பட்டிமன்றம் 94 - அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்?

என்னவோ இன்னைக்கு தான் எனக்கு மீண்டும் மூச்சு விடுவது போன்ற உணர்வு !!! எல்லாம் பட்டிமன்றம் அப்படின்னு ஒரு தலைப்பை முகப்பில் கொண்டு வர போகும் ஆர்வம்னு கூட சொல்லலாம். எத்தனை விஷயங்கள் அறுசுவையில் வந்தாலும், எனக்கு ரொம்ப பிடிச்ச பகுதி இது தான். இதை பாதியில் நிறுத்தி லீவ் விட்ட நேரமோ என்னவோ வனியும் லாங் லீவில் போயிட்டேன். எப்போ எப்போன்னு சில தோழிகள் கேட்ட போதெல்லாம் எனக்கும் ஏக்கமாகவே இருந்தது. ஆரம்பிச்சுட்டேன் புதிய தலைப்போட மீண்டும்... இனி இது தடைபடாமல் 100வது பட்டிமன்றத்தை தொடுவது தோழிகள் உங்கள் கையில் தான் இருக்கின்றது. :) வருக, வாதங்களை தருக, ஆதரவு தருக.

தலைப்பு: அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்? கிராம சூழலில் வளர்ந்த பெண்களா இல்லை நகரத்தில் வளர்ந்த பெண்களா?

தலைப்பை தந்தமைக்கு நன்றி லாவி (திருமதி. லாவண்யா மூர்த்தி)

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

நடுவரே,
* நகரப்பெண்கள் இரண்டில் ஒருவருக்கும்,கிராமப்பெண்கள் மூன்றில் ஒருவருக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
* நகரப்பெண்களில் நான்கில் ஒருவரும்,கிராமப்பெண்கள் எட்டில் ஒருவரும் அதிக கொழுப்பு உள்ளவர்களாக இருக்கின்றனர்.
* நான்கு சதவிகித நகரவாழ் பெண்களும், இருபத்தைந்து சதவிகித கிராமவாழ் பெண்களும் எந்தவித நோயும் (அதாவது சர்க்கரை,இரத்த அழுத்தம்,அதிக கொழுப்பு இப்படி) எந்த பாதிப்பும் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது நடுவரே......
நல்ல வாழ்க்கைமுறையும் சுறுசுறுப்பான உடலும்தான் இதற்கு காரணமாக இருக்கும். யோசிங்க நடுவரே அமைதியான மனதுடன் பொறுமையாக அனைத்தையும் கையாண்டால் கவலையில்லை. இப்படிப்பட்ட மன அமைப்பினாலே எவ்வித வியாதியும் தன் உடலுக்குள் வர அனுமதிக்காது.
புள்ளிவிவரப்படி பாருங்கள் நடுவரே உங்களுக்கே புரியும்......
மீண்டும் வருவேன்.....

வாங்க‌ வாங்க‌... :) உங்களை இந்த‌ பக்கம் பார்த்ததில் மிகுந்த‌ மகிழ்ச்சி நிகிலா. ஈசியா சாய்ஸ் கொடுத்துட்டா யோசிக்கவே விட‌ மாட்டாங்களே மக்கள் ;) அதான். சீக்கிரம் முடிவு பண்ணிட்டு வாங்க‌ நிகி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிரடி ரேவ்ஸ் வருக‌ வருக‌ :) அறுசுவையில் உங்க‌ வாதங்களை பார்ப்பதில் அளவில்லா ஆனந்த்ம்... சிக்குனாங்கடா மக்கள்.

பாருடா... நைட்டி தான் போடுறாங்களா? பாருங்க‌ எதிர் அணி... புடவை கட்டுறதாகதை விட்டீங்களே.

இன்னும் சொல்லுங்க‌ ரேவ்ஸ்...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதானே... புடவை கட்ட‌ பொறுமை வேணுமா?? ஆத்துக்காறர் மேல‌ இருக்க‌ கோபத்துல‌ தான் அம்மியில் இடிக்கிறதே... ;) பொறுமை எங்கங்க‌?

ஸிக்கர் கோலம் போட்டாவது ஆசையை பூர்த்தி செய்யும் பெண்களை விடவா வசதியா இருக்க‌ வாசலில் கோலம் போடும் பெண்கள் பெருசா?? நியாயமான‌ கேள்வி ரேணுகா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிராம‌ மக்கள் அகரில் வசிக்கலாம், ஆனா நகர‌ மக்கள் கிராமத்த்ல் 2 நாள் சேர்ந்தாப்பல் இருக்க‌ முடியாதுங்கறீங்க‌... ஏன்? எனக்கு கிராமத்துக்கு போனா வர‌ மானசே வர‌ மாட்டங்குதே. நடுவரை இழுக்கப்புடாது... பாவம் அவங்க‌. அவங்க்ளே நகர‌வாசியா கிராம‌வாசியான்னு புரியாம‌ குழம்பி இருக்காங்க‌. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க‌ பெயரே அழகு :) முதன் முதலில் பட்டியில் பங்கெடுக்க‌ வந்திருக்கீங்க‌... வாழ்த்துக்கள், நன்றி.

