காஃபி புட்டிங்

தேதி: February 14, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

திருமதி. தளிகா அவர்களின் காஃபி புட்டிங் குறிப்பினை பார்த்து சில மாறுதல்களுடன் திருமதி. சுமிபாபு அவர்கள் முயற்சித்தது.

 

இன்ஸ்டன்ட் காஃபித்தூள் - ஒரு தேக்கரண்டி
முட்டை - 4
பால் பவுடர் - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
உப்பு - ஒரு பின்ச
(அல்லது)
இன்ஸ்டண்ட் காஃபித்தூள் - ஒரு தேக்கரண்டி
முட்டை - 4
கன்டென்ஸ்ட் மில்க் - அரை கப்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்


 

தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக ப்லென்டர் அல்லது மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
அடித்தக் கலவையை ஒரு மூடி வைத்த ஸ்டீல் பாக்ஸில் ஊற்றவும்.
பாக்ஸை குக்கரினுள் வைத்து 4 அல்லது 5 விசில் வைத்து இறக்கவும்.
விசில் அடங்கியதும் கலவை வைத்தப் பாத்திரத்தை எடுக்கவும். கத்தி அல்லது ஃபோர்க் கொண்டு குத்திப் பார்த்துக் கலவை வெந்து விட்டதை உறுதி செய்யவும்.
ஒரு தட்டில் ஸ்டீல் பாக்ஸை மெதுவாக கவிழ்க்கவும். தேவையான அளவுகளில் துண்டுகள் போடவும்.
இப்போது சுவையான காஃபி புட்டிங் தயார்.

கன்டென்ஸ்ட் மில்கிற்கு சேர்க்கும் போது இனிப்புப் பார்த்து சேர்க்கவும் இல்லையென்றால் கூடிவிடும். இனிப்பு குறைவாக விரும்புவோர் சர்க்கரை அரை கப் சேர்க்கலாம் நான் ஆரோமா இன்ஸ்டண்ட் காஃபிதூள் பயன்படுத்தியதால் சர்க்கரை கூடுதலாக சேர்த்துள்ளேன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை டீமிற்கு ஒரு சல்யூட்..:)
திருமதி தளிகா அவர்களுக்கு எனது நன்றிகள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அன்பு சுமி,

குக்கரில் ஈசியாக செய்யறதுக்கு சொல்லித் தந்திருக்கீங்க, நன்றிகள், பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

நல்லா பன்னிஇருகீங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

நல்லா இருக்கு. நான் எப்போது விஜி சொன்ன முறையில் தான் புட்டிங் செய்வது, அவங்க விசில் வைக்க மாட்டாங்க. புதுசா இருக்கு இந்த முறை. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புட்டிங் அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எச்சில் ஊறுது .கட்டாயம் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கணூமா சுமி.

Be simple be sample

காஃபி புட்டிங் சூப்பர் அதுவும் குக்கர் செய்ய மிகவும் எளிமையாக செய்யலாம். தாங் யூ சுமி.

சுமி அக்கா,
காஃபி புட்டிங் ம்ம் சூப்பர்,

நாங்க‌ வெஜிடேரியன் அக்கா, அதனால‌ வீட்ல‌ முட்டைலாம் யூஸ் பண்ணமாட்டோம். கேக் மட்டும் நல்லா சாப்பிடுவேன். அதனால‌ நீங்க‌ செய்ததை ஒரு பார்சல் அனுப்புங்க‌. இதென்ன‌ முட்டை இந்த‌ கலர்ல‌ இருக்கு அக்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுமி இவ்வளவு ஈஸியா புட்டிங்கா. குறிப்பு கொடுத்த தளிகாவிற்கும் செய்து காண்பித்த சுபிக்கும் நன்றி.
இன்னைக்கே செய்துட்டு சொல்றேன் சுமி

பார்க்க அழகா ரொம்ப ஈசியா இருக்கு. செய்து பார்க்கிறேன். குக்கரின் அடியில் தண்ணீர் ஊற்ற வேண்டாமா?

புட்டிங் சூப்பர் சுமி. அழகா ப்ரசண்ட் பண்ணியிருகீங்க. விருப்பபட்டியல்ல சேர்த்துருக்கேன். செய்துட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப நல்லா இருக்குங்க...... செய்து பாக்கிறேன்....

