தட‌ தட ரயில் வண்டி....

என்ன தான் ரயில்ல போக ஆசை இருந்தாலும் உடனே நடக்கனும் என்ற எண்ணம் இருந்தது இல்லை... நடக்கும் போது நடக்கட்டும் என்று இருந்தாச்சு, இப்படியே பல வருடங்கள் ஓடி போக போன வருடம் மீண்டும் ரயிலில் போக ஒரு வாய்ப்பு கிடைத்தது!!

சொந்த ஊருக்கு பக்கத்து ஊரு பேரு கூட தெரியாத ஆள் தான் நான்... எங்கயும் போனதில்லை, இருக்க ஊரை விட்டு வேற ஊர்ன்னு வந்தது நேர துபாய் தான்.

இங்க இருந்து ஊருக்கு போனா கூட நேரா திருச்சி தான். எத்தனை மலிவா சென்னைக்கு டிக்கெட் கிடைச்சாலும் திருச்சில இறங்கி 10 நிமிஷத்துல வீட்டுக்கு போற சுகம் கிடைக்குமா சொல்லுங்க? அதனால் சென்னை பலமுறை அழைத்தும் செல்லமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்துவிட்டேன்:)) ஆனா எத்தனை நாள் தான் சென்னை வேணாம்ன்னு இருக்க, அண்ணாவும் அண்ணியும் அங்க இப்ப இருக்க சென்னைகுள்ள கால் பதிக்காம இருக்க முடியுமா என்ன? சென்னைக்கு தான் இந்த முறை ரயிலில் பயணம்!!

உண்மைய சொல்லனும் என்றால் சென்னைக்கு கிளம்பற மாதிரி தெரியல, துபாய்க்கு கிளம்பற மாதிரி ஒரு பீலிங், விட்டா அழுதுடுவேன் போல, அப்படி ஒரு படபடப்பு. புது ஊரு, அதிக நேர டிராவல், ரயிலில் போகும் போது எங்க வீட்டு குட்டி தலைவரை சமாளிக்கனும்மே என்ற கவலை....சென்னையில் இருந்து வந்த ஒரு வாரத்தில் திரும்பவும் இங்க வரனும். லீவு முடிய போகுதேன்னு வேற கவலை, இங்க இருந்த தைரியம் அங்க இல்லை, எல்லாமே என் பார்வைக்கு புதுசா தெரிந்ததால்...

பட படன்னு இருக்க இதய துடிப்புடன், தட தட ரயில் சத்தமும் சேர்ந்தது... அரை மணி நேரத்திற்க்கு பிறகு கொஞ்சம் இயல்பு நிலை எட்டிப்பார்த்தது!!அதுவும் கொஞ்சம் தான்.....
எங்க வீட்டு படிப்பாளிகள் இருவரும் ஆளுக்கொரு புத்தகத்தை வாசிக்க தொடங்கினர், எனக்கு எதிரே வயதான தம்பதிகள் இருவர். கண்கள் சந்திக்கையில் ஒரு சிறு புன்னகை என பயணம் சென்றது.. நானும் எங்க வீட்டு சுண்டெலியும் என்ன பன்னுவோம் வழக்கம் போல காக்கா குருவி தேடி கண்டுபிடிச்சுகிட்டு இருந்தோம் ஜன்னல் வழியாக‌:)

உதட்டில் சிரிப்பு இருந்தாலும் உள்ளத்தில் படபடப்பு நின்ன பாடுஇல்லை, கவனத்தை மாற்ற தீர்மானித்து இயற்கை அழகை ரசிக்க ஆரம்பித்தேன். எங்க ஊர் பக்கம் மழை இல்லாமல் பச்சை வண்ணம் காணவே முடியவில்லை, ஆனால் சென்னை செல்லும் வழியில் பல ஊர்கள் அழகாய் காட்சி தந்தது, அதை ரசிக்கும் போது அப்பப்ப ஒரு குரல் டீ, காபி , டீ , காபி என, அது மட்டும் இல்லை இன்னும் என்ன என்னவோ விற்று கொண்டே வந்தார்கள், அவற்றை வாங்கதவர்கள் சிலர் தான்.