நகர‌ வாசிகள் டென்ஷன் அதிகமான‌ சூழலில் இருப்பதால் பொறுமையா இருக்க‌ வாய்ப்பு குறைவுன்னு சொல்றீங்க‌. இன்னும் வாதங்களோடு வாங்க‌ விழி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா!!! இன்னைக்கு நான் ரொம்ப‌ சந்தோஷப்படறேன் :) இப்படி எல்லாரையும் பட்டியில் பார்க்க‌ முடிஞ்சதில் :)

நகரத்துல‌ இம்புட்டு டென்ஷனிலும் பொறுமையா எல்லாத்தையும் பெண்கள் செய்யறாங்க‌, கிராமத்துல‌ இவ்வளவு டென்ஷன் இல்லவே இல்லையேங்கறீங்க‌. நியாயம் தான். எதிர் அணி வரட்டும், கேட்டு கொடையலாம். ;) நம்ம‌ நகரத்துல‌ வேலைக்கே போகலன்னாலும் டென்ஷன் இருக்க‌ தான் செய்யுது... வாழ்க்கைமுறை அப்படி. சரி தான். இன்னும் வாதங்களோட‌ உங்க‌ குட்டி மேடம் ஃப்ரீயா விடும் போது வாங்க‌ பிரேமா.

//ஸ்பெல்லிங்க் மிஸ்டேக், கிராமர் மிஸ்டேக் இருந்தால் மன்னிக்கவும்// ‍ இதுக்கு நான் என்ன‌ சொல்ல?! என்கிட்ட‌ இதை சொன்னதுக்காக‌ உங்களுக்கு கோவில் தான் கடனும் பிரேமா :o

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆகா!!! பஸ்ஸில் கிராம‌ பெண்கள் தான் சரியா கண்டுக்கறாங்களா? இதை யாரும் சொல்லவே இல்லையே.

கூட்டு குடும்பம் பார்க்கும் பொறுமையும் நிதானமும் நகர‌ பெண்களிடம் இல்லைங்கறீங்க‌. அப்பறம் எங்க‌ இருந்து வயசான‌ பெரியவங்களை பார்க்கிறது??? நியாயம் தான். பெரியவங்ககிட்ட‌ பொறுமையா உட்கார்ந்து பேசும் தன்மை கூட‌ கம்மியாகிட்டுது இப்போ.

வாங்க‌ வாங்க‌... இன்னும் தொடருங்க‌. எதிர் அணி பதில் கொடுக்க‌ முடியம‌ திக்குமுக்காடட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப‌ நாளைக்கு பின் உங்க‌ பதிவை பார்க்கிறேன்... வருக‌ வருக‌ கனி :)

நகரத்து பெண்கள் வேலைக்கும் போயிகிட்டுன்னே ஏன் எல்லாரும் சொல்றீங்க‌??? நகரத்து பெண்கள் என்னை போல் வீட்டில் இருப்பவர்களும் இருக்க‌ தானே செய்யறாங்க‌? கிராமத்தில் வயல் வேலைக்கு போகும், கூலி வேலைக்கு போகும் பெண்கள் இருக்க‌ தானே செய்யறாங்க‌? அந்த‌ வழியிலும் கொஞ்சம் யோசிக்கலாம் தானே ;)

கட்டாயம் நகர‌ பெண்கள் பிள்ளைகள் பேருந்து எல்லாம் காலை 7 மணிக்கே கூட‌ வருதுன்னு விடியலில் எழறாங்க‌. உண்மை. //உதாரணத்துக்கு உங்களையே சொல்லுறேன் நடுவரே.. நீங்க உங்க வீட்டுல பார்ட்டினா எவ்வளவு வேலைகளை செய்றீங்க நடுவரே // ‍ போச்சுடா ;) நானே சிக்கிட்டனே.

ரைட்டு... நான் சொன்ன‌ பக்கமும் யோசிச்சு உங்க‌ அணியை பலப்படுத்த‌ பதிவுகளை வைங்க‌ :) காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கரக்ட்டு... இப்பலாம் கிராமத்தில் கூட‌ க்ரைன்டௌம், மிக்சியும் தான்.

இன்னும் வாதங்களோடு வாங்க‌ சுபி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்