பட்டிமன்றம் 94 - அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்?

என்னவோ இன்னைக்கு தான் எனக்கு மீண்டும் மூச்சு விடுவது போன்ற உணர்வு !!! எல்லாம் பட்டிமன்றம் அப்படின்னு ஒரு தலைப்பை முகப்பில் கொண்டு வர போகும் ஆர்வம்னு கூட சொல்லலாம். எத்தனை விஷயங்கள் அறுசுவையில் வந்தாலும், எனக்கு ரொம்ப பிடிச்ச பகுதி இது தான். இதை பாதியில் நிறுத்தி லீவ் விட்ட நேரமோ என்னவோ வனியும் லாங் லீவில் போயிட்டேன். எப்போ எப்போன்னு சில தோழிகள் கேட்ட போதெல்லாம் எனக்கும் ஏக்கமாகவே இருந்தது. ஆரம்பிச்சுட்டேன் புதிய தலைப்போட மீண்டும்... இனி இது தடைபடாமல் 100வது பட்டிமன்றத்தை தொடுவது தோழிகள் உங்கள் கையில் தான் இருக்கின்றது. :) வருக, வாதங்களை தருக, ஆதரவு தருக.

தலைப்பு: அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்? கிராம சூழலில் வளர்ந்த பெண்களா இல்லை நகரத்தில் வளர்ந்த பெண்களா?

தலைப்பை தந்தமைக்கு நன்றி லாவி (திருமதி. லாவண்யா மூர்த்தி)

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

சீக்கிரமே துவங்க காரணமாக இருந்த தோழிகள் கல்பூ, சீதா மற்றும் ரேணுவுக்கு மணமார்ந்த நன்றிகள். :)

அனைவரும் வந்து கலந்து கொண்டு பட்டியை சுவாரஸ்யமானதாக்கிட வேண்டுகிறேன். அன்புடன் அழைக்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போதுதான் முதல் முறையாக நான் அறுசுவை பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறேன் . அனைவருக்கும் வணக்கம் .அருமையான தலைப்பு வனிதா. இந்த கால கட்டத்த்தில் அமைதியை கடைபிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் கிராமத்து பெண்கள் என்றே பலரும் சொல்லுவார்கள் .

ஆனால் நான் அப்படி அல்ல , நகரத்து பெண்களே இப்போது பொறுமையை , அமைதியை தக்க தருணங்களில் கையாண்டு வல்லவர்கள் ஆகின்றார்கள் என்று சொல்ல வந்துள்ளேன் . நகரத்தில் வளருபபர்கள் நாளாந்தம் நிறைய கேள்விப்படுகிறார்கள் . தொலைக்காட்சி வானொலி இணையம் போன்ற ஊடகங்களினால் உள்வாங்கப்பட்டிருக்கியார்கள் . உலகத்தில் என்ன நடக்கிறது , சில பல இக்கட்டான சூழ்நிலைகளை கையாள்வது எப்படி என்பது பற்றிய அடிப்படை அல்லது மிக சிறிய அளவு ஞானமாவது இருக்கும். இதை வைத்து பொறுமையாக அமைதியாக இருந்து காரியங்களை வெல்லவும் சிக்கல்களை தீர்க்கவும் அவர்களால் தான் முடியும் என்பது என் வாதம். இங்கே அமைதி பொறுமை என்பது அநியாயத்தை அப்பிராணித்தனமாக ஏற்று கொள்ளுவதாகாது என்பதையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

இத்துடன் எனது முதல் வாதத்தை முடித்து மற்றவர்களின் வாதத்துக்காக காத்‌து இருக்கிறேன்.

முதலில் நெடுநாளைய விடுப்பிற்கு பின் துவங்கிய பட்டிக்கு வாழ்த்துக்கள்....நடுவர் வனிக்கும் வாழ்த்துக்கள் மேலும் பாராட்டுக்கள்.....:-)
அருமையான தலைப்பு கொடுத்த லாவிக்கும் நன்றிகள்....
இனி தலைப்பிற்கு வருகிறேன்...காலையில் அலாரம் அடிக்கும் முன்பே எழுந்து அலாரம் அடிச்சுடுச்சா இல்லையான்னு துவங்கி,சமையை பண்ணி அனைவரையும் எழுப்பி தான் கிளம்பி மற்றவர்களை கிளப்பி ,வீடு பெறுக்கி ஆபீஸ் போயி வேலைபார்த்து இரவு சமையல் முடித்து பிளளகளுக்கு பாடம் புகட்டி தூங்க வைக்கும்வரை நகரத்து பெண்கள் டென்ஸனுடனே செயல்படுகிறார்கள்..
சில அல்ல பல சமையங்களில் வீட்டில் காரணமே இல்லாமல் வாக்குவாதம்,சண்டை நிகழும்.இது பொறுமையிலந்த நகரத்து பெண்கள் மத்தியில் சகஜமாகிவிட்டது.
இதிலிருந்தே நடுவருக்கு விளங்கியிருக்கும் நகரத்து பெண்களிடம் பொறுமை குறைவுன்னு...மேலும் பல வாதங்களுடன் வருகிறேன் விரைவில்......காத்திருங்கள் நடுவரே..

