதை வயசாச்சு எனக்கே இன்னும் வரல, அண்ணன் வெளியெ போய்டான். மேடம் சத்தமா படிச்சாங்க, அப்புறம் டிவி ல சத்தமா பாட்டை வச்சு பாட்டு பாடிட்டு இருந்தாங்க, வயசான காலத்துல தனியா இருந்த எனக்கு இவங்க வீடு கொஞ்சம் ஆறுதலா இருந்தது. 7 மணிக்கு அம்மா வந்தாச்சு ஸ்கூல்ல நடந்தது, சாயங்காலம் அண்ணன் கதவை திறக்காதது எல்லாத்தையும் ஒப்பிச்சிட்டு திங்க தீணி வேணும்னு சொல்லி காசு வாங்கிட்டு கடைக்கு போயிட்டு வந்தாச்சு. இப்படியே 1 வாரம் போயிருச்சு.

ஒரு நாள் வெள்ளிக்கிழமை சாயங்காலம் மேடம் அழகா செம்மண் கோலம் போட்டாங்க, விளக்கு ஏத்தினாங்க, சாமி பாட்டு பாடினாங்க சின்ன வயசுல அவ்ளோ பக்குவம் அவங்க அம்மா சொல்லி கொடுத்து இருப்பாங்க போல, அடுத்து மணி சத்தம் சூடம் காட்டினாங்க மேடம், திடீர்னு சூடம் கீழ விழுந்து நெருப்பு பிடிச்சிருச்சு அதை அவ அணைக்கும் போது நான் உள்ளே ஓடி போயி அணைச்சேன். மேடம் பயந்து அழுதுட்டாங்க, அப்புறம் நான் மெல்ல உன் பேரு என்னமானு கேட்டேன், பதில் என்னவா இருக்குமுனு நினைக்கிறீங்க பேரை சொல்லும் தானே நினைச்சீங்க அதான் இல்ல, என் பேரு என்னவா இருந்த உங்களுக்கு என்னா, நானே எங்க அம்மா திட்டுவாங்க, அடிப்பாங்கனு பீலிங்ல இருக்கேன் நீங்க வேற, நான் மனசுகுள்ள இது உனக்கு தேவையா அலமேலுனு நினைச்சுக்கிட்டேன். ஆனா அந்த பாப்பா கோபத்துல நியாயம் இருந்தது. ஒரு அழகு இருந்தது. இருந்தாலும் பரவாலனு ஏண்டி குழந்தைனு கேட்டு முடிக்கிறதுக்குள்ள நான் ஒண்ணும் குழந்தை இல்ல குழந்தைனா நடக்காது குட்டியா இருக்கும், நான் பெரிய பொண்ணு என் பேரு லெட்சுமி ஆமா உங்க பேரு என்னா பட்டாசு வெடிச்சு முடிச்சிருச்சு. என் பேரு அலமேலுனு பவ்யமா பதில் சொன்னேன். (ம்ம் என் மாமியார்க்கு கூட இப்படி பயந்தது இல்ல)

அப்புறம் ஒரு தயக்கத்தோட மெல்ல லெட்சுமி உன் தோப்பனார் எங்கே, அப்படினா என்னா அலமேலு சாரி சாரி எங்க அம்மா திட்டுவாங்க அப்படினா என்ன மாமி, அப்பாடி எனக்கு மரியாதை உண்டு. அதுவா உன் அப்பா எங்கே, அவங்க ஊர்ல இருக்காங்க, ஏன் அவர் மட்டும் அங்க இருக்காரு, அதுவா எங்க அப்பாக்கும், அம்மாக்கும் சண்டை, எங்க அம்மாக்கு ரொம்ப உடம்பு சரியில்லையா அதனால எங்க அப்பா அம்மாவ அடிச்சு வெளியே அனுப்பிட்டாங்களா, எங்க அம்மா சாகலாம்னு எனக்கும், எங்க அண்ணனுக்கும் விஷம் கொடுத்து சாப்பிட சொன்னாங்களா 2 பேரும் தள்ளிட்விட்டு நாங்க இருக்கோம்மா, நாங்க உங்களை காப்பாத்துறோம் சொன்னோமா எங்க அம்மா அழுதுட்டே விஷத்தை கீழ போட்டுட்டு எங்களை கட்டி பிடிச்சுகிட்டாங்க. ஏன் உங்க அம்மாக்கு என்னா, அதுவா வயிறு வலி இப்ப மாத்திரை சாப்பிட்டும், நாங்க சாமி கிட்ட வேண்டியும் சரி ஆகிடுச்சு. எங்க அப்பாவ எனக்கு பிடிக்காது, நாங்க எங்க தாத்தா வீட்டுக்கு வந்துட்டோம். ஏன் இப்ப இங்க வந்தீங்க, அதுவா எங்க சித்தி சாப்பாடு போடாமா எங்களை அடிச்சாங்களா அதான் எங்க அம்மா கோவமா இங்க வந்துட்டாங்க.