டீ குடித்த கப், சமோசா வைத்திருந்த பேப்பர், தீர்ந்து போன தண்ணி பாட்டில்கள் இப்படி எல்லா குப்பையும் ஜன்னல் வழியா தான் பறந்தது. இது எனக்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருந்துச்சு. ஊர் குப்பையாகுதுன்னு தான் கவலை இல்லை, போடற குப்பை ரோட்ல யாரு மேலையாவது விழுந்தா என்ன ஆகும் என்ற கவலை கூடவா யாருக்கும் இல்லை.

இப்படி குப்பைய ரோட்ல போடாம இருக்க என்ன பன்னலாம்ன்னு ஆழமா யோசனை போச்சு, உணவு பொருளை விற்பனை செய்தவர்கள் எல்லாம் அரசு முத்திரை உள்ள டிரெஸ் தான் போட்டு இருந்தாங்க,. சாப்பாட்டை விற்க வருவது போல இப்படி குப்பைய வாங்கவும் இரண்டு ஆள் வந்தா நல்லா இருக்குமேன்னு தோனுச்சு, அது மட்டும் இல்லாம நாலு பேத்துக்கு வேலையும் கிடைக்கும், ஊரும் சுத்தமா இருக்குமேன்னு மனசுல பட்டது.
ஆமாம் நம்ம நீ நினைச்சவுடன் அரசாங்கம் எல்லாத்தையும் செய்திடும் பாருன்னு என் மனசு ஒரு குட்டு வைச்சு கிண்டல் பன்னுச்சு!! அதுவும் உண்மை தானேன்னு வேற வழி என்ன இருக்குன்னு யோசிச்சேன்...அப்ப நம்ம சுண்டெலியும் பசியில் பிஸ்கெட் கொறிக்க ஆரம்பிச்சுடுச்சு, பெரியவன் சிப்ஸ் என அவர் பங்கை வாங்கி கொண்டார். கூடவே ஒரு கவரும் கொடுத்தேன் குப்பையை போட!!
கையில் குப்பைக்கு என்றே ஒரு கவர் எப்பொழுதும் வைத்திருப்பேன், கண்ட இடங்களில் குப்பை போடாமல், குப்பை தொட்டியில் தான் போடனும் என்று பிடிவாதமாக தேடி அலைவேன், கிடைக்காத பட்சத்தில் கையில் இருக்கும் கவரில் குப்பைகளை போட்டு தொட்டியை கண்டதும் போடுவேன்.
எதிரில் இருந்த பெரியவர் டீ கப்பை தூங்கி போட்டார் ஜன்னல் வழியாக தான். இதை பார்த்துகிட்டு இருந்த சுண்டெலியோட அண்ணன் என்னை கேள்வி கேட்டான், அம்மா எல்லாரும் வெளில தானே குப்ப போடறாங்க, நீ ஏன் கவர் தர, வெளியவே போட்டா என்னன்னு,?

வீட்ல சாப்ட்டு இப்படி தான் நடு வீட்ல குப்ப போட்டு வைப்பிய,இல்லைதானே, வெளிய மட்டும் என்ன?பாரு ரோடு எப்படி அசிங்கமா இருக்குன்னு, ரோட்டையெல்லாம் காட்டினேன், அழகாவா இருக்கு?
இல்லை தான், நம்ம போடாத இருந்தா மட்டும் அழகா ஆயிடுமா ?அடுத்த கேள்வி....
இன்னைக்கே ஆகாதுடா, உன்னை மாதிரி குட்டி பசங்க எல்லாம் ரோட்டில் குப்பை போடாமல் இருந்து பெரிசா ஆகியும் அதையே கடைபிடிச்சீங்கன்னா அப்ப நம்ம ஊர் குப்பையே இல்லாம அழகா இருக்கும்..
உன் பிரென்ட்ஸ் கிட்டயெல்லாம் சொல்லு, நீ சொல்றத எல்லாரும் கேட்கனும் என்று நினைச்சா நீ அதை முதல்ல செய் , என நாங்க இரண்டு பேரும் "நாட்டை அழகு படுத்துவது எப்படி?"ன்னு புக்கே போடற ரேஞ்சுக்கு டிஸ்கஸ் பன்னிகிட்டு இருந்தோம்..

