பட்டிமன்றம் 94 - அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்?

என்னவோ இன்னைக்கு தான் எனக்கு மீண்டும் மூச்சு விடுவது போன்ற உணர்வு !!! எல்லாம் பட்டிமன்றம் அப்படின்னு ஒரு தலைப்பை முகப்பில் கொண்டு வர போகும் ஆர்வம்னு கூட சொல்லலாம். எத்தனை விஷயங்கள் அறுசுவையில் வந்தாலும், எனக்கு ரொம்ப பிடிச்ச பகுதி இது தான். இதை பாதியில் நிறுத்தி லீவ் விட்ட நேரமோ என்னவோ வனியும் லாங் லீவில் போயிட்டேன். எப்போ எப்போன்னு சில தோழிகள் கேட்ட போதெல்லாம் எனக்கும் ஏக்கமாகவே இருந்தது. ஆரம்பிச்சுட்டேன் புதிய தலைப்போட மீண்டும்... இனி இது தடைபடாமல் 100வது பட்டிமன்றத்தை தொடுவது தோழிகள் உங்கள் கையில் தான் இருக்கின்றது. :) வருக, வாதங்களை தருக, ஆதரவு தருக.

தலைப்பு: அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்? கிராம சூழலில் வளர்ந்த பெண்களா இல்லை நகரத்தில் வளர்ந்த பெண்களா?

தலைப்பை தந்தமைக்கு நன்றி லாவி (திருமதி. லாவண்யா மூர்த்தி)

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

வனி அக்கா,
என்னோட கருத்து நகரத்து பெண்கள் தான்,
எவ்ளோ கஸ்டம் வேலைக்கும் போய்ட்டு, வீட்டையும் பாத்துக்கிட்டு எல்லா பிரச்சனையையும் பொறுமையா சமாளிச்சு அதுலேந்து மீண்டு வராங்க.

கிராமத்து பெண்கள் பொறுமையா இருக்காங்க அப்படினா அவங்களுக்கு பெரிய அளவுல டென்சன் ஏற்படுறது இல்ல.

அப்படி வந்தாலும் அவங்க அதை சமாளிக்க முடியாம சிரம படுறாங்க, ஆனா நகரத்து பெண்கள் அதையும் சமாளிக்கிறாங்க.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அடபாவி... வரும் போதே தமிங்கிலமா??? :’( இது நியாயமா? இருந்தாலும் இந்த பட்டியில் தவிர்க்க முடியாத சிலருக்கு விட்டு தரேன். மற்றவர்களுக்கு படிக்க சிரமம் என்பது தான் பெரிய பிரெச்சனை சான். முடிஞ்சா லேப்டாப் பயன்படுத்துங்க. ஆனாலும் முதன் முதலில் பட்டியில் பதிவிட்ட உங்க ஆர்வம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :) தேன்க்யூ தேன்க்யூ. அடுத்த பட்டிக்குள் சிஸ்டம் பயன்படுத்த துவங்கிடனும். ஓக்கே? ;)

நீங்க சொன்னவங்க எல்லாம் கிராமத்து ஆட்களா? எனக்கு தெரியலயே ;) ஆனா நானே கிராமத்தில் பிறந்தவ தான். அப்பறம் என் அம்மா எப்படி நகரமா இருப்பாங்க? எல்லாம் கிராமம் தான் ;)

வாங்க இன்னும் வாதங்களோட. காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வருகைக்கு மிக்க நன்றி கௌரி :) உங்கள் பதிவு எனக்கு மகிழ்ச்சி தந்தாலும் மற்றவர்களுக்கு படிக்க சிரமமாகும், தயவு செய்து அடுத்த பதிவு தமிழில் இடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் :)

கிராமத்து பெண்கள் கட்சியா நீங்களும். குட் குட். உண்மை தான், நம்ம சுமி சொன்னது போல காலையிலேயே எழும் பழக்கம் உள்ளவங்களுக்கு நிதானம், பொறுமை, நேரம் எல்லாம் இருக்க தான் செய்யும். இன்னும் வாதங்களை முன் வைங்க கௌரி. காத்திருக்கோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வருக வருக... பட்டியில் முதல் பதிவா? வாழ்த்துக்கள். நன்றி. :)

எல்லாரும் எதை சொன்னாலும் வனி தலையில் உள்ள பல்பு ”அட ஆமா... சரி தானே”னு சொல்லுது. இப்ப உங்க பதிவுக்கு அதே போல ஆமாஞ்சாமி போடுது :) பார்ப்பொம் எதிர் அணி என்ன சொல்றாங்கன்னு. ;) வாங்க இன்னும் வாதங்களோட. படிச்சு வனிக்கு மூச்சு முட்டனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டிமன்றமும்,நடுவரும் அன்போடு அழைத்ததால் தவிர்க்க மனமின்றி வந்துவிட்டேன்:)))

வனி வெள்ளி சனி விடுமுறை நாள், கையில் கணினி என்றால் முதுகில் அடி விழும் அதான் வரவில்லை, நேற்று எங்க வீட்டு குட்டி தலைவர், காலையில் இரண்டு இருமல் மற்றும் முன்று தும்மல் போட்டு பள்ளியை கட்டடித்து விட்டார் அதான் இன்று ஓடி வந்தேன்:))

இது என்னோட இராண்டவது பட்டி மன்றம் தான், இதற்க்கு முன்பு இதே நடுவருக்கு எதிராக பேசியதால் வயிற்றில் கொஞ்சம் புளியைகரைக்கிறது:))) தலைப்பு மறந்துவிட்டது, ஆனால் ஞாபகம் இருப்பது ஒன்றே ஒன்று தான், வாழ்கையா, வாழைக்காயா தான், வாழைக்காயை பார்க்கும் போதேல்லாம் நினைவுக்கு வருவது இந்த வரியும் வனியும் தான்:)) --

நடுவரே இப்படி என் கட்சியை நீங்களே முடிவு செய்யாதீங்கோ:) அப்பறம் ரேணுவால் மறுப்பு சொல்லமுடியாமல் போய்விடும், தலைப்பை பார்த்ததும் தோன்றியது நான் யாரு ? கிராமத்து பெண்ணா? நகரத்து பெண்ணா?? சொந்த ஊர் எல்லாம் கிராமம் தான் என்றாலும் வளர்ந்தது வாழ்ந்தது, வாழ்ந்து கொண்டிருப்பது எல்லாமே நகரம் தானே, அதான் இந்த குழப்பம்.... சரி இதை அடுத்த பட்டிக்கு தலைப்பா கொடுக்க சொல்லலாம் என்று முடிவு பன்னிட்டு கிராமத்து பெண் என்று முடிவுபன்னுனேன்,மனம் அங்கு ஒத்துகொள்ளாவில்லை, அதற்க்கு பல காரணம் இருக்கு,அது தான் வாதத்தில் வரும், என்னன்னு இப்பவே சொல்லிட்டா எதிர் அணி உஷாராயிடுவாங்க:))) அதனால் நான் நகரத்து பக்கம் அடுத்த பதிவில் வாதத்துடன் வரேன்....

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நடுவரே, காலையில் எழுந்து
வாசல் பெருக்கி,தண்னி தெளித்து,கோலமிட்டு......(பாடல் ஸ்டைலில் படிக்கவும்),இது சிறந்த யோகா நடுவரே.....