அம்மா வேலைக்கு போறாங்க, நானும் எங்க அண்ணனும் படிச்சு பெரிய வேலைக்கு போயி எங்க அம்மாவ உட்காரவச்சு ராணி மாதிரி பாத்துப்போம்னு மழை பெய்து ஓய்ந்த மாதிரி மேடம் பேசி முடிச்சிட்டாங்க. எனக்கு கண் கலங்கி நின்னது ஆனா காட்டிக்கல, அப்புறம் உங்க அம்மா வந்தா கூப்பிடு நான் வர்றேன் சொல்லிட்டு வெளியே வந்தேன், இந்த சின்ன வயசுல இந்த குழந்தைக்கு எவ்ளோ கஸ்டம், பரவால பகவான் அந்த அம்மாக்கு நல்ல புருஷனை தராட்டியும் இந்த மாதிரி குழந்தையை கொடுத்தாரேனு மனசுல நினைச்சுக்கிட்டேன். அவ சொன்னதுலேந்து அவ கண்டிப்பா நல்லா வருவா, அதுல எந்த சந்தேகமும் இல்ல.

ம்ம் அப்புறம் ஒண்ணு தோணுச்சு குழந்தைங்ககிட்ட பேசும் போது ரொம்ப கவனமா பேசனும்னு, ம்ம் ஏன் ஆத்துக்காரர் கூட இப்படி பேசினது இல்ல. கண்ணு கெட்டதுக்கு அப்புறம் தான் சூரிய நமஸ்காரம் பத்தி தெரிஞ்சது என்ன புரோஜனம், எனக்கு வாங்கி கட்டினதுக்கு அப்புறம் தான் அது புரிஞ்சது. ம்ம் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ!
சொல்றேன், பொறுங்க . . .

Comments

என்னால் நம்ப முடியவில்லை,
என்னுடைய எழுத்தும் இப்படி வெளிவரும் என்று,

என் கதையை தேர்வு செய்து வெளியிட்ட அட்மின் பாபு அண்ணாவிற்க்கும், அறுசுவை டீம் ற்க்கும் ரொம்ப நன்றி.

அதுவும் கதையும், கவிதையும் ஒரே நேரத்தில் இணையத்தில் வெளிவந்தது என்னால் நம்ப முடியவில்லை, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கதை அருமை, சொன்ன விதம்... அதாவது வார்த்தைநடை ரொம்ப நல்லா இருக்கு. யாரோ நம்ம கிட்ட பேசுறது போல. ஒன்னே ஒன்னு தான் சொல்லனும்... யார் எதை சொன்னாங்கன்னு திரும்ப படிக்கும் போது தான் புரியுது. ஸ்பெஸ், கேப் கொஞ்சம் கொடுத்து டயலாக்ஸை தனியா காட்டி இருந்தா படிக்க இன்னும் சுவாரஸ்யமா இருந்திருக்கும்னு தோணுது. நானும் கதை எழுதுறதுல சூப்பரில்ல சுபி... படிச்சத்ம் நல்ல கதை, இன்னும் நல்லா ப்ரெசண்ட் பண்ணிருக்கலாம்னு தோணுச்சு, அதனால் சொன்னேன். சூப்பரான குட்டி... மனசுல நின்னுடுச்சு. :) தொடர்ந்து பல கதைகள் படைக்கனும், நாங்க படிக்கனும். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம்ப முடியவில்லை...இல்லை.. இல்லை..
கதை சூப்பர் சுபி.. நானும் வனி சொன்னதை வழி மொழிகிறேன் சுபி..)
//அப்புறம் ஒரு தயக்கத்தோட மெல்ல லெட்சுமி உன் தோப்பனார் எங்கே, அப்படினா என்னா அலமேலு சாரி சாரி எங்க அம்மா திட்டுவாங்க // இந்த இடத்துல நான் இன்னொரு வாட்டி படிச்சு தான் புரிஞ்சுகிடேன் சுபி.. தப்பா நினைக்காதீங்க சுபி.. :)
//அப்புறம் ஒண்ணு தோணுச்சு குழந்தைங்ககிட்ட பேசும் போது ரொம்ப கவனமா பேசனும்// நல்ல மெசேஜ் ..
// ஏன் ஆத்துக்காரர் கூட இப்படி பேசினது இல்ல. // ஆமா எங்க வீடுடுல நடக்கிறது உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது சுபி...;) ..:)
அருமையா எழுதிறீங்க.. இப்படியே கண்டினியூ செய்ங்க.. வாழ்த்துக்கள் சுபி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வனி அக்கா கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி. அதுவும் அதுல இருக்க தப்ப சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

ம்ம் ஆமாக்கா படிக்கும் போதும் தான் எனக்கு தெரியுது.
இது அவசர அவசரமா டைப் பண்ணி அனுப்பினேன் அக்கா, திருத்திக்கிறேன் அக்கா.

