மட்டர் பனீர் மசாலா

தேதி: November 15, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பனீர் - 200 கிராம்
பட்டாணி - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
மிகப் பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 10
கொத்தமல்லி இலை - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

பட்டாணியை 7 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
பனீரை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பனீரை வறுத்துக் கொள்ளவும்.
முந்திரியை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
பின் தக்காளி, நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின் அத்துடன் பொரித்த பனீர், வேகவைத்த பட்டாணி, அரைத்த முந்திரி விழுது, உப்பு, கரம் மசாலாத்தூள், சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலக்கவும்.
கொதிவந்த பின் நெய், கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்