ஜெர்மனி தோழிகள் உதவவும்.

நாங்கள் ஜெர்மனி யில் வசிக்கிறோம்.எனக்கு வேலைக்கு செல்ல மிகவும் ஆசை.இங்கு யாரும் வேலைக்கு போகும் விவரம் பற்றி தெரிந்தால் சொல்லவும்.

ஹாய் பிரியங்கா. நீங்க‌ முதலில் வேலைக்கு போவதானால் ஜேர்மன் மொழி ஓரளவுக்கேனும் பேசவும் புரிந்து கொள்ளவும் தெரிந்திருக்கனும்.பதிந்து செய்யும் வேலைதான் நல்லது. அதற்கு வேலைக்கான‌ அனுமதி வேணும். நீங்க‌ வேர்க் பர்மிட் ல் இங்கு வந்திருந்தால் வேலை சுலபம்.அல்லது ஸ்பான்ஸரில் வந்திருந்தால், கண்டிப்பா வேர்க் பர்மிட் அவசியம். உங்கள் விபரங்கள் தெரியாததால் அடிப்படைத் தகவலை கொடுத்திருக்கிறேன்.
வேலை தேடுவதானால் இந்த‌ சைட்டில்போய் பாருங்க‌. www.arbeitsagentur.de. இது ஜேர்மன் லாங்குவேஜில் இருந்தால் ஆங்கிலத்தில் ட்ரான்ஸ்லேட் செய்துபாருங்க‌.
(Der Arbeitsamt---the employment office)

ஹாய் priyanka g.s

நீங்கள் ஜேர்மனியில் எந்த நகரத்தில் இருக்கின்றீர்கள்?

அன்புடன்

துஷ்யந்தி கலைவேந்தன் (ஜேர்மனி)

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மிகவும் நன்றி.நான் வொர்க் பெர்மிட் விசா ல தான் இருக்கிரேன்.ஆனால் ஜெர்மன் மொழி தெரியாது.நீங்கள் ஜெர்மனி யில் எங்கு வசிக்கிரீர்கள் என்று விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

உங்களுக்கு வேர்க் பெர்மிட் இருந்தால், உங்கள் இடத்திலோ அல்லது அருகில் உள்ள‌ employment office ல் பதியுங்கள்.நான் Nordrhein-Westfalen மாநிலத்தில் இருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்