பட்டி - 95 "விருந்துகளில் விரும்பத்தக்கது எது? பந்தி முறையா?பஃபே முறையா?"

திருமணம் முடித்த கைய்யோடு நடுவர் பட்டி துவங்கியிருக்கார்.அதுதான் இந்த தலைப்பு,தலைப்பு கொடுத்த தோழி ஹர்ஷாவிற்கு நன்றிகள்.
விருந்துக்கும் விருந்து பற்றி பேசவும் இருதரப்பு அணிகளையும் அழைக்கிறேன்(பத்திரிக்கைல்லாம் வைக்கலைன்னு கோச்சுக்கப்புடாது)அனைவரும் வந்து கலந்துக்கனும்.

பட்டிமன்றம் - 95
தலைப்பு - "விருந்துகளில் விரும்பத்தக்கது எது?பந்தி முறையா?பஃபே முறையா?"

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

என் இனிய அறுசுவை தோழர்,தோழிகளே பட்டி இனிதே துவங்கியாச்சு. தலைப்பு பார்த்து அணிபிரித்து தயாரா இருங்க வாதங்களைத்துவங்கிட.

அன்பு நடுவரே... வணக்கம் வணக்கம் :) வாதாட நல்ல தலைப்பை தந்த ஹர்ஷாவிற்கும், அதை தேர்வு செய்த நடுவர் ரேணுவுக்கும் வாழ்த்துக்கள்.

சந்தேகமே இல்லைங்க... விரும்பத்தக்கது பஃபே தானுங்க. ஏன் எதுக்குன்னு நிறைய காரணம் அடுக்கனும்ங்க... வந்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் நடுவரே..

விரும்பத்தக்கதுபந்திமுறைதாங்க...

அணிக்கு சீட் பிடிக்கவே இந்த பதிவு

விலாவரியா சொல்ல பிறகு வர்றேன் நடுவரே

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இப்போ சமீபத்தில் ஒரு கல்யாண விருந்துங்க. அங்க போய் உட்கார்ந்த உடனே வருசையா லைன்கட்டி வந்தாங்க பரிமாற. எனக்கு என்ன வேண்டும் வேண்டாம்னு யார் கேட்டா?? உப்பில் துவங்கி மோர் வரை, இலையில் கொண்டு வந்து கொட்டிகிட்டே இருந்தாங்க. என்னம்மா எல்லாம் வெச்சிருக்காங்க, நீங்க மிஸ் பண்ணகூடாதுன்னு, இதை போய் குறை சொல்றியேன்னு நீங்க கேட்கலாம். ஆனா பாருங்க... அன்னைக்கு அவங்க வெச்சதில் நான் சாப்பிட்டு பிடிச்ச ஒரே வகை வெஜிடபிள் பிரியாணி தான். அது ஒரு சின்ன கரண்டி வெச்சுட்டு போனவங்க அடுத்தவாட்டி அதை வேணுமான்னு கூட கேட்கலங்க. எனக்கு ஒரே சோகமா போச்சு. மிச்சம் இருக்குறது எதுவும் பிடிக்கவும் இல்லை. அதனால் அந்த கொஞ்சம் பிரியாணி, இருந்த கொஞ்சமே கொஞ்சம் பாயாசம் (அது கூட இன்னும் வேணும்னான்னு கேட்கவே இல்லயாக்கும்)... அதை மட்டும் வயிற்றினுள் தள்ளி மிச்சத்தை இலையினுள் தள்ளி மூடிட்டு வந்தேனுங்க.

இந்த கதை ஏன் சொல்றேன்னா... எனக்கு எது வேணுமோ அதை வைக்கல. பிடிக்காததை வெச்சு மொத்தம் வீனா குப்பைக்கு போயிருக்கும். ஏன் இந்த வீன் செலவு? அதை விட அவங்கபாட்டுக்கு பஃபே வெச்சுட்டு போயிருந்தா எனக்கு பிடிச்ச பிரியாணி மட்டுமே சாப்பிட்டு வயிறு நிறைந்த திருப்தியோட நானும் வந்திருப்பேன், மிச்ச வகை எல்லாம் வீணாகாம அவங்களுக்கும் புண்ணியம் வந்திருக்கும் (வீண் பண்ண பாவம் எனக்கும் வந்திருக்காது).

பஃபேன்னு வைங்க நடுவரே... எண்ணெய் பலகாரம் வேண்டாமா, ஒதுக்கிடலாம், அசைவம் வேண்டாமா ஒதுக்கிடலாம், இரவில் சாதம் பிடிக்காதா ஒதுக்கிடலாம்... நம்மை கம்பல் பண்ணி தட்டில் வெச்சு பிடிக்காததை சாப்பிட்டு கஷ்டப்படவும் வேண்டாம், வெச்சதை வீணாக்கி வெச்சவங்க மனசை காயப்படுத்தவும் வேண்டாம். வந்தவங்க அவங்களுக்கு பிடிச்சதை வியிறு நிறைய சாப்பிட்டாங்கன்னு திருப்தியா இருக்கும்.