நம்ம நகரத்துப்பெண்கள் இந்த யோகாவுக்கே டைம் ஒதுக்க முடியாம டென்சனாகுறாங்க.அமைதி போச்சா...?
கோலம்போட மிகப்பொறுமை வேணுங்க நடுவரே,பின்ன புள்ளிவைத்து சங்கிலி போட்டு அதை சிக்கில்லாம நளினமா விரலிடுக்கில் அரிசிமாவிழுத்து கோலம்போடுவது ஒருகலை.......அடாட அடா....இதை நம்ம கிராமத்து பொண்ணுக பண்ணும்பாருங்க.....தாவணி பாவாடையும் கொஞ்சும் சலங்கையோடவும் தனி அழகுதன் போங்க..:_)
நகரத்துபொண்னுங்க ஸ்கூல்பஸ்ஸில் பிள்ளைகளை அனுப்பும் வரை மேக்ஸிதான்,பொறுமையில்லாததால்தான் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மிளிரும் வண்ணம் கலந்த ஸ்டிக்கர் கோலங்கள்....:-(
காலையில் கிடைக்கும் பிராணவாயு நாள் முழுதும் உடலையும் மூளையையும் நாள்முழுதும் சுறுசுறுப்பாக்க வைக்கும். அங்கே நிதானம் இருக்கும். கணிணியில் கட்டிடத்திற்கு பிளான் போடும் நகரத்துப்பென்களிடம்,கட்டிடம் கட்ட செங்கல் தூக்கும் கிராம்த்துப் பெண்ணின் திடமும்,நிதானமும் இருக்காது. ஹை ஹீல்ஸ் போட்டு நடக்கும் நகரத்துப்பெண்கள் அடி சருக்கினால் அடிவிழும் மற்றவர் முன்னால் அவமானமென கூனி குறுகும் மனம்தான் இருக்கும், காலணியில்லா கிராமத்துப்பெண்களுக்கு முள் குத்தினாலும் பொறுத்துப்போகும் மனம் இருக்கும்.
மேலு வாதங்களுடன் வருகிறேன் நடுவரே......
( அறுசுவை பக்கம் நேரம் கிடைக்கும்போது வந்துகொண்டுதான் இருக்கிறேன் வனி,ஆனால் கல்யாண வேலையாகையால் கொஞ்சம் பிஸி. பட்டியை மிஸ் பண்ணுவேனா? )

பொறுமையை கையாள்வதிலும் அமைதியை கடைபிடிப்பதிலும் வல்லவர்கள் கிராமத்துப்பெண்களே
அதிகாலை எழுந்து வாசலில் நீர் தெளித்து நிறைய புள்ளிகள் வைத்து வாசல் நிறைக்க குனிந்து கோலம் போடுதல்ன்றது நிறறைய பொருமை இருந்தாதான் வரும்..அத பண்றது கிராமத்து பெண்களே..நகரபெண்களெல்லாம் ஸ்டிக்கர் கோலம்தாங்க

அதுமட்டுமில்ல ஆழாக்கு ஆழாக்காய் பூக்கள் வாங்கி உட்கார்ந்து பொறுமையாய் தொடுத்து வைப்பது கிராமத்துபெண்களே …

கூட்டுகுடும்பங்கள் மிச்சமிருப்பது கிராமங்களிதான்..ஏன்னா கிராமத்து பெண்களே பொறுமையாய் அனுசரித்து அமைதியாய் சூழ்நிலையோடு ஒத்துபோறாங்க

சமையல்கூட பொறுமையாய் அம்மியில் அரைத்து மணக்க மணக்க செய்வது
கிராமத்துபெண்களே

இப்பகூட இட்லிபொடி,பருப்புபொடி,வடாம்,வத்தல்,குழந்தைக்கான சத்துமாவு ன்னு வேணுமின்னா நகரத்து பெண்கள் இன்னும் கிராமத்தில் இருக்கும் அம்மாட்டதான் கேட்கிறாங்க ஏன்னா அவங்களுக்குதான் அத பொறுமையா செஞ்சுதர அவங்களாலதான் முடியும்

அதோட நகரத்து பெண்களுக்கு தோசைமாவு அரைக்கக்கூட பொறுமையிருப்பதில்லை ரெடிமேடா அதயும்கடையிலேயே வாங்கி ஊத்தறாங்க

