வெஜிடபுள் ஓட்ஸ் இட்லி

தேதி: January 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

ஓட்ஸ் - ஒரு கப்
கோதுமை ரவை - ஒரு கப்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி, கோஸ் - ஒரு கப்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிது
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை, எண்ணெய்


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
ரவை, ஓட்ஸ், தயிர் மூன்றையும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய காய்களைச் சேர்த்து வதக்கி எடுத்து, மாவுக் கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
சுவையான வெஜிடபுள் ஓட்ஸ் இட்லி தயார். கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வெஜிடபிள் ஓட்ஸ் இட்லி சூப்பர்.. ஹெல்த்தி ஃபுட்.. டயட்ல‌ இருக்கிறவங்களுக்கு நல்ல‌ ரெசிப்பி. நான் ஓட்ஸ் வெஜிடபிள் சேர்த்து தோசை அல்லது உப்புமா தான் செய்வேன், இனி இட்லி செய்து பார்த்து சொல்றேன். காயெல்லாம் கட் செய்து வைத்து இருப்பது பார்க்க‌ அழகா இருக்கு. நம்ம‌ நாட்டு தேசிய‌ கொடி போல‌ பார்க்க‌ அழகு, நடுவுல‌ சக்கரம் மட்டும் இல்லை..;) வாழ்த்துக்கள் ..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இட்லி அருமையா இருக்குங்க. ட்ரை பண்ணி பாக்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

செய்து பார்க்கிறேன்

ஹெல்தி இட்லி... வாழ்த்துக்கள்........

அன்பு மஞ்சுளா,

ரொம்ப நாளைக்கப்புறம் உங்க குறிப்பு பாக்கறது மிகவும் மகிழ்ச்சி.

ஓட்ஸ் இட்லி அவசியம் ட்ரை பண்றேன். காய்கறிகளுடன் சேர்ந்த அருமையான டயட் உணவு.

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பு பிடித்திருக்கிறது மஞ்சுளா. நிச்சயம் முயற்சிப்பேன்

‍- இமா க்றிஸ்

colorful idly.....super

Edliai parkum podea pasi varudu

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

குறிப்பை வெளியிட்டமைக்கு மிக்க‌ நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வாழ்த்துக்கு நன்றி தோழி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வருகைக்கு மிக்க‌ நன்றி. செய்து பாருங்க‌

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வருகைக்கு மிக்க‌ நன்றி. செய்து பாருங்க‌ தோழி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தோழி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வாழ்த்துக்கு நன்றி. தொடர்ச்சியான துயர‌ சம்ப‌வங்களிலிருந்து வெளியேற‌ கொஞ்சம் தாமதமாகிவிட்டது மேம். செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌ மேம்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

குறிப்பு பிடித்தற்கு நன்றி. முயன்று பாருங்க‌ தோழி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நன்றி தோழி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வாங்க‌ சாப்பிடலாம்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நல்ல குறிப்புக்கு நன்றி... நானும் செய்து பார்கிறேன்.. மஞ்சு

இப்போது தான் பார்த்தேன் காய்கறி அடுக்கி வைத்திருப்பது பார்க்க அழகா இருக்கு. ஆனால் வெங்காயத்திற்கு பதில் கோஸ் வைத்திருந்தால் தேசியக்கொடி போல அழகா இருக்கும்.

குறிப்பு அருமையா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வெகு நாட்களுக்கு பின் உங்க குறிப்பை பார்க்கிறதா தோணுது. ஹெல்தி டேஸ்டி ரெசிபி. அவசியம் ட்ரை பண்ணனும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மஞ்சு ஆரோக்கிய குறிப்பு கொடுத்து இருக்கீங்க, நிச்சயம் முயற்சிப்பேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்ல டயட் ரெசிபி.சூப்பர்

Be simple be sample

சூப்பர் இட்லி. ரொம்ப‌ கலக்கலா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....