இன்னொன்னு... பொண்ணா இருந்துகிட்டு விருந்துக்கு போய் அங்க நிறைய வெச்சு சாப்பிட சங்கடமாவும் இருக்கும் பாருங்க. என்னடா நிறைய சாப்பிடுறோம்னு நினைப்பாங்களோன்னு??? அவங்களே வெச்சா தானே இந்த தொல்லை? நாமே சாப்பிட்டா நம்ம எம்புட்டு சாப்பிட்டோம்னு கண்டுக்க ஆளில்லை, இஷ்டப்படி சாப்பிடலாமே. ;) என்ன நான் சொல்றது நடுவரே? நம்ம வீட்டில் எப்பவும் பஃபே தானுங்க... வந்தா சங்கடம் இல்லாம நிரம்ப சாப்பிடலாம். வரீங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வனி விருந்துக்கு முதல் ஆளா வந்துட்டீங்க,பஃபே முறைதான்னு அணியையும் செலக்ட் பண்ணிட்டீங்க நல்லது....வாதங்களுடன் வாங்க..

பந்திக்கு முந்தி இலை பிடுச்சு உக்காந்தாச்சு,வணக்கமுங்க நாந்தான் நடுவரு உங்க பக்கத்துல துண்டுபோட்டு வையுங்க நானும் ஓடியாந்துடுறேன்...சட்டு புட்டுன்னு சாப்புட்டு வாதங்களோட வாங்க இளா.

// பஃபேன்னு வைங்க நடுவரே... எண்ணெய் பலகாரம் வேண்டாமா, ஒதுக்கிடலாம், அசைவம் வேண்டாமா ஒதுக்கிடலாம், இரவில் சாதம் பிடிக்காதா ஒதுக்கிடலாம்...// இதுவும் நல்லாதான் இருக்கு,பிடிச்சதை கட்டுகட்டுன்னு கட்டலாமே....:-)
//என்னடா நிறைய சாப்பிடுறோம்னு நினைப்பாங்களோன்னு??? அவங்களே வெச்சா தானே இந்த தொல்லை? நாமே சாப்பிட்டா நம்ம எம்புட்டு சாப்பிட்டோம்னு கண்டுக்க ஆளில்லை, இஷ்டப்படி சாப்பிடலாமே. ;) என்ன நான் சொல்றது நடுவரே? நம்ம வீட்டில் எப்பவும் பஃபே தானுங்க... வந்தா சங்கடம் இல்லாம நிரம்ப சாப்பிடலாம். வரீங்களா?//
ஆமாம்பா அடிக்கடி பக்கட்டும் கையுமா நம்ம இலைக்கே வந்தா சங்கடம்தான்.
நீங்க கூப்பிட்டு வரமாட்டேன்னு சொல்வேனா?உங்க ஃபுல்காவும்,பெப்பர் சிக்கனும்,குக்கூ நெஸ்ட்டும் கண்ணுக்குள்ளயேவுல்ல இருக்கு....வரேன் வரேன்....

நடுவர் ரேனுகா அவர்கலுக்கு வனக்கம்.எனக்கும் பஃபே முரைதான் சரினு தோனுது.ஏன்னா வனி அக்கா சொல்வது போல் நமக்கு எது தேவையோ அதை மட்டும் தேவையானளவு எடுத்து சாப்பிடலாம்.பரிமாரும் போது இலையில் வேஸ்ட் ஆகும் பொருட்களை ஏழை(உனவு இல்லாமல் இருக்கும்) மக்கலுக்கு கொடுத்தால் அவர்கலுக்கு பசி தீரும்.ஆதனால பஃபே தான் சரி.

நீங்களும் பஃபே தானா.....ஓகே ஓகே....பட்டிக்கு ஆர்வமாக கலந்துகொண்ட உங்களை அன்போடு வரவேற்கிறேன்....மேலும் பல வாதங்களோடு வாங்க.....

நான் பஃபே முறையை ஆதரிக்கிறேன்.
இந்த‌ முறையில் இலையில் வீணாவது போல‌ வீணாகாது
தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ளாலாம்,
ஜாலியா சாப்பிட்டது போன்று உணர்வு தோன்றும்.
நல்லா அரட்டையடித்தபடியே சாப்பிடலாம்
எனக்கு இதுவே பிடிக்கும்

மேலும் சில பதிவுகள்