தீபாவளிக்கு பலகாரம் செய்யணும்னா கூட கடையிலே ஆர்டர் கொடுத்துட்டு துளி எண்ணையபடாம அழகா உடுத்திட்டு கடையில் வாங்கினதை கொறிச்சிட்டே டிவி ஷோ பார்க்கிறவங்கதான் நகரத்துபெண்கள்..
எனக்கெல்லாம் சரியா சமைக்கவே தெரியாது/பொறுமையும் இல்லைன்னு பெருமையடித்து கொள்வதும் நகரத்துபெண்களே

தலைவாழையிலையிட்டு எல்லாம் வைத்து பொறுமையாய் சாப்பிடவும் பரிமாறவும் கிராமத்து பெண்களூதாங்க பொறுமையிருக்கு.

இந்த வாழைப்பூ,முருங்கைக்கீரை இதெல்லாம் பொறுமையாய் சுத்தம் செய்து
அதிகம் சமைக்கிறது கிராமத்துபெண்களே..

அதிரசத்துக்கு மாவு ரெடி செய்து இரண்டுநாள் ஊறவிட்டு அடுத்தநாள் இரண்டுமூண்ருபேர் கூடி ஒன்னொன்னாய் சுட்டுஎடுக்கறது எல்லாம் கிறாமத்துபெண்கள்தான்

நம் சேலையைகூட பொறுமையாய் தழைய தழைய வீட்டில் எப்போதும் கட்டிகொண்டிருப்பது கிராமத்துபெண்களே….நகரத்துபெண்களுக்கு

அதற்கெல்லாம் பொறுமையிருப்பதில்லை…

நிறைய இருக்குங்க…
சமயம் கிடைத்தால் மீண்டும் வருகிறேன்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அக்னி நட்சத்திரத்திற்கு பிறகு வரும் குளிர்ந்த மழையைப் போல ரொம்ப நாளைக்கு பிறகு பட்டியை மீண்டும் தொடங்கி தோழிகளின் மனதை குளிர்வித்த நாட்டாமைக்கு எனது வணக்கங்கள். தலைப்பை கொடுத்த லாவிக்கும் எனது வாழ்த்துக்கள்.
பொறுமைக்கு பேரே பொண்ணுங்க தான், அதுல ஒன்னும் உங்களுக்கு டவுட்டு இல்லயே நடுவரே... அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் நம்ப பட்டிக்காட்டு சரோசாவா இல்ல டவுனு சாந்தினியான்னு உங்களுக்கு தெரியனும்.. சந்தேகமென்ன நடுவரே.. சரோசாவே தான், எப்படின்னு நீங்க கேட்பீங்கன்னு எனக்கு தெரியும், பொறுமையா இருந்தீங்கன்னா டீட்டெயிலு பதிவு இன்னும் கொஞ்சத்தால போரறேன்.. சீட்ட மட்டும் கன்பார்ம் செஞ்சு வைங்க.. வந்திடறேன்...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

anbu naduvaray
i am newone to patti.namathu pengalin poorumai athigam.

engkeyum q eppothum satham no anbu only avasarum

ithuvey nakarathu pengalin nilai.appadiyum naam santhoshamaka

vazkirom

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

நான் இன்றைக்கு தான் முதன் முதலில் தமிழில் டைப் செய்கிறேன்.பிழை இருப்பின் மன்னிக்கவும்.

இதோ என்னுடைய அடுத்த பதிவு.

அனுசரிப்பு,உபசரிப்பு என்பதெல்லாம் கிராமத்துப் பெண்களிடம்தான் அதிகம்.வீட்டிற்கு விருந்தாளிகளே வர வேண்டாம் என நினைப்பது தான் நகரப் பெண்கள் பலர்.இந்த வகையிலும் கிராமப் பெண்களே பொறுமையானவர்கள்.வேண்டதவர்களாயனும் அமைதியாய் நல்லவிதமாய் நடத்திடுவார்கள்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

மேலும் சில பதிவுகள்