எங்க பேச்சை எதிரில் இருந்த பெரியவர் கேட்டு கொண்டு தான் வந்தார் போலும், வாழைபழம் சாப்பிட்டு கொண்டிருந்த அவர் தோலை இப்பொ வெளியே போடாமல் ஒரு பேப்பரில் தோலை சுருட்டி அவர் வைத்திருந்த பைக்குள் போட்டார், அதை பார்த்த எனக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. இருக்காத பின்ன என் பேச்சுக்கு இப்படி ஒரு ரியாக்‌ஷன் வந்தால்:))

ரயில் வேகமாக போகும் போது கதவருகே நின்று பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை, நானே பயந்து பயந்து மெதுவா போய் நிக்கறேன், அதுவும் கதவுகிட்ட கூட இல்லை, எனக்கும் கதவுக்கும் இடையே 3 பேர் தாராளமா நிக்கலாம்:) என்னவரோ இன்னும் முன்னாடி போகாத பயந்துடுவ இங்கயே நின்னு வேடிக்க பாருன்னு கிண்டல் பன்னுனாரா? இல்லை அக்கறையா சொன்னாரான்னு இன்னும் தெரியல:))

குட்டி தலைவர தூங்க வைச்சுட்டு பாட்டு கேட்கலாம்ன்னு ரயில் ஏறியதில் இருந்து வெயிட் பண்ணி இறங்குவதற்கு 1 மணி நேரம் முன்னாடி தூங்கறான்:( , இனி இந்த டைத்தையும் வேஸ்ட் பண்ண கூடாதுன்னு ஹெட் போனை காதில் மாட்டிட்டு பத்து நிமிஷமாச்சும் பாட்டை ரசிப்போம்ன்னு உட்காந்திருந்தேன்.
அந்த கேப்ல இத்தனை மணி நேரம் அமைதியா வந்த எல்லோரும் பயங்கரமா பேச ஆரம்பிச்சாங்க, பெரியவன் எல்லாத்துக்கும் விடுகதை போட்டு கொண்டு வந்தான், அவன் கேட்ட கேள்விகள் எல்லாம் அவனுடைய கற்பனை கேள்விகள் என்பதால் யாருக்கும் விடை தெரியவில்லை. இவனுடைய பேச்சு எல்லோருக்கும் வித்தியாசமாய் தெரிந்தது. அப்பொழுது தான் அந்த பெரியவர் என்னிடம் பேசினார். அவருக்கு பெரியவனை ரெம்ப பிடித்துவிட்டது, நல்லா பேசுறாம்மா,எப்படி கேள்வி கேட்காறன்.திறமையான பையன் நல்லா படிக்க வைங்க என்றார். அவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியர் என கூறினார், அவரது இரு மருமகளும் ஆசிரியராக இருப்பதாகவும் சொன்னார்.

ஒவ்வொருத்தர் நிறுத்தமும் அடுத்தடுத்து வந்தது, இறங்கும் போது ஒவ்வொருவருக்கும் கவலை பெரியவனின் பேச்சை பாதியில் விட்டு போகிறோமே என்று தான், அப்படி என்னத்த தான் பேசுனானோ தெரியல!! எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கிட்டான் என்னை போலவே:)

அடுத்த நிறுத்தத்தில் நாங்க இறங்கனும் என்று பெரியவர் சொல்லவும் மீண்டும் ஒரே படபடப்பு தான், ஆனால் பயத்தில் இல்லை சந்தோஷத்தில் ......