முதல் ஊக்கப் பதிவிற்க்கு எனது மனமார்ந்த‌ நன்றிகள் சீதாம்மா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் பதிவிற்கு எனது நன்றிகள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நானும் குக்கரில் விசில் வைத்து செய்ய‌ மாட்டேன் வனி, அவன்ல தான் செய்வேன். ஆனா தளிகா குறிப்பில் சொல்லி இருந்ததனால் ட்ரை செய்து பார்க்கலான்னு செய்தேன், முதல்அட்டம்ட்லேயே நன்றாக‌ வந்துவிட்டது.. வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள் வனி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்ப‌ நன்றி முசி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் பதிவுக்கு எனது நன்றிகள் பாரதி..எல்லோர்கிட்டேயும் அவன் இருக்காதுல்ல‌, ஆனா குக்கர் கண்டிப்பாக‌ இருக்கும், அதனால் இந்த‌ குறிப்பு செய்வதும் சுலபம், செய்ய‌ ஆகும் நேரமும் ரொம்ப‌ குறைவுதான், மீன்டும் என் நன்றிகள் பாரதி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//எச்சில் ஊறுது// ..;) ஊறுன‌ எச்சிலோட‌ இங்க‌ இருக்கும் புட்டிங் ஒரு பிஸையும் வாயில‌ போடுங்க‌ ரேவ்ஸ்.
//கட்டாயம் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கணூமா சுமி./ இல்லை ரேவ்ஸ். அது தான் தேவையான‌ பொருட்கள் இரண்டு லிஸ்ட் கொடுத்து இருக்கேனே ரேவ். பால் பவுடர், சர்க்கரை அல்லது கண்டஸ்டு மில்க், கொஞ்சம் சர்க்கரைன்னு போட்டு இருக்கேன் பாருங்க‌ ரேவ்ஸ்..:)
உங்கள் பதிவுக்கு எனது நன்றிகள் ரேவ்ஸ்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உன் பாராட்ட்டுக்கு எனது நன்றிகள் சுபிம்மா..:)
//
நாங்க‌ வெஜிடேரியன் அக்கா, அதனால‌ வீட்ல‌ முட்டைலாம் யூஸ் பண்ணமாட்டோம். கேக் மட்டும் நல்லா சாப்பிடுவேன்.// கேக்ல‌ சேர்த்தும் முட்டை வெஜிட்டேரியனா சுபி..;)
//அதனால‌ நீங்க‌ செய்ததை ஒரு பார்சல் அனுப்புங்க‌// அனுப்பியாச்சு சுபி..

//இதென்ன‌ முட்டை இந்த‌ கலர்ல‌ இருக்கு அக்கா.// இந்த‌ நாட்டுல‌ முட்டை இந்த‌ கலர்ல‌ தான் கிடைக்கும் சுபி, எப்பவாவது வெள்ளைகலர்ல‌ கிடைக்கும்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஈசியான‌ குறிபு அப்படிங்கிறதுனால‌ தானே நான் விளக்கபடத்தோட‌ கொடுத்து இருக்கேன் உமா...;) உங்கள் பாராட்டுக்கு எனது நன்றிகள் உமா..
உங்க‌ கையில‌ புட்டிங் எப்ப‌டி வந்து இருக்குன்னு பார்க்க‌ நான் வெயிட்டிங் உமா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பார்க்க‌ மட்டும் இல்லைங்க‌ சாப்பிடவும் காபி மணத்தோட‌ சூப்பரா இருக்கும், ட்ரை செய்து பாருங்க‌, செய்யறதும் சுலபம்.
// குக்கரின் அடியில் தண்ணீர் ஊற்ற வேண்டாமா?// கண்டிப்பாக‌ ஊற்றனும்ங்க‌.. ஆனா உள்ள‌ வைக்கும் பாத்திரத்துக்கு தகுந்தாற்போல‌ தண்ணீர் ஊற்றுங்க‌..
உங்கள் பதிவுக்கு எனது நன்றிகள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்க‌ பாராட்டுக்கு எனது நன்றிகள் உமா..
//அழகா ப்ரசண்ட் பண்ணியிருகீங்க// மெய்யாலுமா சொல்றீங்க‌...:)
செய்துட்டு சொல்லுங்க‌ உமா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் பதிவுக்கு எனது நன்றிகள் பிரியா.. கட்டாயம் செய்துட்டு சொல்லுங்க‌..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி சூப்பரா இருக்கு.எத்தனை நாள் வைச்சுக்கலாம் சுமி.பிரண்டேஷன் சிம்ப்ளி சூப்பரா இருக்கு.ஈஸியான இன்னும் நிறைய குறிப்பு கொடுக்க என் வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

சுமி குறிப்பு அருமை :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்க‌ பாராட்டுக்கும் பதிவுக்கும் நன்றி மீனா. இதை fridgeல 3 அல்லது 4 நாள் தான் மீனா ஸ்டோர் செய்து வைக்கலாம். ஆனா ஸ்டோர் செய்யறதுக்கு முன்னாடியே காலி ஆகிடும்..;)மீண்டும் என் நன்றிகள் மீனா...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் பாராட்டுக்கு எனது நன்றி அருள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

nice.kandipa seithu pathutu solren akka.Thanks for ur dish

hi cooker la vaitha steel box ku mudi potu vaikanuma.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.