தேதி: February 1, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - கால் தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
பெருங்காயப் பவுடர் - ஒரு சிட்டிகை
பூண்டு - ஒரு பல்
உப்பு - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து




குழந்தைகளுக்கு எட்டு முதல் ஒன்பது மாதம் வரை குழைவான சாதத்தில், கலப்பருப்பும் நெய்யும் சேர்த்து, தினமும் ஊட்டலாம் (மதிய உணவுக்கு). குழந்தைகளுக்குச் செய்யும்போது தாளிதம், மிளகாய்ப் பொடி இல்லையென்றாலும் பரவாயில்லை. துவரம்பருப்புடன் சிறிது பாசிப்பருப்பும் சேர்த்து வேகவைக்கலாம்.
அதே போல தினசரி சமையலிலும் இந்தப் பருப்பு செய்து, சாதத்துடன் பிசைந்து, பிறகு சாம்பார், ரசம், மோர்க் குழம்பு என எல்லா வகையுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
குக்கரில் சாதம் வைக்கும்போதே கிண்ணத்தில் பருப்பை வேகவைத்துவிடலாம்.
Comments
சீத்தாம்மா
ஈசி கலப்பருப்பு. சூப்பர்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
seeta
Naan try panranI parkiran romba elitha erukupa
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
seeta
Naan try panranI parkiran romba elitha erukupa
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
seeta
Naan try panranI parkiran romba elitha erukupa
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
ஹாய் சீதாம்மா...
இது நாங்கள் வாரத்தில் இரண்டு முறையாவது செய்து விடுவோம்... முறை சிறிது வேறு...பெயர் பருப்பு கடைசல்.... அதை புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன்... அனுப்பலாம் என்று எண்ணி கம்ப்யூட்டர் திறந்தால் உங்கள் குறிப்பு...மிக்க சந்தோசம்...... வாழ்த்துக்கள்ங்க.....
சீதா மேம்
அருமையான பருப்பு . இள வயது ஞாபகம் வந்துட்டது. நான் +2 படித்து முடிக்கும் வரை மதியம் கண்டிப்பா இது தான்.
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
உமா
அன்பு உமா,
முதல் பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி. என்னுடைய தினசரி சமைய்லில் இடம் பெறுகின்ற சமையல் இது.
அன்புடன்
சீதாலஷ்மி
ஜனாதுல்
அன்பு ஜனாதுல்,
ரொம்ப எளிதாக செய்யலாம். அதே சமயம் குழந்தைகளுக்கு தினமுமே சாப்பாட்டில் சேர்க்கலாம்.
பதிவுக்கு நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
ப்ரியா
அன்பு பிரியா,
நான் தினமுமே செய்து விடுவேன். அதென்னவோ பருப்பு சேர்த்து, அதில் குழம்பு, சாம்பார், ரசம் ஊற்றி, சாப்பிட்டால்தான் ஒரு திருப்தி. அப்படி பருப்பு செய்யலைன்னா, அன்னிக்கு சமையலில், பருப்புத் துவையல், கடலைத் துவையல் இருக்கும்.
பருப்புக் கடைசல் குறிப்பு அனுப்பி வைங்க பிரியா. உங்க குறிப்புப்படியும் செய்து பார்க்க ஆவலாக இருக்கு.
பதிவுக்கு நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
மஞ்சுளா
அன்பு மஞ்சுளா,
பிள்ளைகளுக்கும், பெண்ணுக்கும் ஸகூல், காலேஜ் சாப்பாட்டுக்கு, பருப்பு, குழம்பு கலந்துதான் செய்து கொடுத்து விடுவேன்.
இன்னிக்கும் அவங்க ஃப்ரெண்ட்ஸ் ஃபேஸ்புக்ல ஏதாவ்து பேசறப்ப, இதை குறிப்பிட்டு சொல்றாங்கன்னு கேக்கறப்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
பதிவுக்கு நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
சாரி
சாரி... தவறுதலாக பதிவாகி விட்டது
சாரி
மீண்டும் மன்னிக்கவும்
சீதாலஷ்மி
குறிப்பு அருமையா இருக்கு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
musi
அன்பு musi,
பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதா மேடம்
நேற்று மதிய சமையலில் உங்க கலப்பருப்பும் செய்தேன். ரொம்ப நல்லா இருந்துச்சு...
கலை
சீதா
சுலபமான சுவையான குறிப்பு :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சீதாம்மா
கலப்பருப்பு ரெசிபி சிம்பிளி சூப்பர்...
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கலை
அன்பு கலை,
செய்து பார்த்தீங்களா, மிகவும் சந்தோஷம் உங்களுக்குப் பிடித்திருந்தது பற்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
வனி
அன்பு வனி,
பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி வனி.
அன்புடன்
சீதாலஷ்மி
கனிமொழி
அன்பு கனிமொழி,
பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
சீத்தாம்மா, சுலபமான சுவையான
சீத்தாம்மா,
சுலபமான சுவையான குறிப்பு
உங்க முக நூல் பெயர் சொன்னா நானும் பார்ப்பேன், சொல்லுவீங்களா ?
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
சுபி
அன்பு சுபி,
பாராட்டுக்கு மிகவும் நன்றி.
முகநூலிலும் இதே பெயரில்தான் இருக்கிறேன். நீங்க எந்தப் பெயரில் இருக்கீங்க? அறுசுவைத் தோழிகள் உங்க நட்பு வட்டத்தில் இருக்காங்களா?
அன்புடன்
சீதாலஷ்மி
சீத்தாம்மா,பார்க்கிறேன்
சீத்தாம்மா,
seethalakshmi nu பார்த்தேன் ம்மா கண்டுபிடிக்க முடில,என்ன போட்டோ இருக்கும்மா
இருக்காங்க ம்மா, சில பேர் மட்டும் தான்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
சீதா மேடம்
கலப்பருப்பு நல்லா இருக்குங்க :) உப்பு பருப்புனு சொல்லி இதில தாளிப்பு இல்லாமல் செய்வது எங்கூரு வழக்கமுங்க :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
சீதாம்மா
இது புதுசு எனக்கு.பேரும் வித்தியாசமா இருக்கு
Be simple be sample
கலப்பருப்பு
சீதாம்மா கலப்பருப்பு சூப்பர்,என்னவரின் அம்மா இப்படித் தான் செய்வார்கள். அதற்கு உப்பு பருப்பு என்று சொல்லுவோம். நானும் வாரத்தில் இரண்டு தடவையாவது இந்த பருப்பை செய்துவிடுவேன், என் வீட்டினரின் ஆல் டைம் பேவரிட் பருப்பு இது.. வாழ்த்துக்கள் சீதாம்மா..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....