கத்தரிக்காய் மசாலா

தேதி: November 16, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கத்தரிக்காய் - கால் கிலோ
நீளமாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
புளிக்கரைச்சல் - கால் கப்
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்கவும்:
வெள்ளை எள் - ஒரு மேசைக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2


 

வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அரை கப் வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
ஆறிய பின் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை நீளமாக நறுக்கி உப்பு கலந்த தண்ணீரில் போடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி,பூண்டு விழுது, வெங்காயம் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின் தக்காளி, மிளகாய் தூள், அரைத்த வெங்காய விழுதை போட்டு வதக்கவும். அவை வதங்கியதும் கத்தரிக்காய், புளிகரைச்சல், உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
கத்தரிக்காய் வெந்த பின் பொடித்த பொடி, அரை கப் தண்ணீர் விட்டு 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் சிறிதளவு எண்ணெய், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்