5
Average: 5 (3 votes)

Comments

அன்பு ரேணுகா,

ரயில் பயண விவரங்களுடன், கூடுதலாக குப்பை போடுவது பற்றி, நீங்க சொல்லியிருப்பது ரொம்ப நல்லா இருக்கு.

பொறுப்பாக குப்பைத் தொட்டியில் குப்பையைப் போட்டால், நம்மை செவ்வாய்க் கிரக வாசி மாதிரி வினோதமாக பார்க்கிறார்களே, என்ன செய்யறது.

எப்படியோ உங்க பையனுக்கு நீங்க செய்த உபதேசம், மற்றவர் மனதை மாற்றியதுதான் மகிழ்ச்சி.

அன்புடன்

சீதாலஷ்மி

ரயில் அனுபவம் ரொம்ப அழகா அருமையா பதிவு செஞ்சிருக்கீங்க... நல்ல மெசேஜ் சொல்லியிருக்கீங்க.. ரொம்ப அருமைங்க
வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

ரேணுகா பயண அனுபவங்களோடு சேர்த்து பயனுள்ள விஷயத்தையும் பகிர்ந்து இருக்கீங்க, இப்படி ஒருவரை பார்த்து மற்றொருன்னு எல்லாருமே மாறிட்டாங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்ல. நானும் இப்படி கையில் ஒரு பை வைத்துக் கொள்ளலாம்னு யோசனை தோணுது நன்றி ரேணுகா

இரயில்ல‌ போன‌ அனுபவத்தோட‌ ஒரு நல்ல‌ மெசெஜும் சொல்லி இருக்கீங்க‌ ..
எப்பவுமே பயணத்தின் போது கவர் வெச்சுக்கிட்டா நல்லதொரு பயன்னு புரிதுங்க‌. குப்பை போட‌ மட்டும்மில்லாம‌ வாந்தி தொல்லை இருந்தா நிறைய‌ பேர் அப்படியே பண்ணிடுவாங்க‌, கவர் இருந்தா மற்றவங்களுக்கு தொல்லை குறையும்..:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அப்பாடா.ஒரு வழியா ஆசைப்பட்ட பயணம் நிறைவேறிடுச்சு.

Be simple be sample

சீதா அம்மா நீங்க சொல்றது சரி தான், நான் பலமுறை இப்படி அனுபவம் பெற்று இருக்கேன், நல்லது சொன்னா யார் தான் ஏத்துக்குவாங்க....

ஒருத்தர் ஆச்சும் கேட்டாரேன்னு எனக்கும் சந்தோஷம் தான்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நன்றிங்க குணா தம்பி:) நல்ல மெசேஜ் பாலோ பன்னுங்கோ:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரெம்ப நன்றி உமா, நீங்க சொன்ன மாதிரி இருந்தா நல்லா தான் இருக்கும், ஆனால் மாற்றம் நமக்கே தெரியாமல் தான் நடக்கும்.. நல்ல மாற்றங்கள் வந்தா சந்தோஷமே. உங்களுக்கு ஒரு யோசனை வந்ததை நினைத்து எனக்கும் சந்தோஷம்:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

உண்மை தான் செல்வி, கையில் இப்படி ஒன்னு இரண்டு கவர் இருந்தால் பல நேரங்களில் உதவும்...அடுத்தவர்களுக்காக யோசிக்கா விட்டாலும் அவர்களுக்காக யோசித்தால் கூட நன்மை தான்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆமாம் ரேவதி, ரயில் ஆசை நலமாக நிறைவேறிவிட்டது,இனி அடுத்துஎன்ன ஆசை இருக்குன்னு லிஸ்ட் போடனும்:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா