முட்டை குருமா

தேதி: November 18, 2006

பரிமாறும் அளவு: 6நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை 6
வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
தேங்காய் - 1
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
பூண்டு - 5 பல்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலம்,பட்டை - தலா 2


 

ஒரு வெங்காயத்தை நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
மீதி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மீதியை கீறி வைக்கவும்.
தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
கசகசா,பூண்டு,சோம்பு,முந்திரிபருப்பு இவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அதில் முட்டையை ஊற்றவும்.
இதை இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்துக் கொள்ளவும்.
வெந்த முட்டையை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பட்டை போடவும்.
பின் வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாய்தூள்,கறிவேப்பிலை போடவும்
பின் அரைத்த மசாலா சேர்த்து வாசனை வரும் வரை கிளறவும்.
தக்காளி,பச்சை மிளகாய் சேர்க்கவும்.
இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போக கொதித்ததும் முட்டைதுண்டுகளை போட்டு கொதிக்கவிடவும்.
தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கி சூடாக இடியாப்பத்துடன் பறிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்