தேதி: February 8, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிக்கன் - அரை கிலோ (சதைப்பகுதி மட்டும்)
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
ஓட்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
அரைக்க:
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு (2 இன்ச் அளவில்)
பூண்டு - 5 பல்
பேப்ரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
கரைக்க:
கார்ன் ஃப்ளார் - ஒரு மேசைக்கரண்டி
மைதா மாவு - ஒரு மேசைக்கரண்டி
கடலை மாவு - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
சிக்கனை பெரிய துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, கத்தியால் கீறிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். கரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தண்ணீர் ஊற்றி தோசை மாவை விட சற்று நீர்க்கக் கரைத்து வைக்கவும்.

சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள விழுது, சோயா சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

ஊறிய சிக்கனை மாவுக்கரைசலில் தோய்த்து எடுக்கவும்.

பிறகு ஓட்ஸில் நன்கு பிரட்டி எடுக்கவும்.

இதேபோல் அனைத்து சிக்கன் துண்டுகளையும் மாவுக்கரைசலில் தோய்த்தெடுத்து, ஓட்ஸில் பிரட்டி எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து சிக்கன் துண்டுகளைப் பொரித்தெடுக்கவும். (அதிகமான தீயில் வைத்தால் ஓட்ஸ் விரைவில் கருகிவிடும். சிக்கனும் உள்ளே வேகாது. அதனால் கவனமாக பொரித்தெடுக்கவும்).

டேஸ்டி சிக்கன் ஃப்ரை ரெடி. சாஸுடன் பரிமாறவும். பார்ப்பதற்கு KFC சிக்கன் போலவே இருக்கும். இது அனைவரையும் கவர்ந்துவிடும்.

Comments
உமா
ஹாய் நல்லா இருகுங இது போல மீன்னும் பன்னலாமா?
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
uma
வித்தியாசமா இருக்கு.குறிப்பு .ஆசைய கூட்டுது.சூப்பர்
Be simple be sample
hi uma
Parkave Romba arumaiya iruku unga chicken recipe.
உமா..
சிக்கன் ஃப்ரை சூப்பரோ சூப்பர். இன்னைக்கு செய்து எங்க வீடு ஆளுகள அசத்திட்டம்ல..:) எல்லொருக்கும் ரொம்ப பிடிச்சது, என் பொண்ணு எலும்மு இலாத சிக்கன் தான் சாப்பிடுவாள். அதுவும் அவளுக்கு KFC சிக்கன் ரொம்ப விருப்பம், நீங்க சொன்னதுல கொஞ்சம் கூட மாத்தாம செய்தேன்.. ஆஹா ஆச்சிரியம்.. ரியல் KFC சிக்கன் தான், சுவையிலும் அப்படியே, போட்டோ எடுத்துருக்கேன், முகப்புத்தகத்துல போடறேன் உமா.. நல்ல் சூபரான குறிப்புக்கு மிக்க நன்றி உமா..:)மேன் மேலும் குறிப்புகள் கொடுக்க எனது வாழ்த்துக்கள்.
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
அட்மின்
குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி...
ஜனதுல்
நன்றி தோழி. நான் சிக்கனில் மட்டும்தான் செய்வேன். மீன் எப்டி இருக்கும்னு தெரியல. நீங்க ட்ரை பண்ணிட்டு நல்லா இருந்தா சொல்லுங்க. அதையும் செய்துருவோம்.
ரேவதி.
பதிவுக்கு நன்றி ரேவ்ஸ்.
நித்யா
நன்றி நித்யா.
சுமி
ரொம்ப நன்றி சுமி. செய்து பார்த்து பதிவும் போட்டுட்டீங்க. FBல படம் பார்த்தேன். சூப்பர்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
உமா
உமா சிக்கன் குறிப்பு, மிக அருமை :) வாழ்த்துக்கள் :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
சிக்கன் ஃப்ரை
இந்த சிக்கன் ஃப்ரை பார்க்கவே சூப்பாரா கருக்கு மொறுக்குனு இருக்கும்போல தெரியுது... வாழ்த்துக்கள்...
எனக்கு சோயா அலர்ஜி, ஸோ இதுல சோயா சாஸ் சேர்க்காமல் செய்யலாமா? அப்பறம் பேரிக்காய் பவுடர் என்றால் எப்படி செய்வது?
ப்ளீஸ் சொல்லுங்க...
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
அருட்செல்வி
வாழ்த்துக்கு நன்றி செல்வி.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
பிரேமா
நன்றி பிரேமா. சோயாசாஸ் சேர்க்காமல் செய்யலாம். அது பேரிக்காய் பவுடர் இல்ல. பேப்ரிக்கா பவுடர். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்ல இருக்கும். அதுவும் ஒரு வகை மிளகாய்பொடிதான்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
உமா
சூப்பர் ஃப்ரை... இதுலையும் சோயாசாஸா??? ;) விட மாட்டங்கறீங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
பதிவுக்கு நன்றி வனி. சோயாசாஸ் இனி குறைச்சிடுறேன்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
உமா
எப்பவும் போல அருமையான குறிப்பு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
பேப்ரிக்கா பவுடர்
பேப்ரிக்கா பவுடர் சென்னையில் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள்..
அல்லது
எந்த கம்பனி தயாரிக்கும் பொருட்களில் கிடைக்கும் என்று சொல்லவும் PLS ......
அல்லது ....
பேப்ரிக்கா பவுடர்க்கு பதிலாக வேறு எதாவது பவுடர் சேர்க்கலாமா என்று சொல்லவும்
wow...
ரொம்ப நல்லா இருக்கு பாக்கவே ... வர சன்டெ இந்த ரெசிபிய try பன்னுரென் பா... Thanks Uma.
Warm Regards,