ப்ரெஷர் குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்து சமைப்பது எப்படி?
ப்ரெஷர் குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்து அரிசி மற்றும் பயிறு வகைகள் வேக வைப்பது எப்படி? தண்ணீர் எவ்வளவு வைக்க வேண்டும்?
By
Malar
ப்ரெஷர் குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்து சமைப்பது எப்படி?
ப்ரெஷர் குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்து அரிசி மற்றும் பயிறு வகைகள் வேக வைப்பது எப்படி? தண்ணீர் எவ்வளவு வைக்க வேண்டும்?
By
Malar
மலர்
குக்கருக்கென்று தனியாக உள்ளே பாத்திரம் இருக்குமே அதில் சமைக்கலாம். இல்லையென்றால் அதற்குள் செல்வது போல உள்ள பாத்திரத்தையும் வைத்து கீழே தண்ணீர் ஊற்றி பாத்திரம் வைக்கனும்.
அந்தத் தண்ணீர் சமைக்கும்பொருளில் போகாமல் அளவாக ஊற்ற வேண்டும்.
ப்ரஷர் குக்கர் சமையல்
அன்பு மலர்,
குக்கரில் அடியில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, வேறு ஒரு பாத்திரத்தில் அரிசியைக் களைந்து, 3 பங்கு தண்ணீர் ஊற்றி வைக்கணும். குக்கரில் உள்ளே வைக்கும் பாத்திரத்துக்கும், குக்கரில் உள் பக்கத்துக்கும் இடைவெளி இருக்கணும். அப்பதான் ப்ரஷர் ஃபார்ம் ஆகி, சாதம் வேகும்.
பயறு வகைகள் = 4 முதல் 8 மணி நேரம் வரை ஊற வைத்து, பாத்திரத்தில் வைத்து, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, வேக வைக்கணும்.
ஒரு பாத்திரம் வைத்து, அதன் மேல் தட்டுக்கள் அல்லது பேசின் மாதிரி பாத்திரங்கள் வைத்து, அதில் கிழங்கு, கூட்டு வகைகள் வேக வைக்கலாம்.
12.5 லிட்டர் குக்கரில் அடியில், முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி, அதன் மேல் சிப்பில் தட்டு, அதன் மேல் இன்னொரு பாத்திரத்தில் பருப்பு, காய், அரைத்த தேங்காய் சேர்த்து வைத்து, கூட்டுக்கு வேக வைக்கலாம். இதன் மேல் ஒரு சின்ன பேசின், அதில் ஒரு கிண்ணத்தில் பருப்பு வேக வைக்கலாம்.
நான் இப்படித்தான் சமைக்கிறேன்.
அன்புடன்
சீதாலஷ்மி
ப்ரஷர் குக்கர்
நன்றி ஷாஹிதா பானு & சீதாம்மா. சாதம் வேக எவ்வளவு நேரம் ஆகும்.