தாய் பால் தரும் தாய் Black Forest கேக்

தாய் பால் தரும் தாய் Black Forest கேக் WITHOUT EGGசாப்படலாமா?

தாரளமா சாப்பிடலாம்

நன்றி தோழி

தோழி CALIFLOWER. BEANS சப்பாடலாமா? MOTHER FEERING MOTHER

காய்கறிகள் தாராளமா சாப்பிடலாம்.சூடான பதார்த்தங்கள் ,பேக்கரி அயிட்டங்கள் இப்படி சாப்பிட்டால் குழந்தைக்கு அஜீரணம் அல்லது மலம் லூசா கழிக்கும்னு அதை அவாய்ட் பண்ண சொல்லுவாங்க.
காலிஃப்ளவர்,கேரட்,பீன்ஸ்,சொல்லப்போனா பீர்கங்காய்,புடலங்காய்,முருங்கை கீரை,பிரெட்,சுரைக்காய்,சாப்பிடலாம்.தாய்ப்பால் நன்கு சுரக்கும்...
உருளை கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் அளவா எடுக்கனும்,அப்போதுதான்,புரதம்,நார்சத்து போன்ற சத்துகள் கிடைக்கும்.அளவோடு எடுப்பதால் வயிற்று உப்புசம் இருக்காது.பயறு வகைகளும் எடுக்க்லாம்.தினமும்குறைந்தது 4 தம்ளர் பால் குடியுங்க,தயிர் தாளித்து எடுத்துக்கங்க,மோராக சாப்பிட்டாலும் நல்லது.மேலும் ஏதாவது வேணும்னா கேளுங்க....

நான் BABY CENTRE இணைய தளத்தில் படித்தேன். "CALIFLOWER.AND BEANS AND ETC FOOD BABYKU GASS PROBLEM VARUM இருக்கு அதன் சந்தோகம் தோழி. என் குழந்தைக்கு வாய்வு PROBLEM இருக்கு வேற பாவம் 3 மாத குழந்தை அதன் பாத்து பாத்து உண்ணுகிறன்.

தாய்ப்பால் விஷயத்தில் நாம் இன்னமும் நிறைய Out dated practices or believes கடைபிடித்டுக் கொண்டிருக்கிறோம்,குளிர் நாடுகளில் வசிக்கும் தாய்மார்கள் பாலில் தொடங்கி சான்ட்விச் வரை குளிரூட்டப் பட்ட உணவுகளைத்தான் உண்கிறார்கள்

உங்கள் குழந்தைக்கு வாயு பிரச்சனை இருப்பதால் வாயு உண்டாக்கும் உணவுகளை நீங்கள் குறைத்துக் கொள்ளலாம்,ரேணுகா சொன்னது போன்று கீரை மற்றும் தண்ணீர் காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.பருப்பு வகைகளை குறைத்துக் கொள்ளுங்கள்,எதையும் சாப்பிடக் கூடாது என்பதை விட அளவாக சேர்த்து கொள்வது நலம்,ஏனென்றால் சரிவிக்த உணவு உண்பது முக்கியம்.வாயு என்று கருதி புரோட்டீன் சத்தை உட்கொள்ளாமல் இருக்காதீர்கள்.
மேலும் பேக்கரி அயிட்டங்களும் அளவோடு நீங்கள் உண்ணலாம்,ஏனென்றால் அதில் சேர்க்கப் படும் பட்டர்,கிரீம் போன்றவை பாலிலிருந்து தயாரிக்கப் படுகின்றது,ஆனால் எதையும் அளவோடு சேர்த்துக் கொள்வது தான் முக்கியம்.
மேலும் குளிர்ந்த உணவுகளால் சளி பிடிப்பதில்லை,வைரஸினால் தான் சளி உண்டாகிறது.நோய் எதிர்ப்பு சக்தி குறைவுள்ளவர்கள் யாராயிருந்தாலும்,குளிர்ந்த பதார்த்தங்களை உண்ணும்போது அவர்களை எளிதில் வைரஸ் தாக்கி விடுகிறது,அதனால் தான் வீட்டில் ஒருவருக்கு உண்டாகும் சளி எல்லோருக்கும் எளித்ல் பரவி விடும்,அதுதான் தாய்ப் பால் அருந்தும் குழந்தையையும் தாக்கி விடும்.அதனால் தான் தாய்ப் பால் கொடுக்கும் அன்னையர் சரிவிகித உணவு உட்கொள்வது அவசியம்.நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருந்தால் குளிர்ந்த உணவுகள் உண்டாலும் பாதிப்பில்லை.
முடிந்தவரை சாலட் மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்,
கோக்,பெப்சி,ஆல்கஹால் போன்ற பானங்கள் தான் தொடவேக் கூடாது.
ஒரு நாளைக்கு 2 டம்ளர் காபி அல்லது டீ குடிக்கலாம்.
சாக்லேடும் அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய் அரை இஞ்ச் அளவுள்ள இஞ்சி துண்டை நசுக்கி நீரில் அல்லது டீயில் கொதிக்க வைத்து குடித்தால் குழந்தைக்கு வாயுவினால் உண்டாகும் வயிற்று வலி குறையும்.

கவனிக்க :இஞ்சியின் அளவு அதிகமானாலும் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு அதிகமாகும்
குழந்தைகளுக்கு வாயு பிரிவது நல்லது தான்,ஆனால் அதனால் வயிற்று வலிக்கிறதா என்று பாருங்கள்,வாயுவினால் வயிற்று வலி ஏற்ப்பட்டு குழந்தை அழுதால் மருத்துவரிடம் உதவி கோருங்கள்,

மேலும் சில பதிவுகள்