தேதி: January 27, 2014
17 செ.மீ - 13 செ.மீ அளவில் பட்டுத் துணி
லைனிங் துணி
ஊசி மற்றும் நூல்
மணி
ஜிப்
ஸ்பாஞ்ச் ஷீட் (விருப்பப்பட்டால்)
பட்டுத் துணியில் படத்தில் காட்டியுள்ளபடி ஒரு செ.மீ. அளவில் சதுரங்கள் வரைந்து, அதில் ஒரு சதுரம் விட்டு அடுத்த சதுரத்தில் பெருக்கல் குறி இடவும்.

ஊசியில் நூலைக் கோர்த்து பெருக்கல் குறியிட்ட இடத்தில் மட்டும் நான்கு மூலையையும் இழுத்து ஸ்மாக் பண்ணி தைக்கவும்.

நூலை முடிச்சு போட்ட பிறகு ஒரு பூ போல வரும்.

பிறகு முடிச்சின் மீது ஒரு மணியை வைத்து தைக்கவும்.

இதே முறையில் பெருக்கல் குறியிட்ட அனைத்து சதுரங்களையும் தைத்த பின்பு இதேபோல் கிடைக்கும். துணியின் நான்கு ஓரங்களையும் சரியானபடி சுருக்கிட்டு தைத்துக் கொள்ளவும்.

அதன் அடியில் ஸ்பாஞ்ச் ஷீட் வைத்து அதன்மேல் லைனிங் துணியை வைத்து ஓரத்தைத் தைத்துக் கொள்ளவும். இதே அளவில் டிசைன் இல்லாமல் மற்றொரு துணியை தயார் செய்து கொள்ளவும்.

தயார் செய்த இரண்டையும் இணைத்து தைத்து, ஜிப் வைத்து தைக்கவும்.

பட்டுத் துணியில் செய்த ஸ்மாக்கிங் மொபைல் பவுச் (Smocking Mobile Pouch) ரெடி.

Comments
நிகிலா
பவுட்ச் கொள்ளை அழகு.நேர்த்தியான கைவேலை
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Shaa parkave paravasam
Shaa parkave paravasam
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
பர்ஸ் அழகு
பர்ஸ் ரெண்டு கலருமே அசத்தலா இருக்கு, பட்டு சாரீஸ் மேட்ச்சா கூட செய்துக்கலாம் போல. வாழ்த்துக்கள் நிகிலா
Nikila
ஹாய் நிகிலா பர்ஸ் ரொம்ப அழகா இருக்கு.. ரெண்டு கலருமே சூப்பர்...
கலை
அட்மின் டீம்
என்னுடைய கைவினைக் குறிப்பை வெளியிட்டமைக்கு நன்றிகள்
ஹாய் முசி
உங்களுடைய முதல் பதிவுக்கு என்னுடைய நன்றிகள் பா
நேர்த்தியா இருக்கிறதா தான்க்யூ தோழி
ரொம்ப அழகா இருக்கு.
ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
பவுச்
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு நிகிலா. பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
Janathul
வாழ்த்துக்கு மிக்க நன்றி பா
தேவி
//பட்டு சாரீஸ் பொருத்தமா கூட செய்துக்கலாம்// ஆமா பா . பட்டு ப்ளவுஸ் தைச்சிட்டு மீதி துணியே போதுமானது
வாழ்த்துக்கு நன்றி தோழி
கலை
ரெண்டு கலரும் பிடிச்சிருக்கா?
மிக்க நன்றி தோழி
மஞ்சுளா
மஞ்சுளா
உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி பா
இமா
ரொம்ப ரொம்ப நன்றி இமா
நிகிலா அக்கா
அக்கா... ஸ்மாக்கிங் மொபைல் பவுச் செம சூப்பரா இருக்கு.. கொள்ளை அழகு... எனக்கும் ஒன்னு வேணும்... :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கனிமொழி
பாராட்டுக்கு நன்றி கனிமொழி.
உனக்கு இல்லாமலா?
ரெண்டுமே உனக்கு தான் எடுத்துக்கோ பா
நிகிலா அக்கா
பார்த்த உடன் பிடித்து விட்டது. அருமை...*
சிராஜ் நிஷா
உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. மிக்க நன்றி நிஷா
நிகிலா அக்கா
thank u akka. vaathukkal akka***
nikila akka
neengga thayyal class edukkuringgala?akka
assalamu alaikkum***.
assalamu alaikkum.
சிராஜ் நிஷா
இல்லை சும்மா ஒரு டைம்பாஸ் அவ்வளவு தான். நெட் பார்த்து செய்வேன் நிஷா.
nikila akka
ella akka, enaku toilaring na romba romba pidikum,athan keaten. enaku konjam therium, ungaluku therincha sollikudunga akka
super akka
பட'டு துணி பதில' வேற பயன' படுத'தலாமா
சிந்து
தாராளமா பயன்படுத்தலாம்.
ரொம்ப திக்கா பேண்ட் துணி மாதிரி வேண்டாம்.
மத்தது எல்லாம் ஆகும். முயற்சி செய்யுங்க சிந்து:))