தோசை வித் ரெட் சட்னி

தேதி: February 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கோதுமை மாவு - அரை கிலோ
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - ஒன்று
வரமிளகாய் - 2
கடுகு , சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
சட்னிக்கு:
பெரிய வெங்காயம் - 2
வரமிளகாய் - 4
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு


 

தோசைக்கு கொடுத்துள்ள தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
தோசைக்கான வெங்காயங்களைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதக்கியவற்றை கோதுமை மாவுடன் சேர்த்து உப்பு போட்டு, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
சட்னிக்கு தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வரமிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து அரைக்கவும்.
அதனுடன் சட்னிக்கு கொடுத்துள்ள வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சட்னியில் சேர்க்கவும். (சட்னிக்கு வெங்காயத்தை வதக்க வேண்டாம். பச்சையாகவே அரைக்கலாம்)
தோசைக் கல்லை சூடாக்கி கரைத்து வைத்துள்ள கோதுமை மாவை தோசைகளாக வார்த்தெடுக்கவும். அரைத்து வைத்துள்ள ரெட் சட்னியுடன் கோதுமை தோசையைப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கோதுமை மாவுடன் அரிசி மாவு சேர்க்காமல் செய்தால் தோசை ஒட்டிக்கொள்ளதா?

IDUVUM KANDANDU POGUM

no ottikollathu

but dosai konjam valavalapaga erukum

கோதுமை தோசை சூப்பர்.

அன்பு மஞ்சுளா,

கோதுமை தோசைக்கு கரெக்டான காம்பினேஷனோட கொடுத்திருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

மஞ்சு தோசையும் சட்னியும் மிகவும் சுவையாக‌ இருந்தது :) இப்பொழுதுதான் சாப்பிட்டு முடித்தோம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தோசை & சட்னி சூப்பர் நானும் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஹாய் மஞ்சு மேடம், ரெட் சட்னி அரைச்சு தோசையுடன் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டாச்சு இன்னும் அந்த டேஸ்ட் அப்படியே இருக்கு நாக்குல, தோசைக்கு மாவு இல்லாததுனால இன்னொரு நாள் செய்துட்டு சொல்றேன் மேடம்.

நன்றி குறிப்பை வெளியிட்டமைக்கு

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஒட்டாது. முயற்சி செய்து பாருங்க‌

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

உங்கள் வாழ்த்திற்கு நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மிக்க‌ நன்றி. வீட்டில் எல்லோருக்கும் பிடித்ததா?

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மிக்க‌ நன்றி. செய்து பாருங்க‌

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மிக்க‌ நன்றி. தோசையும் முயற்சி பண்ணி பாருங்க‌

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

தோசையும் சூப்பர்.. சட்னி அதை விட‌ டபிள் சூப்பர். ஈசி அன்ட் டேஷ்டி குறிப்புக்கு எனது வாழ்த்துக்கள் மஞ்சுளா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இன்றைக்கு தோசை செய்து சாப்பிட்டாச்சு...சுடும் போதெ நல்ல வாசனை...தக்காளி சட்னியுடன் அருமையா இருந்தது..சுவையான குறிப்புக்கு நன்றி...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

இன்னைக்கு காலையில் இந்த தோசை தான் செய்தேன், சட்னி தான் இதை செய்யல. தோசை ரொம்ப சூப்பரா இருந்துதுங்க. போனமுறை புலாவு போல மிஸ் பண்ணாம் இம்முறை படமும் எடுத்து வெச்சிருக்கேன், சீக்கிரம் காட்டுறேன் மஞ்சு :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி படம் காட்டோ காட்டென்று காட்டியதால் ஏற்ப்பட்ட பாதிப்பில் நேற்று இரவு டிபனுக்கு இந்த தோசை செய்தாயிற்று,ரொம்ப ருசியும் மணமுமாக இருந்தது.
சுவையான குறிப்பிற்க்கு நன்றி மஞ்சு