நீங்க கதை எழுதுறதுல நிஜமா சூப்பர் தான் .

நல்ல கதை, இன்னும் நல்லா ப்ரெசண்ட் பண்ணிருக்கலாம்னு தோணுச்சு, அதனால் சொன்னேன்.நீங்க சொல்லிட்டீங்கள இனி இன்னும் நிறைய கதை நல்ல எழுத முயற்சி பண்றேன்.

வனி அக்கா எனக்கு இதான் வேணும். Thanks ka

போங்க வாங்க வேணாம், சுபி போ, வா போதுமே Please

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுமி அக்கா வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி.

அதுல இருக்க சில மைனஸ சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

sorry Akka இது அவசர அவசரமா டைப் பண்ணி அனுப்பினேன் அக்கா,
நீங்க சொல்லிட்டீங்கள இனி இன்னும் நிறைய கதை நல்ல எழுத முயற்சி பண்றேன்.

சுமி அக்கா தப்பா நினைக்க ஒண்ணுமே இல்ல, உங்க வீட்ல மட்டும் இல்ல
நீங்க எங்க அம்மா கிட்ட கேளுங்க, அவங்க என்னை பத்தி ரொம்ப புகழுவாங்க

நீங்களும்,
போங்க வாங்க வேணாம், சுபி போ, வா போதுமே அக்கா

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுமி அக்கா வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி.

அதுல இருக்க சில மைனஸ சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

sorry Akka இது அவசர அவசரமா டைப் பண்ணி அனுப்பினேன் அக்கா,
நீங்க சொல்லிட்டீங்கள இனி இன்னும் நிறைய கதை நல்ல எழுத முயற்சி பண்றேன்.

சுமி அக்கா தப்பா நினைக்க ஒண்ணுமே இல்ல, உங்க வீட்ல மட்டும் இல்ல
நீங்க எங்க அம்மா கிட்ட கேளுங்க, அவங்க என்னை பத்தி ரொம்ப புகழுவாங்க

நீங்களும்,
போங்க வாங்க வேணாம், சுபி போ, வா போதுமே அக்கா

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கதை ரொம்ப நல்லா இருக்கு சுபி.. இதை பொல் மேலும் பல படைப்புகளை நீங்கள் வலங்கிட என் வாழ்துக்கள்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

கதை நல்லா இருக்கு சுபி முதல் படைப்பு முத்தான படைப்பு. சுட்டி பெண்ணை சித்தரிச்சது நல்லா இருந்தது. தொடர்ந்து எழுதுங்க

ஹாய் மை டியர் ப்ரண்ட் ஃபரி உன்னோட வாழ்த்துக்கு தாங்ஸ் டா

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஹாய் உமா அக்கா உங்க பாராட்டுக்கு நன்றி.

தொடர்ந்து எழுதுங்க, கண்டிப்பா க்கா

நீங்களும் திருச்சியா க்கா

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி அருமை அருமை :)
கதைய ஒரே மூச்சில படிச்சிட்டு நிமிர்ந்தேன்.. அந்த குட்டி பொண்ண அழகா சொல்லி இருக்கீங்க சுபி :) இன்னும் நிறைய எழுதுங்க..
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள் அக்கா மறுபடியும் ரொம்ப நன்றி,

ம்ம் ஆமாம் மேக்ஸிமம் இந்த மாதிரி சுட்டி பெண் எல்லா வீட்லேயும் இருப்பாங்கள்ல அதான் அதை வச்சு ஒரு சின்ன கதை.

உங்க வாழ்த்துக்கள் எல்லாம் எனர்ஜி பானம் சாப்பிட்ட மாதிரி இன்னும் நல்லா எழுத முயற்சி பண்றேன் க்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கதை நல்லா இருக்கு சுபி எனக்கு குழந்தைகள் கதைனா ரொம்ப பிடிக்கும். இந்த கதை அப்பா இல்லாமல் கஸ்டபடுற குழந்தைகள். அந்த அம்மாவுக்கு நல்ல புருசனை தராட்டியும் நல்ல குழந்தையை கொடுத்தாரேனு மனசுல நினைச்சுக்கிட்டேன். இந்த வரிகள் மிகவும் அருமை.