ரொம்ப நாள் லீவுக்கு அப்பறம் பட்டியை துவக்கி எங்களை குஷி படுத்திய நடுவருக்கு ஒரு வணக்கமுங்க. மற்றும் பொறுமையா தலைப்பு யோசிச்சு குடுத்த நம்ம லாவிக்கும் ஒரு வணக்கமுங்க.

நம்ம ஓட்டு நிச்சயமா நகரத்து பெண்களுக்குதாங்க... 50 சானலையும் அதில் வர சீரியல்களையும் பார்க்கும் பொறுமை யாருக்கு இருக்குனு நீங்க யோசிச்சிட்டே இருங்க நடுவரே... நம்ம தரப்பு நியாய்த்தை அடுத்த பதிவில் நான் விளக்கமா சொல்லுறேன்..

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

Ennada idhu en iniya tamil makkaley potutu tamila kanomnu theadringal naduvarey ??en kaipesiyil tamil thattachu seya mudiyavillai.arumaiyana thalaippu kodutha naduvaruku vaazthukkal.porumaium.amaithium pirantha idam gramam than.en gramathu sagotharigalidam padipparivu illaiyendralum pakutharivu undu .yaaridam nam porumaiyaum amaithiyaum katrukondom naduvarey na thaayidam irunthuthaney.nam amma yaaridam katrukkondal aval thaayidam...avargalellam nagara vasigal illai enbathu naduvaruku therium...en vaatham grama pengalukuthan enbathai mun vaikiren...

All is well

bharathiku oru kannama.valluvanukoru vaasugi.kovalanukoru kannai ippadi porumaiyilum amithiyulum sarithirathi idam pettravargal engal grama pengal..ulagamey ariyatha pothum uyarntha sarithirathil idam pidikka villaiya??illai sarithiramthan padaikka villaiya??indralavum apdithan vazkirargal..uduthum udail kuda maatramillai kandangi enum pudavaithan uduthugirargal..antha pudavaiyai udutha mudhalil porumai enbathu irukiratha nagar pengaluku??

All is well

Arusuvai patti mandrathirku vanakkam.

Nan gramathu pengal sarbil en pathivai idugiren.
Nagarathu pengalaivida adhalavil gramathu pengalum velaikkupogirargal.Ingum ella vidhamana thontharavugalum undu.Iruppinum ivargal ellavarum porumaiudan kaiaalgirargal.Kaaranam ivargal veetaium,velaium samammaga paarthukolgirargal.vidiyarkaalaiyil neerathodu ezhuvathu ivargalin sirappu.Andha vidiyarkaalaiai polvae avargalum porumaiudanum,amaidhiuanum thangalin kadamaigalai muditthu vittu velaikkum seekiramae poi,seekiramae thirumbugirargal.Idhanaal yaarukkum badhippu illai.Sandaium illai.veen vaakku vadhangalum illai.Enavae itthaya thramai padaitha gramathu pengalae amaithi mattrum porumaiyanavargal.

Nandry.

No pains,No gains

ANANTHAGOWRI.G

வருக வருக... முதல் பதிவு தந்திருக்கீங்க, முத்தான பதிவு தந்து துவக்கி வெச்சிருக்கீங்க, நன்றி :)

நகரத்து பெண்களேன்னு முடிவா சொல்லிட்டீங்க. உண்மை, பல விஷாங்களை பார்த்தும் பழகியும் ரொம்பவே அனுபவத்தால் பொறுமையை கடை பிடிக்கறவங்க நகரத்து பெண்கள்.

/அமைதி பொறுமை என்பது அநியாயத்தை அப்பிராணித்தனமாக ஏற்று கொள்ளுவதாகாது// - கட்டாயம் அந்த அப்பாவித்தனம் பொறுமை இல்லை.

தொடருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்கடா உங்களை கொஞ்ச நாளா அறுசுவை பக்கம் காணோமே பட்டிக்கு வருவீங்களோ இல்லையோனு பயந்துட்டே இருந்தேன். பார்த்ததில் மனசுக்கு மகிழ்ச்சி. :) நன்றி ரேணு. நீங்க கிராமத்து பெண்களே கட்சியா? ஜனனி... எதிர் அணி ரெடி ;)

அதிக வேலை காரணமா, டென்ஷனா இருக்கும் நகரத்து பெண்கள் எப்படி பொறுமையா இருப்பாங்க? நியாயமான கேள்வி தான். எதிர் அணி விளக்கம் தருவாங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்த்து ரொம்ப நாள் ஆனவங்களை எல்லாம் இப்படி பட்டியில் பார்ப்பது மனதுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி தருகிறது... நன்றி பிரேமா :)

நகரத்து பெண்களா? இப்ப தான் எதிர் அணி மக்கள் வேலை அதிகம், பொறுமை இல்லைன்னு சொன்னாங்க... நீங்க 50 சானல்ல சீரையல் பார்க்கறாங்கன்னு சொல்றீங்க!!! வெயிட்டிங்... எப்படின்னு தெரிஞ்சுக்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்