அரசாணிக்காய் பொரியல்

தேதி: February 4, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

0
No votes yet

 

அரசாணிக்காய்(மஞ்சள் பூசணி) - கால் கிலோ
ஃப்ரெஷ் மொச்சை - 100 கிராம்
சின்ன‌ வெங்காயம் ‍- 5
பச்சை மிள‌காய் ‍- 3
தேங்காய் துருவல் ‍- சிறிதளவு
தாளிக்க:
கடுகு, உளுந்து, கடலை பருப்பு
எண்ணெய், உப்பு ‍- தேவையான‌ அளவு


 

அரசாணிக்காயை தோலுடன் சிறிய‌ சதுரங்களாக‌ நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
மொச்சையை உப்பு சேர்த்து வேக‌ வைத்து நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
பின்பு அரசாணிக்காய் சேர்த்து வதக்கி உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து வதக்கி வேக‌ வைக்கவும்.( நிறைய‌ தண்ணீர் சேர்த்தால் குழைந்து விடும். சிறிது சிறிதாக‌ தண்ணீர் தெளித்து நன்கு வேக‌ விடவும்)
அதன் பின்னர் வேக வைத்த மொச்சையை சேர்த்து நன்கு வதக்கி தேங்காய் துருவல் சேர்க்கவும்.
சுவையான‌ அரசாணிக்காய் மொச்சை பொரியல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ப்ரியா,

தோலுடன் சேர்த்த‌ பூசணி, வேக‌ வைத்த‌ மொச்சை, ஸ்பெஷல் மெனுவாக‌ இருக்கு. பிரமாதம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அரசாணிக்கா பொரியல்ல மொச்சை சேர்த்து பண்ணியதில்லை, முயற்சிக்கிறேன் :)
மேலும் குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் ப்ரியா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்ல‌ ரெசிப்பி..மொச்சை சேர்த்து இதுவரை செய்தது இல்லை,இனி செய்து பார்க்கிறேன்,வாழ்த்துக்கள் பிரியா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கட்டாயம் ெசய்து பார்க்குறன்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அரசாணிக்காய்னு பார்த்ததும் புரியல‌ அப்பறம் படம் பார்த்ததும் தான் புரிந்தது பூசணிக்கூட‌ மொச்சையா செய்தது இல்லை ப்ரியா நிச்சயம் செய்து பார்க்கனும்.

பொரியல் சூப்பரா இருக்கு. மஞ்சள் பூசணிக்கு அரசாணிக்காய்ன்னு ஒரு பெயர் இருக்குறது இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன்

கலை

அரசாணிக்காய்னா நம்ம மஞ்சள்பூசணிதானா? சூப்பர். மொச்சை சேர்த்து பூசணி பொரியல் அருமையா இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் குழுவினருக்கு மிக்க‌ நன்றி...

கருத்து தெரிவித்த‌ அனைவருக்கும் நன்றி...

இங்கே கோவை பக்கம் அரசாணிக்காய் என்று தான் சொல்வார்கள்... மஞ்சள் பூசணி என்றோ பரங்கிக்காய் என்றோ சொல்லி நான் கேள்விபட்டதில்லை....... இதெல்லாம் டிவியில் பார்த்து தான் பெயர் தெரிந்த்து கொண்டேன்............