ஹாய் மை ப்ரண்ட் பாலா உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி டா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அன்பு சுபி,

அறுசுவையில் உங்க படைப்புகளோடு முதலடி எடுத்து வச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

கதை ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

கதை ரொம்ப நல்லாயிருக்குங்க, கதையில் வரும் குட்டிப்பெண்ணை விவரித்த விதம், கருத்தும் ரொம்ப அருமைங்க,
மேலும் பல கதைகள் எழுதிட வாழ்த்துக்கள்ங்க சகோதரி :-)

நட்புடன்
குணா

குணா அண்ணா,

சுபி சகோ பார்த்ததுமே முடிவு பன்னிட்டேன் நீங்க ங்ங்க தான்
படித்து பின்னோட்டம் கொடுத்தற்க்கு நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

nalla kathai sila nerangalil periyavargalai vida siriyavargal vazhvil avargalin lachiyagalai migavum elithil therinthu seyalpadugirargal enbadharkanna utharanam ungalin padaippu vazhthukal melum pala padaippukuku

வாழு, பிறரை வாழவிடு, நீ வாழ பிறரை கெடுக்காதே.வாழ்க வளமுடன்.sunandhavikram

ஹாய் சுனந்தா உங்க வாழ்த்திற்கு நன்றி,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கதை பிடித்திருக்கிறது சுபி. எழுத்து நடை நன்றாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் பேசும் இடங்களை மட்டும் மேற்கோள் அடையாளமிட்டுக் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
தொடர்ந்து எழுதுங்கள். என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

இமா அக்கா,
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, ம்ம் இன்னும் சிறப்பாக எழுதுறேன்.

உங்க லேப் லாப் சரி ஆச்சா இமா அக்கா,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சீதாம்மா,
உங்க வாழ்த்துக்கும், ஆசிர்வாதத்திற்க்கும் நன்றி மா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி ,
கதை அருமை டா, குட்டி பெண் பத்தி நல்லா சொல்லி இருக்கம்மா,

இன்னும் நிறைய கதை எழுதுடா, வாழ்த்துக்கள்.

சுபி கதை அழகா சொல்லி இருக்கீங்க‌, குட்டி பொண்ணு பேச்சு மனசுக்குள்ளயே நிக்குது....

வாழ்த்துக்கள் தொடருங்கள் கதை பயணத்தை....

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணு அக்கா,
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, ம்ம் இன்னும் சிறப்பாக எழுதுறேன் அக்கா .

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஹாய் சுபி, எப்படி இருக்கீங்க?? கதையும், கருவும், சொன்ன விதமும் ரொம்ப அருமை. நீங்க சொன்னது 100க்கு 100 உண்மை. இப்போ இருக்கற குழந்தைங்க கிட்ட கவனமா பேசனும்.. இல்லைன்னா, இப்படி தான் அலமேலு மாமிக்கு கிடைத்த மாதிரி பதில் கிடைக்கும்... :P (அனுபவம் பேசுகிறது.. எனக்கு 3 வயதில் ஒரு பெண் குழன்தை இருக்கிறாள். அவளிடம் பல முறை 'பல்பு' வாங்கிய அன்னுபவம் உண்டு... :(. இப்போது, அவளுடன் பேசும்போது மிகவும் கவனமாக இருக்கிறேன்.. :()

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஹாய் சபி,
உங்க‌ வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப‌ நன்றி,
ம்ம் ஆமாம் இப்ப‌ இருக்க‌ குழந்தைங்க‌ ரொம்ப‌ அறிவா இருக்காங்க‌,
ஓ உங்க‌ பாப்பா அப்படியா, உங்க‌ பாப்பா க்கு என் சார்பா கிஸ் கொடுத்துருங்க‌.

நான் நல்லா இருக்கேன், நீங்க‌ எப்படி இருக்கீங்க‌?
இது தான் நான் உங்க‌ கிட்ட‌ 1st டைம் பேசுறேன், நீங்க‌ என்னை நலம் விசாரிச்சது எனக்கு ரொம்ப‌ சந்தோசமா இருக்குங்க‌ சபி,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

kathai superma.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து..

ஹாய் சத்யா,
உன்னோட வாழ்த்துக்கு தாங்ஸ் டா, இன்னும் நிறையா எழுதிட்டா போச்சு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கதை நன்று.. அந்த குட்டி மேடம் பற்றி சொல்லும்போது எங்க வீட்டு குட்டி மேடம் நினைவுக்கு வராங்க...என் பொண்ணும் இப்படிதான் நான் வரும்முன் அண்ணனுக்கு டீ போட்டு குடுத்து பாத்திரம் கழுவி வச்சிடுவாங்க...