ஹாய்
எனது நீண்ட நாள் சந்தேகம்.நோய்காலங்கள் மட்டுமில்லாமல் அன்றாடமாக பின்வருவனவற்றை எப்படி பயன்படுத்த..மருத்துவகுணங்களையும் உபயோகிக்கும் முறைகளையும் எனக்கு சொல்லுங்களேன்.பிளீஸ்.
இஞ்சி,சுக்கு,மிளகு,சீரகம்,சோம்பு, கடுக்காய்,ஜாதிக்காய்,கண்டந்திப்பிலி, வாவிளங்காய்,கரும்திராட்சை, கருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்ரி, மராத்திமொக்கு, அன்னாசி பூ, பாதாம் பிசின், சித்தரத்தை, சாரணவேர், வெள்ளை பூண்டு, வெந்தயம்,...
1.எனது பள்ளிபருவத்தில் எனது முஸ்ஸீம் தோழியின் நாணி (பாட்டி) எப்போதும் கடுக்காய் வாங்கி வர சொல்லுவார்.எதுக்குன்னு கேட்டால் " இளமையாகவும்,பாடையில போகும்வரை என் கை,காலு திடமாவும் இருககும்" நு சொல்லுவார்.எவ்வளவோ கேட்டும் எப்படி சாப்டனும்னு சொல்லவே இல்லை.
2.எனது கர்ப்பகாலத்தில் வாவிளங்காய் போட்ட ஒரு கசாயம் நார்மல் டெலிவரிக்கும்,கடைகளில் கிடைத்த "செளபாக்கிய சுண்டி" தாய்ப்பால் பெருகவும் உதவியது.
3.போன் டிசம்பர் மாதத்தில் "ஜலிலா அக்காவின் வலைபதிவில்" சொன்ன இஞ்சி ரசம் செய்முறையை படித்துகொண்டே குடித்த என் வீட்டு ஆடினரி ரசமே(சுட சுட 1/2 டம்ளர் ஸ்பூனில் எடுத்து) என் தொண்டை புண்ணை பாதியாக குறைத்தது.மீதி மறுநாள் போனது.நான் ஆன்டிபயாடிக் போட நினைத்திருந்தேன்.
இந்த சாரணவேரை பால் கஞ்சியில் சேர்ப்பேன்..வாரம் ஒருமுறை..குறிப்பாக அசைவம் சேர்க்கும் நாளில்..இது மாதிரி நீங்கள் சொல்லுங்கப்பா!
மருத்துவ குணங்கள்
அன்பு ஜெயா,
சாரண வேர் = எங்கே கிடைக்கும், எப்படி எவ்வளவு சேக்கணும்னு சொல்லுங்க. அல்லது அந்த பால் கஞ்சி, செய்முறையோட படம் எடுத்து அனுபபுனீங்கன்னா, ரொம்ப உதவியாக இருக்கும்.
அதே போலத்தான் = வாவிளங்காய் = அப்படின்னா என்ன? அந்தக் கஷாயம் எப்படிச் செய்வது? தெரிந்து கொள்ள ஆசை.
இனி எனக்குத் தெரிந்த ஒரு குறிப்பு =
ஒரு டம்ளர் நல்ல சூடான பாலில் = 2 ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி, 1.5 ஸ்பூன் மிளகுப் பொடி, போட்டு ஆற்றி, வடிகட்டி, குடிச்சால், தொண்டைக்கட்டு, இருமல் எல்லாம் சரியாகிடும்.
எனக்கு ஒரு முறை தொண்டையில் ப்ரச்னை வந்து, கிட்டத்தட்ட 2 மாதம் குரலே வராமல் போய் விட்டது. என் எதிர்காலமே போச்சு என்று நொந்து போய் விட்டேன். அப்ப நான் கஸ்டமர் கேர் கால் சென்டர், ஹெல்ப் டெஸ்க் இதில் முக்கிய பொறுப்பில் இருந்தேன். பேச்சுத்தான் என் வேலையே. குரல் போனதால், எல்லார்கிட்டயும் சைகையில்தான் பேச்சு.
இ என் டி டாக்டரிடம் போனால், அவங்க எக்கச்சக்க டெஸ்ட் எழுதித் தந்தாங்க. நிறைய பேர், இனி குரலே வராதுன்னு சொன்னாங்க. அதிகம் பேசிட்டே இருப்பவங்களுக்கு இந்த மாதிரி தொண்டையில் ஒரு சின்ன நரம்பு விட்டுப் போயிடும், பிரபல பாடகர் ஒருத்தருக்கு அப்படி ஆகி, அவர் வெளி நாட்டில் ஆபரேஷன் செய்துகிட்டார் என்றெல்லாம் தெரிஞ்சுகிட்ட போது, என்ன செய்யறதுன்னு தெரியாமல் திகைச்சுப் போய் இருந்தேன்.
அப்புறம் எங்க குடும்ப டாக்டர், 'தொண்டைக்கு ரெஸ்ட் கொடுங்க, மிதமான ஆன்டி பயாடிக் எடுத்துக்குங்க' என்று சொன்னார்.
கிட்டத்தட்ட 2 மாதம் = இந்த மிளகுப் பால்தான் = பேச்சு வந்து விட்டது.
இப்பவும் வெளியே எங்கும் போனால், தண்ணீர் மாறினால், உடனே தொண்டை மக்கர் செய்யும். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறேன்.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதாம்மா
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
வாவிளங்காய் குறிப்பு ஊரில் இருக்கிறது.லீவுக்கு போய் எடுத்து வருகிறேன்மா.
பால்கஞ்சி எளிது.பச்சரிசி 1 பங்கு தண்ணீர் 3 அல்லது 4 பங்கு, சுக்கு( இல்லை எனில் இஞ்சி) சீரகம்,சாரண வேர், வெந்தயம்,உப்பு,உரித்த பூண்டு சேர்த்து குக்கரில் குழைவாக வேக வைக்கவும்.ஆறியதும் பால் அல்லது தேங்காய் பால் 1/4 பங்கு ஊற்றி குடிக்க வேண்டியதுதான்..இதில் பூண்டு உரிப்பதை தவிர வேலை இல்லை.. எதை சேர்க்கவும் அளவு என்பது இல்லைமா.இப்படி செய்யறது வசதிதானே...வயித்து புண்ணை ஆற்றும்.கர்ப்பிணிகள் சிறிது உளுந்தும்,அதிக சீரகமும் சேர்த்து குடிக்கலாம்..வாந்தி குறையும்.
எல்லாரும் இதை சேருங்க அதை சேருங்கன்னு சொல்றாங்க..எப்டி சேர்க்கனும்ப..என் பொண்ணுககு கஞ்சி மூலமாக வாரமொருமுறை சுக்கு சேர்க்கறேன்..இது மாதிரி வேற் சொல்லுங்க..வியாதி வந்தால்தான் எடுக்கணுமா..சாதாரணமாக எப்டி இன்டேக் பண்ண? சரியா சொல்றேன்னானு தெரியலை..
தோழி ஒருவர் கடுக்காய் பொடியை இரவில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடிக்க சொன்னார்.கடுக்காயை சேர்க்கும் முறையாம் :)
ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "