hello friends
எனக்கு 40 அல்லது 45 நாட்கல்லுக்கு ஒருமுறை வயிட்ட்ரு வலி வருகிரது 10 மனினேரமவது வலிக்கிரது கண்டிப்பாஹ நான் சாபிடும் உனவால் அல்ல ,மேல் வயிட்ரில் தான் வலி இருகிறது I have 1 1/2 year oid baby ,please give me a solution and reason for my stomach pain.
ஜஸ்மின் பானு
அடுத்த தடவை வலி வரும் சமயம் மறக்காம டாக்டர்ட்ட போங்க. வலி உள்ள போதே போய்க் காட்டுங்க. பின்போட வேண்டாம்.
- இமா க்றிஸ்
doubt
Hai frnds yenaku vairu valikudhu ana sariya yenga valikidhunu solla theriyala bt uyire pogura madhiri valikidhu motion vara madhiri eruku toilet pona romba valiyoda toilet pogudhu apram dhan andha pain sari agudhu edhu yedhunala erukum doctor kita pona oru vela gastric problem a erukum nu 10 days tablet kuduthanga adhu 5 days poturuken bt vali apadiye dhan eruku yenaku help panunga frnds
சரளா ரகுபதி
தோழி சரளா,
வயிறு வலிப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.. அதாவது உடல் சூடு, அல்சர், கேஸ்ட்ரிக் அப்படின்னு. நீங்கள் எதுக்கும்
1. உங்கள் தொப்புளில் விளக்கெண்ணெய் விட்டு பாருங்கள். இல்லைனா,
2. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டை தோலுடன் போட்டு வதக்கி பின் தோல் நீக்கி சாப்பிட்டு பாருங்கள். (எண்ணெய் சேர்க்காமலும் வதக்கலாம்)
3. நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்..
4. காரம் அதிகமாக சாப்பிடாமல் அளவோடு சேருங்கள்.
5. உணவில் அதிகம் தயிர் சேருங்கள்..
6. நீச்சத்தண்ணீர் அல்லது மோரில் பெருங்காயப்பொடியையும் கலந்து குடிக்கலாம்.
7. சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு லேசாக மென்று தண்ணீர் குடியுங்கள்.
8. வாரத்திற்கு ஒரு முறை ஆயில் பாத் எடுங்கள்
இதில் அனைத்தையும் ஒரே நேரத்தில் முயற்சி செய்யாமல் ஒவ்வொன்றாக செய்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.
- பிரேமா
sarala raghupathy
பிரேமா சொன்னவைகளை தான் நானும் சொல்ல வந்தேன் பிரேமா சொல்லிட்டாங்க டாக்டர் மருந்து கொடுத்தும் சரி ஆகலை சொல்லுறிங்கள் நீங்கள் மீண்டும் மருத்துவரை பார்ப்பது நல்லது நினைக்குறேன் எதையும் சாதாரணமாக எடுத்து அலட்சிய படுத்தாமல் ஒரு முறைக்கு இரண்டு முறை மருத்துவரை அணுகி பார்ப்பது நல்லது
sarala raghupathy
Ok romba thanks sisters prema and feroz
sarala raghupathy
Yenaku mrg agi 3 years agudhu sister frst 4 months nan pregnant a erundhen bt 4months 3 weeks la babyku kidney problem nu doctor abort panna soli pannitanga apram yen husband abroad kelambitanga 2 achi epa vandhu 3months agudhu yenaku adhuku munnadi varaikum stomach pain la ela ana epa dhan stomach pain eruku adhan yennanu theriyala sister
Hai frds and sisters
எனக்கு நேத்திக்கு இருந்து பயங்கர வயித்து வலி. என்னால வலி தாங்க முடியல. எனக்கு பர்ஸ்ட் நீர்க்கட்டி இருந்தப்ப எப்படி வலிச்சுதோ அதே போல வலிக்குது. ஆனா எனக்கு ஆப்ரேஷன் ல கட்டி ரிமூவ் பண்ணிட்டாங்க. கட்டி இருந்தது ரைட் சைட் இப்போ அதே போல லெப்ட் சைட் வலிக்குது. எனக்கு கட்டி இருந்தப்ப எப்படி வலிச்சதோ அதே போல வலிக்குது. ஏற்கனவே ஒருமுறை வலிச்சப்ப டாக்டர் ஓவுலேஷன் பெயின்னு சொன்னாங்க. நேற்று டாக்டர் கிட்ட போனபோது ஸ்கேன் எழுதி கொடுத்து இருக்காங்க. எனக்கு ரொம்ப வேதனை யா இருக்கு. இப்ப எனக்கு ஒரு ஓவரி தான் இருக்கு. இந்த ஓவரி ல நீர்க்கட்டி வந்திருக்குமா. அதனால் தான் வலிக்குதா. பயமா இருக்கு. மாத்திரை போட்டும் வலி குறையல. உங்களுக்கு யாருக்காவது இப்படி இருந்திருக்கா. ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க.
ஆப்ரேஷன் முடிஞ்சு ஒரு வருஷம்
ஆப்ரேஷன் முடிஞ்சு ஒரு வருஷம் தான் ஆகுது. அதுக்குள்ள இந்த ஓவரி ல கட்டி வர வாய்ப்பிருக்கா. பட் எனக்கு ரெகுலரா ப்ரியட் வரும். என்னால நிம்மதியா இருக்க முடியல. பாளீஸ் யாராவது ரிப்ளை பண்ணுங்க. ப்ரியட் ஆகி நான்காம் நாள் ல இருந்து வலி வந்துச்சு. முன்னாடியும் இதே போலதான் வலிச்சுது. டாக்டர் கருமுட்டை வெளியே வந்தாலும் இப்படி வலி இருக்கும் னு சொல்றாங்க யாராவது தெரிஞ்சா ஆன்சர் பண்ணுங்க ப்ளீஸ்
ஹம்சவேணி
//என்னால நிம்மதியா இருக்க முடியல.// யோசிக்காதீங்க கண்ணா. டென்ஷனா இருந்தீங்கன்னா வலி பெரிதாகத் தெரியும். அமைதியா இருங்க. எது வந்தாலும் முகம் கொடுப்பேன் என்கிற தைரியத்தோட இருங்க. //அதுக்குள்ள இந்த ஓவரி ல கட்டி வர வாய்ப்பிருக்கா.// யோசிக்காமல் இருக்க வேணும். எம்மால் தவிர்க்க முடியாதவற்றைப் பற்றியெல்லாம் முன்கூட்டியே யோசித்துக் குழம்பக் கூடாது.
//கருமுட்டை வெளியே வந்தாலும் இப்படி வலி இருக்கும்// உண்மைதான். அது எப்பொழுதும் இருப்பதில்லை. சிலருக்கு தொடர்ந்து மாதாமாதம் இருக்கும். சிலருக்கு இடைக்கிடையே தெரியும். எனக்கு மாதவிலக்கு சமயம் வலிகள் தொல்லையாக இருந்ததில்லை. திடீரென்று ஒருநாள் வலி பொறுக்க முடியாமல் போக வேலையிலிருந்து கொண்டுபோய் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ;) இரண்டு நாட்கள் வைத்திருந்து ஸ்கான் எல்லாம் எடுத்து ஓவ்யுலேஷன் பெய்ன் தான் என்று வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். ;) அதன் பிறகு சில மாதங்கள், நானே இந்த மாதம் வலது, இது இடது பக்க மாதம் ;D என்று நினைத்துக் கொள்ளும் அளவுக்கு சின்னதாக வலி காட்டிக் கொடுத்தது. பிறகு வலி எதையும் காணோம்.
நீங்களாக இதுதான் என்று முடிவு செய்யக் கூடாது. வலி பொறுக்க முடியாவிட்டால் அல்லது சந்தேகமாக இருந்தால் போய்க் காட்ட வேண்டும். ஒரு முறை காட்டி சிகிச்சை எடுத்தும் சரிவரவில்லை என்றால் திரும்பப் போய்க் கேட்க வேண்டும்.
இப்போ யோசிக்காமல் சூடாக ஏதாவது பருகலாம். ஐஸ் பாக் வைச்சுப் பாருங்க. கொஞ்சம் வேதனை குறைவாக இருக்கும். வெந்நீர்க் குளியலும் உதவும்.
- இமா க்றிஸ்
இமா அம்மா
நன்றி அம்மா நான் நாளைக்கு ஸ்கேன் எடுக்க போகிறேன். டாக்டர் தான் சொன்னாங்க இந்ந பக்கமும் சிஸ்ட் வந்திருக்கும்னு. ஏற்கனவே ரைட் சைட் இருந்தப்ப படாதபாடு பட்டுடேன் அந்த வலியில. இப்போ அதே போல வலிக்கவும் தான் ரொம்ப பயந்துடேன். ஓவுலேஷன் நான்காம் நாளே நடக்குமா அம்மா